ஜோஜு ஜார்ஜ் நதியா லிஜோமோல் அர்ஜுன் தாஸ் & ஐஸ்வர்யா லெக்ஷ்மி கூட்டணி..; அமேசானில் ‘புத்தம் புதுக் காலை விடியாதா’.!

ஜோஜு ஜார்ஜ் நதியா லிஜோமோல் அர்ஜுன் தாஸ் & ஐஸ்வர்யா லெக்ஷ்மி கூட்டணி..; அமேசானில் ‘புத்தம் புதுக் காலை விடியாதா’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோஜு ஜார்ஜ், நதியா மொய்து, லிஜோமோல் ஜோஸ், அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி போன்ற சிறந்த திறமைசாலிகளுடன் Putham Pudhu Kaalai Vidiyaadhaa… உருவாக்கப்பட்டுள்ளது.

Putham Pudhu Kaalai Vidiyaadhaa… பிரைம் வீடியோவில் ஜனவரி 14 அன்று இந்தியாவிலும் உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் வெளியாகவுள்ளது.

தமிழ்த் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ள அத்தியாயங்கள்:
• பாலாஜி மோகன் இயக்கிய “முககவச முத்தம், கௌரி கிஷன் மற்றும் டீஜே அருணாச்சலம் நடித்துள்ளனர்.

• ஹலிதா ஷமீம் இயக்கிய “லோனர்ஸ்”, லிஜோமோல் ஜோஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர்.

• மதுமிதா இயக்கிய “மௌனமே பார்வையாய்” நதியா மொய்டு மற்றும் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.

• ரிச்சர்ட் ஆண்டனி இயக்கிய “நிழல் தரும் இடம்” ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் நிர்மல் பிள்ளை நடித்துள்ளனர்.

• சூர்யா கிருஷ்ணா இயக்கிய “தி மாஸ்க்”, சனந்த் மற்றும் திலிப் சுப்பராயன் நடித்துள்ளனர்.

அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இந்திய ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், “எங்கள் முதல் தொகுப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இதில் நம்பிக்கை, அன்பு, பின்னடைவு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதநேயம் எவ்வாறு ஒன்றுபட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.

புத்தம் புதுக் காலை விடியாதா தொடரை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம், தமிழ்த் துறையில் இருந்து சுதந்திரமான சினிமாக் குரல்கள் இடம்பெறுகின்றன, மேலும் இந்தத் தொடர் பார்வையாளர்களை நம்பிக்கையுடனும் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் என்று நம்புகிறோம்.

Amazon Prime Video Announces Putham Pudhu Kaalai Vidiyaadhaa… to Spread the Message of Hope this festive season of Pongal

கமலுக்கு பிறகு விஜய்சேதுபதியை கலைஞனாக மாற்றிய ராமச்சந்திரன்

கமலுக்கு பிறகு விஜய்சேதுபதியை கலைஞனாக மாற்றிய ராமச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை வெளுத்து கட்டுபவர் நடிகர் விஜய்சேதுபதி.

முன்னணி நடிகர்களே நடிக்கத் தயங்கும் திருநங்கை கேரக்டரில் (சூப்பர் டீலக்ஸ்) படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் விஜய்சேதுபதி.

இந்த நிலையில் தற்போது தெருக்கூத்து கலைஞனாக மாறியிருக்கிறார்.

தெருக்கூத்து கலைஞன் வேடமிட்டு விஜய்சேதுபதி நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலகப்புகழ் பெற்ற எல்.ராமசந்திரன் என்ற தமிழர் நடத்திய போட்டோ ஷூட் நிகழ்வில் இந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுக்கு கலைஞன் என்று பெயரிட்டுள்ளார் எல்ராமசந்திரன். இதே பெயரில் கமல்ஹாசன் நடித்த ‘கலைஞன்’ படம் 1993ல் வெளியானது என்பது இங்கே நினைவுக்கூறத்தக்கது.

இந்த நிலையில் இந்த நவீன கலைஞன் 2022 காலண்டருக்கான போட்டோ ஷூட் என தெரிய வந்துள்ளது.

இந்த காலண்டரை தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் 12 நபர்கள் வெளியிடவுள்ளனர்.

அவர்களின் விவரம்…

1. சீனுராமசாமி 2. லோகேஷ் கனகராஜ் 3. புஷ்கர் காயத்ரி 4. விக்னேஷ் சிவன். 5. பொன்ராம் 6. கேஜேஆர் ராஜேஷ 7. செவன் ஸ்கிரீன் லலித் குமார் 8. ஐஸ்வர்யா ராஜேஷ் 9. ராஷிகண்ணா 10. ரெஜினா கெசன்ட்ரா 11. காயத்ரி 12. அதிதி பாலன்

இதற்கு முன்பே 2020 கொரோனா லாக்டவுன் சமயத்தில் வீட்டில் அடைப்பட்டு கிடந்த மனிதனின் மனநிலை உணர்வுகளை தத்துரூபமாக படம் பிடித்து இருந்தார் எல் ராமச்சந்திரன். அதிலும் நடிகர் விஜய்சேதுபதி மாடலாக தோன்றினார். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi’s Therukoothu Kalaingan Calendar 2022 will be released today evening

ரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’-யில் சித்ஸ்ரீராம் & ரித்விகா

ரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’-யில் சித்ஸ்ரீராம் & ரித்விகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஆறாவது நாளாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கோலாகலத் திருவிழாவாக “Hip Hop & Rap” என பெயரிடப்பட்டு நடந்தது..

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் அவர்கள் “இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மிக பெருமையாக இருக்கிறது” நான் வெகுவாக ரசித்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார். ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேடையில் பாடினார் சித் ஸ்ரீராம்.

கவிஞர் தனிக்கொடி “மார்கழியில் மக்களிசை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஓவியர் அனிதா ரஞ்சித் “இசைக்கலைஞர்கள் மார்கழியில் மக்களிசை மேடையில் சிறப்பாக பாடினார்கள்” என்று மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

நடிகை ரித்விக்கா மார்கழியில் மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் மக்களிசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க ப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து 30/12/2021 இதே தமிழ் இசை சங்கத்தில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறும்.

Sid Sri Ram and Rithvika are in part of Margazhiyil Makkalisai

அம்மாவை இழந்தவர்களுக்காக.. ; ஃசயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா – மகன் பாசம் ‘கணம்’

அம்மாவை இழந்தவர்களுக்காக.. ; ஃசயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா – மகன் பாசம் ‘கணம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘கணம்’.

இந்தப் படத்தின் டீஸரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது சமூக வலைதளத்தில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஸ்ரீகார்த்திக் இப்
படத்தை குறித்து சொன்னதாவது.

“அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் தான் ‘கணம்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன்.

சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, தற்போது சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் இரண்டு மொழிகளின் படபிடிப்பு செலவு உள்ளிட்டவைகளால் பெரும் பொருட்செலவு கொண்ட படமாக மாறியிருக்கிறது.

இதில் அம்மா வேடத்தில் தென்னிந்திய சினிமாவில் கனவுக்கன்னியாக விளங்கிய அமலா மேடம் நடித்துள்ளார். இந்தக் கதையை அவரை மனதில் வைத்தே எழுதினேன்.

25 வருடங்களாக நடிக்காமல் இருந்தவர், இந்தக் கதையைக் கேட்டவுடன் ஒப்புக் கொண்டார்.

படம் பார்ப்பவர்கள் அனைவரது மனதிலும், அவரவர்களின் நிஜ அம்மாவை நினைவு கூர்வார்கள். ‘கணம்’ படத்தின் சிறப்பே அம்மா பாசத்துக்குள் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்திருப்பது தான்.

இந்தப் படம் அம்மாவை இழந்தவர்களுக்கு மீண்டும் அம்மாவை ஞாபகப்படுத்தும். படம் முடிந்ததும் அம்மாவிடம் பேசத் தோன்றும். அம்மாவை நேரில் பார்த்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கத் தோன்றும்.

அவருடன், சர்வானாந்த், ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதைக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஹித்தேஷ், ஜெய், நித்யா என மூன்று சிறுவர்கள் நடித்துள்ளார்கள்.

தமிழில் சதீஷ், திலக் ரமேஷ் நடித்த கேரக்டரில், தெலுங்கில் வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி ஆகியோரும் நடித்துள்ளனர். இதர கதாபாத்திரங்கள் இரண்டு மொழிகளிலும் ஒன்று தான்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மிகவும் மெனக்கிட்டு வருகிறோம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள், அது போல் இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன முன்னோட்டமே இந்த டீஸர். இன்னும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

விரைவில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடலொன்றை வெளியிடவுள்ளோம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் கலக்கி வரும் நம் சித் ஸ்ரீராமின் மயக்கும் குரல் இப்படத்தில் அம்மா பற்றிய பாடல் மூலமாக கண்டிப்பாக மேலும் உங்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கும்.

தமிழ் சினிமாவில் அம்மாவைப் பற்றிய பாடல்கள் வரிசையில் மிக முக்கியமான இடத்தை இந்தப் பாடல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

தமிழில் ‘கணம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரிலும் அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

A Sentimental Science Fiction Movie: ‘Oke Oka Jeevitham’ Teaser Released

நம்பிக்கை துரோகம் முதல் வருட நாள்.; வெட்டப்பட்ட கோழியாய் ரஜினி ரசிகர்கள் துடித்த தினம்

நம்பிக்கை துரோகம் முதல் வருட நாள்.; வெட்டப்பட்ட கோழியாய் ரஜினி ரசிகர்கள் துடித்த தினம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கடந்த 45 வருடங்களாக ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்.

