உலகளவில் ஹிட்டான ‘மாடர்ன் லவ்’ தொடரின் இந்தியத் தழுவல்

உலகளவில் ஹிட்டான ‘மாடர்ன் லவ்’ தொடரின் இந்தியத் தழுவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாடர்ன் லவ்: மும்பை (இந்தி), மாடர்ன் லவ்: சென்னை (தமிழ்) மற்றும் மாடர்ன் லவ்: ஹைதராபாத் (தெலுங்கு) ஆகியவற்றுடன் காதல் அனைவரின் இல்லங்களிலும் அடி எடுத்து வைக்கிறது, இது பிரபல நியூயார்க் டைம்ஸ் கட்டுரைகள் மற்றும் சர்வதேசத் தொடர்களின் அடிப்படையிலான மாடர்ன் லவ்வின் உள்ளூர்மயமாக்கப்பட்ட இந்தியப் பதிப்பாகும்.

2022-இல் 240+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொடர் காதல் உணர்வுகளைச் சித்தரிக்கும் பல்வேறு கதைகளைக் கொண்டிருக்கும்.

மும்பை, இந்தியா, பிப்ரவரி-14, 2022— சர்வதேச ஹிட் தொடரான ‘மாடர்ன் லவ்’-இன் இந்தியத் தழுவல் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் Amazon Prime Video இந்த ஆண்டு உங்கள் இல்லங்களை அன்பால் நிரப்பத் திட்டமிட்டுள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளிவரவுள்ள இத் தொடருக்கு ‘மாடர்ன் லவ்: மும்பை’, ‘மாடர்ன் லவ்: சென்னை’ மற்றும் ‘மாடர்ன் லவ்: ஹைதராபாத்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல பத்திரிகையில் வந்த கட்டுரைகளைத் தழுவி உருவாகியுள்ள இத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் காதல், ஈர்ப்பு, சுய பக்தி, குடும்ப பாசம், நண்பர்கள் மீதான அன்பு வரை பல மனித உணர்வுகளைக் கதைகள் மூலம் வெளிப்படுத்தும் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர் 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்பட உள்ளது.

Amazon Studios, லோக்கல் ஒரிஜினல்ஸ் துறைதலைவர் ஜேம்ஸ் ஃபாரெல் கூறுகையில், “காதலுக்கு எல்லைகள் இல்லை, இது உலகளாவிய மொழி. மாடர்ன் லவ் ஆனது காதலின் பல்வேறு வடிவங்களின் கவிநயம் சார்ந்த வெளிப்பாடாகும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் எங்கள் அமெரிக்க நிகழ்ச்சியின் கதைகளுடன் தங்களைத் தொடர்புபடுத்தி ரசிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம், இந்தியாவின் பல்வேறு கலாச்சாரம், இந்தத் தொடருக்கு இயல்பாகவே கைகொடுக்கிறது. இந்தியத் தழுவல்களும் அதேபோன்று எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு நல்லுறவை தொடும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்கிறார்.

Amazon Prime Video இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறுகையில், “இந்தியா அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டுக்குப் பெயர் பெற்ற தேசம் – எங்கள் இந்தியத் தழுவல்களுடன் இந்திய மண்ணில் வேரூன்றியிருக்கும் காதல் கதைகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பல மொழிகளில் உருவாகும் இந்தத் தொடர், காதலின் பற்பல வடிவங்களை அலசுவதாக இருக்கும். இந்த மனதைக் கவரும் கதைகள் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து தழுவி எடுக்கப்பட்டாலும், இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு உள்ளன, மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்கள் இதற்குச் சரியாகப் பொருந்துகின்றன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த நம்பமுடியாத கதைகளைக் கொண்டு வருவதில் நாங்கள் மிக மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

தி நியூயார்க் டைம்ஸில் மாடர்ன் லவ் பத்திரிகையின் ஆசிரியர் டேனியல் ஜோன்ஸ் கூறுகையில்: “காதல் இந்திய கலாச்சாரக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உள்ளது. எங்களின் இக்காதல் கதைகள் இந்திய மண்ணுக்கு ஏற்ப தழுவி எடுக்கப்பட்டுள்ளதை அறிவது உற்சாகமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. மாடர்ன் லவ் தொடர் உலகளவில் பெற்ற பாராட்டுக்களால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இந்திய தழுவல்கள் உலகளாவிய காதல் உணர்வுகளை இந்நாட்டுக்கு வெளிப்படுத்தும் ஒரு காதல் வெளிப்பாடாக அமையும்.” என்றார்.

Amazon Prime Video Announces Local Indian Adaptations of International Hit Series Modern Love

உள்ளுர் அழகி வேண்டாம்..; சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் அழகி

உள்ளுர் அழகி வேண்டாம்..; சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் அழகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது முதன்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

அவரின் 20வது படமாக உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் கேவி இயக்குகிறார்.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது.

