தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது பல நடிகர்கள் டூப் கலைஞர்களையே பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஒரு சிலர் நடிகர்கள் தாங்கள் அந்த காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பார்கள். அதில் முக்கியமானவர் நடிகர் அஜித்.
இவர் பலமுறை ரிஸ்க் எடுத்து அடிப்பட்டு சிகிச்சைக்காக தன் உடலில் ஆப்பரேசன் செய்துள்ளார்.
இந்த நிலையில் வலிமை படத்திலும் ஒரு விபத்து ஏற்பட்டது.
அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
பைக் ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கும்போது அஜித் கீழே விழுந்த வீடியோ வைரலானது. ஆனால் அந்த காயங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு காட்சிகளை உடனடியாக முடித்தும் கொடுத்தார் அஜித்.
தற்போது அஜித்துக்கு ஒரு டாக்டர் காயத்திற்கு மருந்து போட்டுவிடும் புகைப்படம் ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.
Ajith kumar’s doctor reveals he Was close to suffering paralysis, says the actor worries about his fans