அமிதாப்பச்சனை தமிழ் சினிமாவுக்கு அழைக்கும் சூர்யா-கேவி.ஆனந்த்

Amitabh Bachchan likely to join with Suriya and KV Anand projectசூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் அடுத்த வாரம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இதில் சாய் பல்லவி, ரகுல்பிரித்தி சிங் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவின் 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கிறாராம்.

இவர் ஏற்கெனவே சூர்யா நடித்த ‘அயன், மாற்றான்’ படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இதுவரை நேரடி தமிழ் படங்களில் அமிதாப்பச்சன் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Amitabh Bachchan likely to join with Suriya and KV Anand project

Overall Rating : Not available

Latest Post