கஜாவால் கடுமையான பாதிப்பு; அனைவரும் உதவ லாரன்ஸ் வேண்டுகோள்

All Tamil peoples must help Gaja cyclone affected peoples says Lawranceகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பகுதி மக்களை சந்தித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

அதன்பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

அன்பு நண்பர்களுக்கு

வணக்கம்…

கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னூருக்கு வந்து பார்த்தேன்.

நாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்..

நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு. அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும். அவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வர வேண்டும். இது தான் என் தாழ்மையான வேண்டுகோள்…

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

All Tamil peoples must help Gaja cyclone affected peoples says Lawrance

Overall Rating : Not available

Latest Post