ஆன்மிகத்தில் அப்பா வழியா? அக்கா வழியா? – அக்ஷராஹாசன்

ஆன்மிகத்தில் அப்பா வழியா? அக்கா வழியா? – அக்ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal familyகமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷராஹாசன் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் சமீபத்திய பேட்டியில் இவரது ஆன்மிக நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது.

அதில்… ‘‘உங்கள் அப்பா பகுத்தறிவாளர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அக்கா ஸ்ருதியோ கடவுள் நம்பிக்கை உள்ளவர். நீங்கள் எப்படி?’’ என்று கேட்டனர்.

அதற்கு அக்ஷராஹாசன் பதிலளித்துள்ளதாவது…

‘‘கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா ஒரே மாதிரிதான். எனக்கும் நம்பிக்கை இல்லை.

ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு நாங்கள் மதிப்பளிப்போம்.

எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்த வழிபாடு அல்ல.

வாழ்வியலோடு கலந்த அதில் நிறைய விஷயங்களை கற்றுவருகிறேன்.’’ என்றார்.

Aksharahassan revealed her thoughts of Faith in God

ரஜினி-விஜய்-அஜித்-தனுஷ்-சிம்பு ஆகியோர் பற்றி சிவகார்த்திகேயன்

ரஜினி-விஜய்-அஜித்-தனுஷ்-சிம்பு ஆகியோர் பற்றி சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan chatவேலைக்காரன் படத்தை தொடர்ந்து பொன்ராம் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவற்றில் சில இதோ உங்களுக்காக…

 • விகடன் விருது விழாவில் ரஜினி சாருக்கு அருகில் நின்றேன். தயக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் அது.
 • விவேகம் படத்தில் அஜித் லுக் டிரெப்பிக். நிறைய ஆச்சரியங்கள் படத்தில் இருப்பதாக கேள்விபட்டேன். அந்த படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க நினைத்திருக்கிறேன்.
 • நான் டிவியில் பண்புரிந்த போதே என்னை உற்சாகப்படுத்தியவர் விக்ரம். நான் சினிமாவில் ஹீரோவாக வருவேன் என அப்போதே அவர் நம்பினார்.
 • விஜய் இந்திய சினிமாவில் சிறந்த எண்டர்டெயினர்
 • சிம்பு திறமையானவர்
 • தனுஷ் ஒரு சிறந்த நடிகர்
 • ஹன்சிகா சிறந்த தோழி
 • சதீஷ் கூட இருந்தா சிரிக்காமல் இருக்க முடியாது. அவருக்கு நகைக்சுவை உணர்வு அதிகம்.
 • அருண்ராஜா காமராஜ் என் நெருங்கிய நண்பர். அவர் விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
 • என் வெற்றிக்கு காரணம் அம்மா மற்றும் என் மனைவியின் அன்பே காரணம்.
 • அப்பா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அவரையும் அவரது அன்பையும் இழந்து நிற்கிறேன்.
 • என்னுடன் படித்த நண்பர்களே என் பலம். இன்றும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.

என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Sivakarthikeyan talks about Rajini Vijay Ajith Dhanush Simbu

பில்லாவாக மாறும் கெட்டவன்.? சிம்பு ரியாக்சன் என்ன தெரியுமா?

பில்லாவாக மாறும் கெட்டவன்.? சிம்பு ரியாக்சன் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu clarifies his next project and request to Mediaசிம்பு நடித்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

எனவே அதிரடியான ஹிட் படத்தை உடனே கொடுக்க வேண்டியில் நிலையில் சிம்பு இருக்கிறார் என்பதை பார்த்தோம்.

அப்படம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கெட்டவன் படமாக இருக்கும் என சில தகவல்களும் அல்லது பில்லா3 படமாக இருக்கும் எனவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் கெட்டவன் என்ற படமே பில்லா3 படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து கூறியுள்ள சிம்பு, நானே என் படத்தை பற்றி சொல்கிறேன். அதுவரை மீடியாக்கள் பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Simbu clarifies his next project and request to Media

STR‏Verified account @iam_str
Kind & humble request to media, pls stop speculating about my next project. Thanks for your support and pls wait for official announcement.

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் அயன்2 அப்டேட்ஸ்

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் அயன்2 அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayan suriya posterகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா தமன்னா இணைந்து நடித்த படம் அயன்.

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இப்படத்தின் வசனங்களை சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் இணைந்து சுபா என்ற பெயரில் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அயன்2 படம் உருவாக வாய்ப்புள்ளதாக இவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Suriya KV Anand combo Ayan movie sequel updates

திமுகவை ஆதரிக்கிறாரா..? உளறியவர்களுக்கு உலகநாயகன் பதிலடி

திமுகவை ஆதரிக்கிறாரா..? உளறியவர்களுக்கு உலகநாயகன் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am against corruption not support any political party says Kamalhassanஅதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் ஊழல்களை கமல் விமர்சித்திருந்தார்.

எனவே கமல் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்.

மேலும் புரட்சியாளர்கள் தோல்வியையும் மரணத்தையும் கண்டு பயப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

I am against corruption not support any political party says Kamalhassan

அடுத்த படத்தை தலைப்புடன் அறிவித்தார் கமல்ஹாசன்

அடுத்த படத்தை தலைப்புடன் அறிவித்தார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan next movie titled Thalaivan Irukkiraanபிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ட்விட்டர் பதிவுகள் என பிஸியாக ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் தன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.

தற்போது சபாஷ் நாயுடு என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் உருவாகிவருகிறது.

இதனிடையே விஸ்வரூபம்2 படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் தலைவன் இருக்கிறான் என்று தலைப்பிடப்பட்ட தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

தலைவன் இருக்கிறான் என்ற டைட்டில் இவரது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் பல ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhassan next movie titled Thalaivan Irukkiraan

More Articles
Follows