இன்றைய தலைமுறை நடிகர்களால் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற நடிகர்கள் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். ரசிகர்கள் இவரை திரையை தாண்டி உயிருக்கு உயிராக நேசித்து வருகின்றனர்.

1990களில் அண்ணாமலை, பாட்ஷா பட ரீலீஸ் சமயம் முதலே ரஜினியை அரசியலுக்கு அழைக்க தொடங்கினர். அவரும் வரவேண்டிய நேரத்துல சரியா வருவேன் என சினிமாக்களில் பன்ச் டயலாக் பேசினார்.

எனவே தமிழகமே ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினர். இது 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் கேள்வியாக இருந்தது. இதற்கு விடை சொல்லாமல் மௌனமாகவே இருந்து வந்தார் ரஜினி.

கடந்த 2011ஆம் ஆண்டில் உடல்நல குறைவால் ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை பெற சென்ற போது ரசிகர்கள் பலர் நிம்மதியை இழந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மொட்டை போட்டனர், மண் சோறு சாப்பிட்டு ரஜினி நலம் பெற வேண்டினர்.

அப்போது ஆடியோவில் ரஜினி பேசியபோது.. நான் நடிகன். காசு வாங்குறேன்.. நடிக்கிறேன்.. என் மீது இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க… நான் உங்களுக்கு என்ன செய்ய போகிறேன்.

நான் சிகிச்சை முடிந்து திரும்பி பின்னர் என் ரசிகர்கள் தலை நிமிர செய்வேன் என உருக்கமாக பேசியிருந்தார்.

அதன் பின்னர் சரியாக 2017 டிசம்பர் 31ல் தன் அரசியல் பிரவேசத்தை முறையாக அறிவித்தார். தான் அரசியலுக்கு வருவது உறுதி. 2021 பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவேன் என பேசினார்.

தமிழக அரசியல் சிஸ்டமே சரியில்லை. எவருமே பார்க்காத ஆன்மிக அரசியலை தமிழகம் பார்க்கும் என பல மேடைகளில் பேட்டிகளில் சொல்ல ஆரம்பித்தார்.

2021ல் தமிழக விரும்பும் அற்புதம் அதிசயம் நடக்கும் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே வந்தார்.

மேலும் ரஜினி ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இதனால் பல அரசியல் கட்சிகள் கலங்கி நின்றன. ரஜினியுடன் கூட்டணி போட பல பிரபலங்கள் காத்திருந்தனர்.

ஆனாலும் ரஜினி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். காலா, 2.0, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

2020 தொடக்க முதலே கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. எனவே ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமானது. ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? என ரசிகர்களே சந்தேகம் அடைந்தனர்.

ஆனாலும் ஒரு சிலர் ரஜினியை நம்பி கொண்டு இருந்தனர்.

2021 பொதுத்தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் கூட இல்லையே ரஜினி தாமதம் சரியா? என நடுநிலையாளர்களே கேட்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு 2020 டிசம்பர் 29ல்… நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை’ என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் துடித்தனர். கழுத்து வெட்டப்பட்ட கோழி உயிருக்கு போராடும் வலியை அவர்கள் அனுபவித்தனர் என்று கூட சொல்லலாம்.

கிட்டதட்ட 25 வருடங்களாக அரசியல் அறிவிப்பை அறிவிக்காத ரஜினி 2017 முதல் 2020 வரை அரசியல் தொடர்பான அறிவிப்புகள் தகவல்களை பேசி.. இப்படி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கதறினர்.

ஆனால் ஒரு சிலர் 2021 ஜனவரி 10ல் போராட்டம் நடத்தி ரஜினியை மீண்டும் அரசியல் அழைத்தனர். அதையும் ரஜினி கண்டித்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிக்கை விட்டார்.

ரஜினி வெளியிட்ட அறிக்கையில்…

இந்த கரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னைப் பற்றி பேசவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.

ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் என்று தெரிவித்து இருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினி அரசியல் அறிவிப்புகள்…

* 2017 டிசம்பர் 31-ந்தேதி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.

* 2018 ஜனவரி 1-ந்தேதி, ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்க ‘ரஜினி மன்றம்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

* 2018 ஜனவரி 6-ந்தேதி, ரஜினி மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றப்பட்டது.

* 2018 பிப்ரவரி 24-ந்தேதி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், ‘அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ என்று பரபரப்பாக பேசினார்.

* 2018 மார்ச் 12-ந்தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், ‘எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்று உறுதியாக கூறினார்.

