தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சில சினிமாக்கள் மட்டுமே எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பை தராது.
படத்தின் மொத்த காட்சிகள் நமக்கு மனப்பாடமாக இருந்தாலும், தியேட்டரில் திரையிட்டாலும் அதனைப் பார்த்துவிடுவோம்.
தமிழில் அப்படியான படங்கள் சில நடிகர்களுக்கு அமைந்துள்ளது.
எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், ரஜினியின் பாட்ஷா ஆகிய படங்களை அடிக்கடி திரையிட்டு வருகின்றனர் தியேட்டர் அதிபர்கள்.
இந்த வரிசையில் தற்போது அஜித்தின் வேதாளம் படமும் இணையக்கூடும் எனத் தெரிகிறது.
இப்படம் வெளியாகி ஒன்றரை வருடங்களை மட்டுமே கடந்துள்ள நிலையில், இப்படத்தை அடிக்கடி திரையிட்டு வருகின்றனர்.
மதுரையில் உள்ள மீனாட்சி பேரடைஸ் தியேட்டர் வேதாளம் படத்தை மீண்டும் திரையிட்டுள்ளனர்.