தமன் இசையமைத்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் மற்றும் நடிகை மரியா ரியாபோஸப்கா என்பவர் நடிக்கிறாராம்.

இந்தியாவிற்கு டூர் வரும் ஓர் அழகான பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் ரொமான்ஸ்தான் இப்படத்தின் கதைக்களம் என சொல்லப்படுகிறது.

Ukraine model to romance Sivakarthikeyan for her next

‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்திற்காக இணைந்த அமீர் வெற்றிமாறன்

‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்திற்காக இணைந்த அமீர் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’, ஜீவா நடித்த ‘ராம்’, கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட பல தரமான படங்களை இயக்கியவர் அமீர்.

அதன்பின்னர் மேடை பேச்சுக்கள் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு “இறைவன் மிகப்பெரியவன்” எனத் தலைப்பு வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் அமீர்.

இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

வெற்றிமாறன் – தங்கம் இருவரும் கதை எழுதும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

‘இறைவன் மிகப்பெரியவன்’ பர்ஸ்ட் டைட்டில் லுக் போஸ்டரில் இந்து முஸ்லிம் கிறிஸ்து மத சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Ameer and Vetri maaran joins for Iraivan Miga Periyavan

சிம்பு இல்லாமல் இணைந்த ‘வாலு’ கூட்டணி; விஜய்சேதுபதி வாழ்த்து

சிம்பு இல்லாமல் இணைந்த ‘வாலு’ கூட்டணி; விஜய்சேதுபதி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய் சந்தர்.

இவர் தற்போது தயாரிப்பாளாராக மாறியுள்ளார்.

வாலு படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த நடிகை ஹன்சிகாவை வைத்து தனது முதல் படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தை கூகுள் குட்டப்பன் பட இயக்குனர்கள் சபரி கிரீசன் மற்றும் சரவணன் இணைந்து இயக்குகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(பிப்., 14) பூஜையுடன் துவங்கியது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் பட பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

Vijay Sethupathi wishes to Vaalu director new movie

FANTASTIC REPORT.. FANTASTIC RECORD FOR FIR..; வியப்பில் விஷ்ணு விஷால் & டீம்

FANTASTIC REPORT.. FANTASTIC RECORD FOR FIR..; வியப்பில் விஷ்ணு விஷால் & டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெளதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் எஃப்ஐஆர்.

இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்திருந்தார்.

முக்கிய வேடத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபோ மோனிகா, கௌரவ் நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் பிப்ரவரி 11ல் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியான உள்ளனர்.

மேலும் படத்தின் வெற்றியின் மீது ஏற்கெனவே நம்பிக்கை இருந்தாலும் இந்தளவு பெரிய வெற்றியை பெறும் என நினைக்கவில்லை என வியப்பில் உள்ளதாம் படக்குழு.

சென்னையில் சில தியேட்டர்களில் நேரடி விசிட் அடித்தபோது மக்களின் மகிழ்ச்சியை நேரில் கண்ட படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

வாரத்தின் இறுதிநாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காட்சிகள் திரையரங்குகளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Victory reports are pouring from everywhere for Vishnu Vishal’s FIR

கடைக்கோடி தமிழ் ரசிகனையும் கவர்ந்தார் ‘கடைசி விவசாயி’

கடைக்கோடி தமிழ் ரசிகனையும் கவர்ந்தார் ‘கடைசி விவசாயி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட தரமான படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 11ல் வெளியான படம் “கடைசி விவசாயி”.

இந்த படத்தில் நல்லாண்டி, விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முதன்மை கேரக்டரில் நடித்த நல்லாண்டி கொரோனா காலத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த விதமான கமர்ஷியல் மசாலாக்களை இணைக்காமல் ஒரு யதார்த்தமாக அதே சமயம் ஆவணப் படம் போல் இல்லாமல் ஒரு விவசாயியின் உன்னதமான வாழ்க்கையை பதிவு செய்திருந்தார் மணிகண்டன்.

படத்தின் ரீலீசுக்கு முன்பே பிரஷ் ஷோ போடப்பட்டதால் செய்தியாளர்கள் பத்திரிகையாளர்கள் இப்பட விமர்சனங்களை பதிவிட்டனர்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது.

எனவே படம் வெளியானது முதலே திரையரங்குகளிலும் மக்கள் மனதிலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. மனநிறைவான படம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருபவர்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆக கடைக்கோடி தமிழ் ரசிகனையும் இந்த கடைசி விவசாயி கவர்ந்து விட்டார்.

Kadaisi Vivasaayee gets good response from critics as well as public

More Articles
Follows