அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் விக்ரம் மகன் ஜோடியாக கமல் மகள்..?

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் விக்ரம் மகன் ஜோடியாக கமல் மகள்..?

vikram and dhruvதெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி.

இதன் தமிழ், மலையாள மற்றும் கன்னட டப்பிங் மற்றும் ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் இயக்குனர் யார்? நாயகி யார்? என்ற விவரங்கள் இதுவரை தெரியாமல் இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் நாயகியாக கமல் மகள் அக்ஷராஹாசன் நடிக்க வாய்ப்பிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அவர் இல்லையெனில் ஷ்ரியா ஷர்மாவும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இவர் சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு மகளாக நடித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

விக்ரம்-சிவகார்த்திகேயன் இணைந்து தரும் கிறிஸ்துமஸ் ட்ரீட்

விக்ரம்-சிவகார்த்திகேயன் இணைந்து தரும் கிறிஸ்துமஸ் ட்ரீட்

vikram and sivakarthikeyanவிக்ரம், தமன்னா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச்.

இதன் டீசரை வருகிற அக். 18ல் தீபாவளி விருந்தாக வெளியிடுகின்றனர்.

இது மெர்சல் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் காண்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை நவம்பரில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.

எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான 22ஆம் தேதி வெளியிட வாய்ப்புகள் உள்ளதாம்.

இதே நாளில்தான் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

மெர்சல் அப்டேட்ஸ்; நெல்லை ரசிகர்கள் மட்டும் செம லக்கி

மெர்சல் அப்டேட்ஸ்; நெல்லை ரசிகர்கள் மட்டும் செம லக்கி

mersal posterபல பிரச்சினைகளை தாண்டி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

எனவே அதன் புரமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் சினிமாஸ் நிறுவனம் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரவிருக்கிறது.

முதல்நாள் முதல் காட்சியன்று ஆளப்போறான் தமிழன் மற்றும் மெர்சல் அரசன் ஆகிய இரு பாடல்களை மட்டும் இரண்டு முறை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்களாம்.

இப்போ சொல்லுங்க அந்த ரசிகர்கள் லக்கிதானே…

Double treat for Nellai district Vijay fans on Diwali

விஜய் ரசிகர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி தரும் ஜிவி. பிரகாஷ்

விஜய் ரசிகர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி தரும் ஜிவி. பிரகாஷ்

GV Prakashs Mersal treat for Vijay fansவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் தென்னிந்திய அளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் நேரிடை தமிழ் படமாகவே வெளியாகிறது.

தெலுங்கில் அதிரிந்தி என்று பெயர் மாற்றம் செய்து, டப் செய்து வெளியிடுகின்றனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள வில்லு வில்லு என்ற பாடலை தெலுங்கில் தன் சொந்த குரலில் ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.

இப்பாடலை இன்று அக். 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட போவதாக தெரிவித்து அந்த புரோமோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

GV Prakashs Mersal treat for Vijay fans

https://www.youtube.com/watch?time_continue=1&v=iAsEdlqZXtc

செல்வராகவன்-சூர்யா இணைந்துள்ள பட ரிலீஸ் தகவல்

செல்வராகவன்-சூர்யா இணைந்துள்ள பட ரிலீஸ் தகவல்

nenjamகவுதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பாக மதன் இப்படத்தை வெளியிட உள்ளார்.

சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவே, பின்னர் மீண்டும் சென்சார் செய்யப்பட்டு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் வெளியீட்டுக்கு தயாரானாலும் ரிலீஸ் தேதியில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டது.

தற்போது நவம்பர் 3-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

Selvaraghavan directorial Nenjam Marappathillai release date

எல்லா ஜாதியினரும் அர்ச்சகர்; பெரியார் கனவை நிறைவேற்றிய முதல்வருக்கு கமல் நன்றி

எல்லா ஜாதியினரும் அர்ச்சகர்; பெரியார் கனவை நிறைவேற்றிய முதல்வருக்கு கமல் நன்றி

kamal iyer dasavatharam

கேரளா திருவிதாங்கூர் தேவசம் போர்டு, 63 அர்ச்சகர்களைப் புதிதாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதில், 36 பேர் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அர்ச்சகர்கள் தேர்வில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தகுதி, திறமை அடிப்படையில் தேர்வு நடைபெற்றதாகவும் கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.

அதுபோல் சபரிமலை கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

நாட்டில் முதன்முறையாக, பிராமணர் அல்லாதோர் திருவிதாங்கூர் தேவசம் போர்டால் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த முறை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த பட வேண்டும் என வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு கேரள முதல்வருக்கு தன் நன்றியினை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இதன்மூலம் பெரியாரின் கனவு நிறைவேறியதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Kamal Haasan hails non Brahmin priests appointment in Kerala

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.

Bravo Travancore Dewasom board.Salute to Kerala CM Mr. Pinarayi Vijayan.4 appointing 36 non-Brahmin priests. Periar’s dream realized

More Articles
Follows