தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டி.சிவா தயாரிப்பில் ‘மூடர்கூடம்’ பட புகழ் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அக்னி சிறகுகள்’.
ஆக்ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் என 2 விஜய்கள் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைத்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றதை அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை அக்ஷராஹாசனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.
Aksharahassan celebrated her birthday at Agni Siragugal spot