அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டுதான் நிர்வாணமா நடிச்சேன்.. – அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையின் நாயகியாக அமலா பால் நடித்துள்ள ஆடை படம் வருகிற ஜீலை 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு காரணம் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நிர்வாணமாக அமலா பால் நடித்துள்ளார் என்பதுதான்.

இது குறித்து அமலா பால் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

நிறைய படங்களில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள்.

அப்போது தான் தர்மசங்கடம் ஏற்படும்.

ஆனால் இந்த படத்தில் நிர்வாண காட்சியில் நடித்த போது தர்ம சங்கடம் ஏற்படவில்லை. கவர்ச்சியோ ஆபாசமோ இல்லை.

ரசிகர்கள் இதை இப்படியே எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிப்பதை கூறினேன். அதிர்ச்சி ஆன போதும் நல்ல கதையா? என்று கேட்டார்.

நியாயமான கதை என்றதும் சம்மதித்தார்.

நான் நடிக்க வரும்போதே என் அப்பா அனுமதி கேட்டபோது ‘நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும். எனவே எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே’ என சொன்னவர் அவர்.

நிர்வாண காட்சியில் நடித்த பின்னர், நான் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன். முதல் நாள் படப்பிடிப்பில் பயம், பாதுகாப்பின்மை இருந்தது. காட்சி முடிந்த பின் அவை எல்லாமே என்னை விட்டு போனது.

தற்போது நான் என்னை பவர்புல் உமனாக உணர்ந்தேன்.” என தெரிவித்துள்ளார்.

Amala Paul reveals how she acted as Nude in Aadai movie

‘சாஹோ’ படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனிருத் ரவிச்சந்தர் தனது இசை மூலம் மட்டுமல்லாமல், அவரது குரலாலும் ரசிகர்கள் கூட்டத்தை கவர்வதில் மிகவும் சிறப்பானவர். இது ஒரு தனித்துவமான சாராம்சமாக பாராட்டப்பட்டது, அவரது இசையில் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் காதல் பாடல்களில் ஒன்றான ‘துஹிரே’ (டேவிட்) மூலம் முந்தைய சாதனையான உலகப் புகழ்பெற்ற ‘கொலவெறி’ பாடலின் சாதனையை முறிடித்தார். அவரது குரல் மொழி தடைகளைத் தாண்டி அபரிமிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள ‘சாஹோ’ படத்தில் அனிருத் பாடிய ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்திருப்பதால், இந்தி பேசும் பிரதேசங்களிலும் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்திய கலைஞர்களுடன் அனிருத் இணைந்த பாடல்கள் எப்போதும் மிகப்பெரிய வெற்றியையே பெற்றுள்ளன. இந்த முறை, அவர் நாட்டின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவரான த்வானி பானுஷலியுடன் இணைந்திருப்பது இரட்டிப்பு விருந்தாக அமைந்துள்ளது. அனிருத்தின் குரல் பிரபாஸுக்கு மிகப்பொருத்தமாக அமைந்திருப்பது வட இந்தியர்களை ‘சாஹோ’ நேரடியாக தமிழில் உருவாக்கப்பட்டதா? என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அத்தகைய அற்புதமான வரவேற்புடன், பாடல் யூடியூப் மற்றும் பிற இசைத்தளங்களில் பெரிய அளவில் பரவியிருக்கிறது. குறிப்பாக, பிரபாஸுக்கும், ஸ்ரத்தா கபூருக்கும் இடையிலான அனல் தகிக்கும் கெமிஸ்ட்ரி ‘காதல் சைக்கோ’ பாடலுக்கு கூடுதல் சுவையை கூட்டியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் மற்றும் த்வானி பானுஷாலி ஆகியோருடன் இணைந்து பாடலை பாடியதோடு தனிஷ்க் பக்சி இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றான “சாஹோ” படத்தை யு.வி.கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் தயாரிக்கின்றனர். சுஜீத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், லால், முரளி ஷர்மா, வெண்ணிலா கிஷோர், பிரகாஷ் பெலவாடி, ஈவ்லின் ஷர்மா, சுப்ரீத், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர் மற்றும் டினு ஆனந்த் போன்ற அகில இந்திய அளவிலான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் அதன் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுக்காக ஏற்கனவே அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. கென்னி பேட்ஸ், பெங் ஜாங், திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, ஸ்டீபன், பாப் பிரவுன் மற்றும் ராம் – லக்ஷ்மன் போன்ற உலகம் முழுக்க இருந்து வந்திருக்கும் மிகச்சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்கள் சண்டைக் காட்சிகளை வடிவைத்துள்ளனர். மதி (ஒளிப்பதிவு), சாபு சிரில் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), ஸ்ரீகர் பிரசாத் (படத்தொகுப்பு), ஆர்.சி. கமலகண்ணன் (விஷுவல் எஃபெக்ட்ஸ்), வைபவி மெர்ச்சண்ட் & ராஜு சுந்தரம் (நடனம்), ஜிப்ரான் (பின்னணி இசை) மற்றும் சிங்க் சினிமா (ஒலி) என தங்கள் துறைகளில் தங்களின் மகத்தான பங்களிப்பு மூலம் பாரட்டப்பட்ட கலைஞர்கள் இந்த படத்துக்கு கூடுதல் மதிப்பை வழங்கியுள்ளனர்.

உலகளவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 15, 2019 அன்று வெளியாகிறது ‘சாஹோ’.

BREAKING பிகில் படத்தில் இடம் பெற்ற ‘சிங்க…’ பாடல் லீக்கானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் இரு வேடங்களில் நடித்து வரும் பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மெர்சல் படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படம் இந்தாண்டு 2019 தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் பாடல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் இப்பட பாடல் ஒன்று லீக்காகியுள்ளது.

சிங்க பெண்ணே என்ற வரியுடன் அந்த பாடல் தொடங்குகிறது-

பெண்கள் கால்பந்தாட்டத்தை அடிப்படையாக கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. ஏஆர். ரஹ்மானே இப்பாடலை பாடியுள்ளார்.

Singa Pennae song from Vijays Bigil got leaked

அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

பிரசாந்த் நடித்த ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் ” ராஜ வம்சம் ” .இது T. D ராஜாவின் மூன்றாவது படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்
இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .

இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழிநுட்பக்குழு :

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு – T D ராஜா,
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்,
இசை – ஜோகன்,
ஒளிப்பதிவு – N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது.

வடசென்னை 2 வருமா..? வராதா? குழப்பத்தை தீர்த்துவைத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் அசுரன் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து துரை செந்தில்குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் வடசென்னை 2 படம் இனி வராது என தகவல்கள் பறந்தன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனுஷ் கூறியுள்ளதாவது…

“என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும்.

அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ.” என தனுஷ் கூறியுள்ளார்.

தர்பார் படத்தில் ரஜினியை மிரட்ட இத்தனை வில்லன்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியின் அறிமுக பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.

நயன்தாரா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் ரஜினியுடன் 3 வில்லன்கள் நடிக்கிறார்களாம்.

இஷாக், பாஹி 2 ஆகிய ஹிந்தி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் இப்படத்தில் நடிக்கிறார்.

இவரின் தந்தை வேடத்தில் சுனில் ஷெட்ட நடிக்கிறார்.

இவர்களுடன் நவாப் ஷாவும் வில்லனாக நடித்து வருகிறாராம்.

டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்தவர் நவாப் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows