ஜேஎஸ்கே தயாரிப்பில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித்-விக்ரம் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’.

இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்

இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா.

இவர்களுடன் கிறிஸ்துவ பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.

கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை.

ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஹாலிவுட் பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

‘ரிச்சி’ ‘நிமிர்’ படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் H.C.வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

மாயா, துருவங்கள் பதினாறு, டிக் டிக் டிக் உட்பட பல படங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் சிங்க் சினிமா ஒலி வடிவமைப்பிற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றுகிறார்.

படம் பற்றி இயக்குனர் லோஹித் கூறுகையில், “கோவாவில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படம் தயாராகியுள்ளது.

மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல், அதேசமயம் இரண்டு மணி நேர மிரட்டலான ஹாரர் படமாக இது தயாராகியுள்ளது. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாரிடம் இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.

இந்தப்படத்திற்காக கோவாவில் 3௦ லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒரே கட்ட படப்பிடிப்பாக இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்” என்றார்

ஹாரர் படங்களில் தனித்துவம் மிக்க படமாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; பிரியங்கா த்ரிவேதி, பேபி யுவினா, ‘கோலிசோடா’ மதுசூதனன் மற்றும் சிலர்.

இசை ; அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு ; H.C.வேணு
படத்தொகுப்பு ; ரவிச்சந்திரன்
ஒலிப்பதிவு ; ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன்
ஒலி வடிவமைப்பு ; சிங்க் சினிமா
டைரக்சன் ; லோஹித்
தயாரிப்பு ; ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஜே.சதீஷ்குமார்.

விஷாலின் இரும்புத்திரை-யை வாங்கிய விக்ரம் படத் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் `இரும்புத்திரை’.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஷால் தயாரித்துள்ள இப்படத்தை 2018 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இதன் கேரள ரிலீஸ் உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை பெரும் தொகைக்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் நடித்த இருமுகன் படத்தை சிபு தமீன்ஸ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலிலிருந்து யூ-டர்ன் போட்டு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் நாயகனாக மாறி வருவதால் அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் அரசியல் பிரவேசம் குறித்து கூறும்போது தலைவன் இருக்கிறான் என்ற படத்தை அடுத்து இயக்கபோவதாக அறிவித்தார்.

மேலும் கைவசம் உள்ள விஸ்வரூபம்2 மற்றும் சபாஷ் நாயுடு படங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் கமல் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் திடீரென மீண்டும் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட விஸ்வரூபம் 2 படத்தை தொடங்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தை 2018 ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விமலுடன் இணைந்தார் பிக்பாஸ் ஜூலி; பொங்கலுக்கு படம் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி நடித்துள்ள படம் மன்னர் வகையறா.

பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

A3V சினிமாஸ் நிறுவனம் சார்பில் என். விமல் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ளராம். அந்த படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் 2018 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

BiggBoss fame Julie joins with Vimal in Mannar Vagera

மீண்டும் இணைந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் தயாரித்து நடித்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.

காமெடியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இதே கூட்டணி மீண்டும் இன்று இணைந்துள்ளது.

எழில் இயக்கவுள்ள புதிய படத்திலும் விஷ்ணுவிஷால் நாயகனாக நடிக்க, நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை சிவாஜிகணேசன் குடும்பத்தை சேர்ந்த ஈஷான் நிறுவனம் சார்பாக துஷ்யந்த் மற்றும் அபிராமி தயாரிக்கின்றனர்.

முருகன் என்பவர் கதையமைக்க, டி. இமான் இசையமைக்க, ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதுகிறார்.

இப்படம் இன்று பூஜையுடன் ஆரம்பம் ஆனது.

Nivetha Pethuraj romance with Vishnu Vishal in Ezhil directorial

ஞானவேல்ராஜா தயாரிப்பில் கஜினிகாந்த் ஆக மாறும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிக்ஸ்பேக் உடல், அசத்தல் உருவம் என அதிரடியாக வலம் வந்தாலும் ஆர்யாவுக்கு அண்மைக்கால படங்கள் சரியாக அமையவில்லை.

இறுதியாக வெளியான ‘கடம்பன்’ படமும் அவரை கவிழ்த்து விட்டது.

அதன்பின்னர் அமீர் இயக்கத்தில் ஆர்யாவும், அவர் தம்பி சத்யாவும் இணைந்து நடித்து வந்த ‘சந்தனத்தேவன்’ படமும் பாதியில் நின்றது.

இதனையடுத்து மிகப்பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’படத்திலும் கமிட்டானார் ஆர்யா.
ஆனால் அது அறிவிப்போடு நின்றுவிட்டது.

இந்நிலையில், இன்று ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை ‘ஹர ஹர மஹாதேவஹி’ புகழ் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கவுள்ளார்.

‘வனமகன்’ படப்புகழ் சாயிஷா நாயகியாக இப்படத்திற்கு ‘கஜினிகாந்த்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா நடிக்க, ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Arya Sayyesha starring in Ghajinikanth in Studio Green production

More Articles
Follows