அஜித்தின் ‘தல-57’ படத்திற்கு இதான் டைட்டிலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து, சிவா இயக்கத்தில் தற்போது 3வது முறையாக நடித்து வருகிறார் அஜித்.

இவர்களது முந்தைய படங்களின் தலைப்பு படத்தின் சூட்டிங் முடிவடையும் நிலையில் வெளியிடப்பட்டது.

எனவே தற்போது உருவாகி படத்திற்கும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.

அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு வெற்றி விநாயகம் என தலைப்பிடப்பட உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

இப்படத்தை அடுத்த வருடம் 2017 மே மோதம் வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதி-டி.ஆர் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.வி.ஆனந்த இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது முதல் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

இதில் டி.ராஜேந்தரும் இணைந்துள்ளபடியால், நிச்சயம் இது வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்றனர் ரசிகர்கள்.

இவர்களுடன் பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன், ஜெகன், அக்ஷாதீப் சாய்கல் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது 18வது படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை சில நொடிகளுக்கு முன் வெளியிட்டனர்.

இப்படத்திற்கு கவண் என தலைப்பிட்டுள்ளனர்.

தனுஷுடன் மும்பை பறந்த சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கவுள்ள படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் ராஞ்சனா படத்தில் சோனம் கபூரூம் நிடிக்கிறாராம்.

எனவே அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தனுஷுடன் சௌந்தர்யா மும்பைக்கு சென்றிருக்கிறாராம்.

‘தீபாவளிக்கு பைரவா ட்ரீட் இருக்கு; ஆனா…’ புதிர் போடும் பரதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா அடுத்த வரும் பொங்கல் வெளியீடாக வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் பரதன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…

நிச்சயமாக விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து இருக்கிறது. ஆனால் அது எந்த மாதிரியான விருந்து என்பதை இப்போதைக்கு கூற முடியாது.

தற்போது டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கிறேன்” என புதிராக தெரிவித்துள்ளார்.

அடக்குனா; அடங்குற ஆளா அஜித்..? – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சில வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர் அஜித்.

இதனாலேயே இவருக்கு மன்றங்கள் இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்கு குறைவில்லை.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தை பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

ரெட், வில்லன், வரலாறு உள்ளிட்ட அஜித்தின் பெரும்பாலான படங்களை தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.

ஒரு சூழ்நிலையில் அஜித்துடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் இருந்துள்ளார்.

எனவே அஜித் கால்ஷீட் வேண்டும் என திருப்பூர் சுப்ரமணியத்திடம் சக்கரவர்த்தி வேண்டுகோள் விடுத்தாராம்.

அவரும் அஜித்திடம் இதுகுறித்து பேசியுள்ளார்.

‘என்னுடைய தற்போதைய மார்க்கெட்டில் உள்ள சம்பளத்தில் பாதி கொடுத்தால் அவருக்கு ஒரு படம் நடித்து தருகிறேன்.

ஆனால் அதுதான் அவரது பேனருக்கு கடைசி படமாக இருக்கும்” என்றாராம் அஜித்.

அப்படிதான் ஒரு படம் உருவானது.

நான் இதுகுறித்து அஜித்திடம் பேசிய போது, அவர் மிகவும் பணிவாகவும் நேர்மையாக நடந்துக்கொண்டார்.

இது விஷயமாக எந்தவிதமான கட்டப் பஞ்சாயத்தோ நடக்கவில்லை.

அவரை மிரட்ட முடியுமா? அதற்கு அடங்குற ஆளா அஜித்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நடிகரால் ஐஸ்வர்யா ராய் படத்திற்கு வந்த மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்’.

இவருடன் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆனால் பாகிஸ்தான் நடிகரால் இப்படத்திற்கு தற்போது மிரட்டல் வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியப் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க கூடாது என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால், இப்படத்தை 28ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு ராஜ்தாக்கரே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், படத்தை இயக்கிய இயக்குனர் கரண் ஜோகர், தயாரிப்பாளர் முகேஷ் பட் மற்றும் விஜய் சிங் ஆகியோர் மும்பை போலீஸில் இப்படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

எனவே போலீஸ் பாதுகாப்புடன் இப்படம் வெளியாக உள்ளது.

More Articles
Follows