வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் கலக்கிய அக்‌ஷரா ரெட்டி

Akshara Reddy shares her experience in Villa to Village show and her Modelling professionவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி வில்லா டூ வில்லேஜ்.

இதில் மாடலான அக்‌ஷரா ரெட்டி பங்கேற்றார். சென்னையை பூர்விமாக கொண்ட இவர் மாடலிங் செய்து வருகிறார்.

நல்ல உயரம், நல்ல உடல்வாகு கொண்ட இவர் பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 13 பெண்கள் கலந்துக் கொண்டுள்ளனர். சிட்டியில் வாழ்ந்த இவர்கள் 40 நாட்கள் கிராமத்தில் தங்க வேண்டும்.

அந்த 40 நாட்கள் முழுவதும் பணம், செல்போன், டிவி, பேன், ஏசி ஆகியவற்றை இவர்கள் பயன்படுத்தக் கூடாது.

அந்த நாட்களில் இவர்களை அங்கு ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதித்து தங்கள் உணவு மற்றும் இதர தேவைகளை பூர்த்திக் செய்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தன் வில்லா டூ வில்லேஜ் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது…

என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலம் இதுதான் என்பேன். எங்களுக்கு சிறைய சேலஞ்சிங் டாஸ்ட்க்குகள் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஏர் உழுதுதல், தென்னை மரம் ஏறுதல், சேற்று மணலில் சண்டை இடுதல், தென்னை மரத்தில் தொங்க வேண்டும் ஆகியவற்றை செய்ய வேண்டும்.

இந்த போட்டியில் வெற்றிப் பெற்றால் அவர்தான் அந்த வீட்டின் மஹாலட்சுமி என்பார்கள்.

ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் தொங்கி வெற்றிப் பெற்று நான்தான் அந்த வீட்டின் முதல் மஹாலட்சுமி ஆனேன்.

நான் தினமும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வேன்.

எனவே என்னால் அவர்கள் கொடுத்த அனைத்து டாஸ்க்கையும் எளிதாக செய்ய முடிந்தது.

மீதமுள்ள 12 பேரும் என்னை கடுமையான போட்டியாளர் என்றார்கள்.

ஒரே வீட்டில் 12 பேருடன் வாழ்வது புதிய அனுபவமாக இருந்தது. அங்கே உள்ளவர்களுடன் நாமே எல்லாம் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும்.

இதில் மிகவும் என்னை பாதித்த விஷயம் என்னவென்றால், என் குடும்பத்தை இத்தனை நாட்கள் நான் பிரிந்ததே இல்லை. அவர்களிடம் பேசாமல் இருந்ததும் வருத்தமாக இருந்தது.

மொத்தத்தில் கிராமத்தில் வாழ்ந்த அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. என்னை நானே பார்த்துக் கொள்ள அந்த வீடு எனக்கு கற்பித்து கொடுத்தது. எந்த சூழ்நிலையிலும் தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சி எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.

இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் விஜய் டிவிக்கும் என் நன்றிகள் என தெரிவித்தார் இந்த மஹாலட்சுமி என்ற அக்ஷரா ரெட்டி.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பே 150க்கும் மேற்பட்ட ரேம்ப் வாக் மற்றும் பேஷன் ஷோக்களில் கலந்துக் கொண்டுள்ளார்.

இதில் பிரபலமான பாலிவுட் நடிகைகள் மாதுரி தீட்ஷித் மற்றும் ஜீகி சாவ்லாவுடனும் இவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல நடன கலைஞர்கள் மற்றும் டிசைனர்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார்.

இவை தவிர குமரன் சில்க்ஸ், யுனிவர்சல் செல், பிஎஸ்என்எல், சௌபாக்கிய வெட் கிரைண்டர், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல விளம்பரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் அழகு சம்பந்தமான பல நிகழ்ச்சிகளில் இவர் நடுவராக இருந்துள்ளார்.

தற்போது சப்தம் விஷன் தயாரித்து வரும் ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இது ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

காசு மேல காசு என்ற இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

விஜித் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ப்ரான்சிஸ் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார்.

இவை தவிர 2 வெப் சீரிஸ் படங்களிலும் இவர் ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்துள்ள ஹாப்பி நியூ இயர் என்ற குறும்பட பர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் இவர் பேச அறிந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Akshara Reddy shares her experience in Villa to Village show and her Modelling profession

Overall Rating : Not available

Latest Post