எஸ்.ஜே.சூர்யா படம் மூலம் அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகம்; டைட்டிலை வெளியிட்டார் ரஜினி

எஸ்.ஜே.சூர்யா படம் மூலம் அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகம்; டைட்டிலை வெளியிட்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amitabh Bachan and SJ Suriya teams up for Uyarndha Manithanபிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதன் முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார்.

இதில் மற்றொரு நாயகனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் தயாராகிறது.

இப்படம் மூலம் எஸ்ஜே. சூர்யா இந்திக்கு செல்கிறார்.

இப்படத்தை தமிழ்வாணன் இயக்க, திருச்செந்தூர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு உயர்ந்த மனிதன் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

மேலும் அமிதாப் உடன் சூர்யா இருக்கும் படத்தை பார்த்துவிட்டு உங்கள் இடத்தில் நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார்.

பல வருடங்களுக்கு முன் ஏவிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் சிவாஜி நடித்த படத்தின் தலைப்பும் உயர்ந்த மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.

Amitabh Bachan and SJ Suriya teams up for Uyarndha Manithan

uyarndha manithan

 

கமல்-விக்ரம்-அக்‌ஷராஹாசன் இணையும் படம் இன்று தொடங்கியது

கமல்-விக்ரம்-அக்‌ஷராஹாசன் இணையும் படம் இன்று தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and akshara haasanராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.

ராஜேஷ் எம் செல்வா இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் கமலின் 2வது மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் இன்று முதல் துவங்கியது.

இது ராஜ்கமல் நிறுவனத்தின் 45வது தயாரிப்பாகும்.

கடவுளை கலாய்க்கும் *டைம் இல்ல* படத்தில் சிம்பு பாட்டு

கடவுளை கலாய்க்கும் *டைம் இல்ல* படத்தில் சிம்பு பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuநடிகர் கமல் ஒரு நாத்திகவாதி. அவர் வழியில் சொன்னால் அவர் ஒரு பகுத்தறிவாளர்.

அவரின் ரசிகர் ஒருவர் *டைம் இல்ல* படத்தில் நடித்து வருகிறார்.

அதில் ஒரு காட்சியில் அம்மன் சிலையை கிண்டல் செய்கிறார்.

எனவே நீ… 30 நாட்களில் உயிர் இழந்து விடுவாய் என்று அசரீரி குரல் ஒலிக்கிறது.

எனவே ஜாலியாக வாழ நினைக்கிறாலாம் அந்த ஹீரோ.

30 நாட்களில் 15 நாட்களை ஜாலியாக கழிக்கிறார் ஹீரோ.

அப்போது நாயகன் பாடுவது போன்ற ஒரு பாடல் உள்ளதாம்.

அந்த பாடலை தான் நடிகர் சிம்பு பாடவிருக்கிறாராம்.

*ஜாங்கோ* படத்தில் சதீஷுடன் இணையும் டப்மேஷ் மிருணாளினி

*ஜாங்கோ* படத்தில் சதீஷுடன் இணையும் டப்மேஷ் மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jangoடப் மேஷ் வீடியோக்களின் மூலம் இளைஞர்களிடையே பிரபலமானவர் ‘மிருணாளினி’.

எனவே இவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

அப்படம் வெளியாவதற்குள் ‘மிருணாளினி’ திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

“ஜாங்கோ” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சதீஷ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், R.J. ரமேஷ், ஹரிஷ் பெராடி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியிருக்கிறது

ஜல்லிக்கட்டு படத்தை தயாரிக்கும் அனுராக் காஷ்யப்..!

ஜல்லிக்கட்டு படத்தை தயாரிக்கும் அனுராக் காஷ்யப்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jalli kattuமாபெரும் மக்கள் எழுச்சியாக, அமைதி போராட்டமாக உருவெடுத்து வெற்றிவாகை சூடி வாடிவாசலில் வீரக்காளைகள் துள்ளிக்குதிக்க காரணமாக அமைந்த மெரினா புரட்சியை மையப்படுத்தி சந்தோஷ் இயக்கத்தில், அனுராக் காஷ்யப் இணைத்தயாரிப்பில், அகிம்சா புராடக்ஷ்ன் சார்பில் நிருபமா தயாரிக்கும் படம் ஜல்லிக்கட்டு.

தலைவன் இல்லாமல் தன்னெழுச்சியாக உருவான அந்த போராட்டம் உலகம் முழுமையும் தன் வசப்படுத்தியது அனைவரும் அறிந்தது. அந்த மெரினா புரட்சியை மையப்படுத்தி இயக்குனர் சந்தோஷ் புதிய கோணத்தில் ஒரு கதை களத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார். உலகம் முழுவதுமான மக்கள் எப்படி ஒரு புள்ளியில் இணைந்தார்கள் என்பதை புதிய வடிவத்தில் உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர்.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நேரடி தொடர்பு இல்லாத ஒரு விஷயத்திற்காக ஒன்றிணைந்து போராடியது எப்படி என்பதை கூறும் படமாக இது அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் நிருபமா.

அமெரிக்காவின் ஹாவேர்ட் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் ஜல்லிக்கட்டு. கென்யாவின் மசாய்மாரா எனும் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் வாழும் காளை இனமும் நமது ஜல்லிக்கட்டு காளை இனமும் ஒரே இனம் என்பதை டி.என்.ஏ பரிசோதனைகள் நிரூபித்துள்ளன எனும் ஆச்சர்ய தகவலை சொல்லி கென்யாவின் படப்பிடிப்பிற்காண காரணத்தை விளக்குகிறார் இயக்குனர்.

கென்யாவின் மசாய்மாரா பகுதியில் பழங்குடி மக்களின் வாழ்வியலோடு படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ஜல்லிக்கட்டு. படத்தில் மசாய்மாரா படப்பிடிப்பு காட்சிகள் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர். உலகின் எல்லா பகுதிகளிலும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளோடு மெரினாவின் உண்மைக் சம்பவங்களும் படத்தில் உள்ளன. உண்மைச்ச்சம்பவங்களின் காட்சிகளை சேகரிக்கும் பணியில் தொடக்கி கதைக்கான புதிய காலத்தை அமைப்பது என இயக்குனர் கடினமாக உழைத்து வெற்றிக்காக காத்திருக்கிறார்.

முற்றிலும் புதிய முகங்களோடு இயக்குனர் சந்தோஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரமேஷ் வினாயகம் இசையக்கிறார்.

முதல் பாடல் யு.என் தலைமையகம், ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடைசி கட்ட பணிகளில் மும்முரமாக உள்ளது படக்குழு.

விரைவில் திரைக்கு வரும் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பெற்ற மாபெரும் வெற்றியை வெள்ளித்திரையிலும் நிச்சயம் பெரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குனர் சந்தோஷ்.

இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் படம் செப்டம்பர் 7ல் ரிலீஸாகிறது

இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் படம் செப்டம்பர் 7ல் ரிலீஸாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajavin-parvai-raniyin-pakkamவிகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “

இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சந்தான கிருஷ்ணன்

இசை – லியாண்டர் லீ மார்டின்

பாடல்கள் – விக்னேஷ் ஜெய்பால்

கலை – மகிரங்கி

எடிட்டிங் – இத்ரீஸ்

ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ்

நடனம் – சுரேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம்

இணை தயாரிப்பு – M. செந்தில் பாலசுப்ரமணியம்

தயாரிப்பு – விகாஷ் ரவிச்சந்திரன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அழகுராஜ்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம்.

டானுடன் நாயகியை தேடி நாயகன் செல்கிறார். நாயகிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதில் நாயகியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு திருமணம் யாருடன் நடந்தது ? என்பதை படு காமெடியாக சொல்லுகிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். படம் வருகிற செப்டம்பர் 7 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் அழகுராஜா.

More Articles
Follows