* 2019 பிப்ரவரி 17-ந்தேதி, ‘சட்டசபை தேர்தல்தான் எங்களது இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை’ என்று ரஜினிகாந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

* 2019 நவம்பர் 22-ந்தேதி, ‘2021-ம் ஆண்டு தேர்தலில் அற்புதம் நிகழும்’ என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

* 2020 மார்ச் 13-ந்தேதி, சென்னையில் நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை; முதல்-அமைச்சர் ஆகமாட்டேன்’ என திட்டவட்டமாக அறிவித்தார்.

* 2020 நவம்பர் 31-ந்தேதி, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, “அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் தெரிவிப்பேன்” என்று கூறினார்.

* 2020 டிசம்பர் 3-ந்தேதி, “ஜனவரியில் கட்சி தொடக்கம். 31-ந்தேதி அதுபற்றி அறிவிக்கிறேன்” என டுவிட்டரில் பதிவிட்டார்.

* 2020 டிசம்பர் 14-ந்தேதி, ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்றார்.

* 2020 டிசம்பர் 25-ந்தேதி, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

* 2020 டிசம்பர் 27-ந்தேதி, 3 நாள் சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பினார்.

* 2020 டிசம்பர் 29-ந்தேதி, ‘நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை’ என்று ரஜினி அறிவித்தார்

A day which Thalaivar fans want to forget but not able to

இசைஞானியின் ‘மாயோன்’ பட பாடலில் சொற்குற்றம்..?.; இசை விமர்சகர்கள் எதிர்ப்பு

இசைஞானியின் ‘மாயோன்’ பட பாடலில் சொற்குற்றம்..?.; இசை விமர்சகர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையிசை ஆர்வலர்களிடத்தில் ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கின் லிரிக்கல் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இந்த திரைப்படத்தில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில், கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி & காயத்திரி குரலில் வெளியான ‘மாயோன்’ பட பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

‘மாயோனே மணிவண்ணா..’ என்ற இந்த பாடலின் லிரிகல் வீடியோவும் பாடலுடன் வெளியானது. தற்போது இந்த லிரிகல் வீடியோ இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக இசை விமர்சகர்கள் பேசுகையில்,…

”மாயோனே மணிவண்ணா..’ என தொடங்கும் பாடலில் ‘தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம்..’ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வரிகளில் ‘தாள் பணிந்தோம்’ என்பதற்கு பதிலாக ‘தாழ் பணிந்தோம்’ என்றிருக்கிறது.

‘தாள்’ என்பதன் பொருள் வேறு. ‘தாழ்’ என்பதன் பொருள் வேறு. பக்திப் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடலில் இசைஞானி இளையராஜாவும், பாடகிகளான ரஞ்சனி & காயத்ரியும் ‘தாள் பணிந்தோம்’ என பொருள் மற்றும் உச்சரிப்பு பிசகாமல் பாடியிருக்கிறார்கள்.

ஆனால் லிரிகல் வீடியோவை உருவாக்கிய தொழில்நுட்ப குழுவினர், ‘தாழ் பணிந்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே படக்குழுவினர், ‘தாள் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? அல்லது ‘தாழ் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? என்பதைப் பற்றி உடனடியாக தெளிவுப்படுத்தவேண்டும்.” என குறிப்பிட்டனர்.

‘தாள் பணிந்தோம்’ என்பதற்கு, ‘இறைவனின் பாதம் பணிந்தோம்’ என நேரடியான பொருளை வழங்குகிறது. ‘தாழ் பணிந்தோம்’ என்பதற்கு ‘தாழ்மையுடன் பணிந்தோம்’ என்ற பொருளை தருகிறது. இந்த துல்லியமான வேறுபாட்டால், இசை ஆர்வலர்கள் பலரும் இணையத்தில் விவாத பொருளாக மாற்றி வருகிறார்கள்.

இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில்…

, “கதைச்சூழலின் படி ‘ தாள் பணிந்தோம்’,‘ தாழ் பணிந்தோம்’ என இரண்டுமே பொருத்தமானது தான் என்றும், லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ‘தாழ் பணிந்தோம்’ என்ற சொல்லும், இசை விமர்சகர்கள் உணர்த்தும் ‘தாள் பணிந்தோம்’ என்ற சொல்லும் புறநானூற்று இலக்கிய ஆதாரத்தின் படி இறைவனின் பாதம் பணிந்து வழிபடும் பொருளைத் தான் குறிப்பிடுகிறது.

இருந்தாலும் இசை விமர்சகர்கள் சுட்டி காட்டியதை ஏற்றுக்கொண்டு, ‘தாள் பணிந்தோம்’ என லிரிக்கல் வீடியோவில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

”என விளக்கமளித்திருக்கிறார்கள்.
இசை ரசிகர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பெருமுயற்சி எடுத்து ‘தாள் பணிந்தோம்’ என்று பதிவேற்றம் செய்ததற்கு இசை ரசிகர்கள், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Music reviewers against Ilayaraaja’s Maayon song

More Articles
Follows