மீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்து பெரும் வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷ் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்க, அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அமலாபால் மீண்டும் தனுஷ் உடன் டூயட் பாடவுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் தனுஷின் தந்தை கேரக்டரில் சமுத்திரக்கனியும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளதால், கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

பத்து நாட்களில் ரூ. 50 கோடியை தொட்ட சிம்பு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த அச்சம் என்பது மடமையடா படம் அண்மையில் வெளியானது.

கௌதம் மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் குறித்து சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி கிட்டதட்ட 10 நாட்களை கடந்துள்ளது.

இதுவரை ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது நாட்டில் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என கூறப்பட்டு வந்த போதிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சைத்தானை தேவதையாக கொண்டாடும் அருந்ததி நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதுகுறித்து இப்பட நாயகி அருந்ததி நாயர் கூறியதாவது..

“என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கிறது இந்த ’சைத்தான்’. அது எனக்கு தேவதை‘ என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர்.

என் மீது நம்பிக்கை வைத்த விஜய் ஆண்டனிக்கு என்னுடைய நன்றி.

’ஐஸ்வர்யா’ என்னும் வலுவான கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை, இந்த சைத்தான் பெற்றுத் தந்திருக்கிறது.

என்னுடைய சொந்த குரலிலேயே இப்படத்திற்கு டப்பிங் பேசியுள்ளேன்” என்று ஆனந்தமாக கூறுகிறார் அருந்ததி நாயர்.

த்ரிஷா-ஹன்சிகாவை அலற வைத்த நபர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் நடிகைகளை கொண்டாடினாலும், மறுபக்கம் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வரும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பிரபல நடிகைகளான த்ரிஷா மற்றும் ஹன்சிகா ஆகியோரின் போன்களை யாரோ ஒரு விஷமி ஹேக் செய்து விட்டாராம்.

மேலும், அதில் உள்ள எல்லா நம்பர்களையும் அழித்து விட்டார்களாம்

இதனால் அலறிய இருவரும் விரைவில் இணைந்து போலீசில் புகார் கொடுக்கவிருக்கிறார்களாம்.

பூபதி பாண்டியனை தொடர்ந்து அமீத் இயக்கத்தில் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூபதி பாண்டியன்.

இவர் இயக்கத்தில் விமல் நடித்துள்ள “மன்னர் வகையறா“ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதனையடுத்து சுசீந்திரன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதனை சுசீந்திரன் உதவியாளர் சிவா இயக்க, இமான் இசையமைக்கிறார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாண்டிராஜ் வசனம் எழுதுகிறாராம்.

இதன்பின்னர் ராஜதந்திரம் பட இயக்குனர் அமீத் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறாராம் விமல்.

இத்துடன் ஒரு சில இயக்குனர்களுடன் விமல் இணையவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஷாம் உடன் இணைந்த சிவகார்த்திகேயனின் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

K.V. சபரீஷ், தன் “2M cinemas” சார்பில் தயாரித்து வரும் படம் கா-வியன்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பார்த்தசாரதி இயக்கி வருகிறார்.

ரோடு திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது.

இதில் ஷாம் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ஆத்மியா நடித்து வருகிறார்.

இவர் சிவகார்த்தியேனுடன் ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் நடித்தவர்.

இவர்களுடன் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில், நவி சதிஷ்குமார் வசனத்தில், ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இதன் தெலுங்கு பதிப்புக்கு “வாடு ஒஸ்தாடு” என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் இறுதிக்கட்ட சூட்டிங் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இதில் பெரும்பாலான காட்சிகள், அமெரிக்கா தலைநகர் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows