‘தப்பாக பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்….’ அடம் பிடித்த அல்லு அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் ராஜா தயாரிக்கும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்.

சண்டக்கோழி 2 படத்தை முடித்துவிட்ட இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவிருக்கிறார்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் பேசும்போது….

தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன். என தொடங்கினார். (ஆனால் நன்றாகவே தமிழ் பேசினார்)

நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில் தான். 2௦ வருடமாக இங்கே தான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னை தான்.

நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை.

அதற்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடி தமிழ் படம் நடிக்க வேண்டும் என்பது தான்.

எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன்” என்றார் அல்லு அர்ஜுன்.

‘அல்லு அர்ஜுன் எனக்கு போட்டியாக வந்திருப்பார்’ – சிவக்குமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது 1௦வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.

இதன் 12வது தயாரிப்பான படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குகிறார்.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சற்றுமுன் நடைபெற்றது.

இதில் நடிகர் அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் லிங்குசாமி, நடிகர் சிவகுமார், அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ், எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது சிவக்குமார் பேசியதாவது…

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர். சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது.

அல்லு அர்ஜுன் மிகவும் அழகாக உள்ளார். நல்ல வேளை அவர் 1960ல் நடிக்க வரவில்லை அப்படி வந்திருந்தால் எனக்கு போட்டியாக வந்திருப்பார்.

கடவுள் முருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அக்காலத்தில் என்னை தேர்வு செய்தனர்.

இவர் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள்” என்றார் சிவகுமார்.

ரெமோ ட்ரைலர் பார்த்து தனுஷ் என்ன சொன்னார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று உலகம் முழுவதும் தனுஷ் நடித்த தொடரி படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் வெற்றி பெற தனுஷை வாழ்த்தியிருந்தார் சிவகார்த்திகேயன்.

இதற்கு பதிலளித்த தனுஷ், நன்றி தெரிவித்து விட்டு, ரெமோ ட்ரைலர் சூப்பர் என பாராட்டியிருந்தார்.

தனுஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகை தாண்டியும் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் நட்பு பாராட்டி வருகின்றனர்.

இதனிடையில் இருவருக்கும் மோதல் என்றெல்லாம் கூறப்பட்டது.

இதனைப் பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இன்று உலகம் முழுவதும் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி வெளியாகிறது.

எனவே, தனுஷிற்கும் இப்படக்குழுவினருக்கும் சிவகார்த்திகேயன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜோக்கர்.? கொம்பன்.? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கும் சிங்கம் 3 மற்றும் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள தானா சேர்ந்த கூட்டம் படங்களை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் முடிவாகி விட்டது.

சூர்யா நடிப்பில் 36வது படமாக இது வளரவிருக்கிறது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தை ஜோக்கர் பட இயக்குனர் ராஜீமுருகன் இயக்கலாம் என ஒரு பக்க தகவலும் மறுபக்கம் கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சூர்யாவின் அடுத்த இயக்குனர் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால், இதற்கான அறிவிப்பை ஓரிரு தினங்களில் சூர்யா தரப்பில் இருந்து எதிர்பார்க்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

காஷ்மோரா டிரைலர் & இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோக்கர் படத்தை தொடர்ந்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் காஷ்மோரா.

கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

More Articles
Follows