நேபாளம் – பூடான் டூர்.. பிஎம்டபிள்யூ பைக் பரிசளித்த அஜித்.; யாருக்கு தெரியுமா.?

நேபாளம் – பூடான் டூர்.. பிஎம்டபிள்யூ பைக் பரிசளித்த அஜித்.; யாருக்கு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித் ஒரு பைக் ரேஸ் பிரியர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான்.

இவர் அடிக்கடி தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் இதை முழு நேர பணியாக அண்மை காலமாக செய்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நேபாளம் பூடான் முழுக்க பைக்கில் சுற்றி வந்தார்.

இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்து அவருடன் பயணம் சென்றவர் சுகத் சத்பதி. இந்த பயணம் மே முதல் வாரம் முடிவடைந்தது.

இந்த நிலையில் சுகத் சத்பதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபள்யூ பைக் ஒன்றை அவருக்கு பரிசளித்தாராம் அஜித்.

நடிகர் அஜித் தனக்கு பைக் வாங்கி பரிசளித்ததை தற்போது தான் வெளிப்படுத்தியுள்ளார் சுகத் சத்பதி.

Ajith gifted bmw bike to his fan

தளபதியை மதிக்காத லவ் டுடே பிரதீப்.. விஜய் ரசிகர்கள் கண்டனம்

தளபதியை மதிக்காத லவ் டுடே பிரதீப்.. விஜய் ரசிகர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக களமிறங்கிய இளம் திறமையாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பிரதீப் ரங்கநாதன்.

இந்நிலையில் விஜய்யின் ‘தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிரதீப் ரங்கநாதன் ட்வீட் செய்துள்ளார், அதில் “வாழ்த்துக்கள் @archanakalpathi mam @vp_offl sir @thisisysr sir #Thalapathy68 . என பதிவிட்டுள்ளார் . தயாரிப்பாளர் , இயக்குனர் , இசையமைப்பாளர் என ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு வாழ்த்திய அவர் தளபதி விஜய் பெயரை குறிப்பிட்டு வாழ்த்தவில்லை என விஜய் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Pradeep Ranganathan insulting Vijay over ‘Thalapathy 68’

‘கேப்டன் மில்லர்’ & ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ அப்டேட்.; செஞ்சுரி அடிக்கும் ஜிவி பிரகாஷ்

‘கேப்டன் மில்லர்’ & ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ அப்டேட்.; செஞ்சுரி அடிக்கும் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார் ஜீவி பிரகாஷ் குமார்.

தற்போது பாடகராகவும் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

இசையமைப்பாளராக 100வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் விரைவில் ஒரு இசை கச்சேரியை கோவையில் நடத்த உள்ளார்.

இது தொடர்பான விழாவில் ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டு பேசியதாவது..

“வெயில் படத்தின் மூலம் அறிமுகமான நான் விரைவில் 100வது படத்துக்கு இசையமைக்கிறேன்.

இந்த சமயத்தில் கோவையில் என்னுடைய முதல் கான்செர்ட்டை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அதன் பின்னர் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

“ஒரு படத்தின் கதைக்கு எது தேவையோ அதற்கான இசைக்கருவிகளை பயன்படுத்துகிறோம். ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கு பாரம்பரிய இசை கருவிகளை பயன்படுத்தலாம்.

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ் நடிக்கிறார். அது மிகப்பெரிய பட்ஜெட் படம். அது கூடிய விரைவில் நடந்தால் மிகவும் சந்தோஷம்” என்றார்.

மேலும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிடலாம் என முடிவு செய்திருந்தோம்.

ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தொலைவில் இருப்பதால் இப்போது அதனை வெளியிடவில்லை.” என்றார்.

GV Prakash about Captain Miller and Aayirathil Oruvan 2

60 வயது கேன்சர் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஷாருக்கான்

60 வயது கேன்சர் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் ரசிகர் – ரசிகைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 60 வயது ஷிவானி என்ற ஒரு ரசிகை ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த ரசிகை சமீபத்தில் தான் இறப்பதற்க்குள் ஷாருக்கானை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளார்.

இந்த தகவல் ஷாருக்கானுக்கு சென்றடையவே அவர் எதிர்பாராத விதமாக ஷிவானியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.

மேலும் அவரின் மருத்துவ செலவுகளை ஷாருக்கான் ஏற்பதாகவும் விரைவில் கொல்கத்தா வந்து நேரில் சந்திப்பதாகவும் உறுதி அளித்து இருக்கிறார்.

இந்த செய்தி அந்த ரசிகைக்கும் அந்த குடும்பத்தாருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கூடுதல் தகவல்…

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Actor Shah Rukh Khan fulfills the wish of a 60-year-old cancer-survival fan

சரத்குமார் – விதார்த் கூட்டணியில் சஸ்பென்ஸ் கதையை சொல்லும் ‘சமரன்’

சரத்குமார் – விதார்த் கூட்டணியில் சஸ்பென்ஸ் கதையை சொல்லும் ‘சமரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர்.

இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார்.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள்.

சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், இவர்களுக்கு எதிர் கதாநாயகனாக நடிக்க மலையாள நடிகர் ஆர். நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஒரு இராணுவ அதிகாரி மற்றும் IAS அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ படம். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால்
பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: குமார் ஸ்ரீதர்,
இசை: வேத் சங்கர் சுகவனம்,
கலை இயக்குநர்: ஸ்ரீமன் பாலாஜி,
பாடல் வரிகள்: மணி அமுதன்,
சண்டைப்பயிற்சி: விக்கி,
காஸ்ட்யூமர்: எஸ். நாக சத்யா,
தயாரிப்பு மேலாளர்: மணி தாமோதரன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
படங்கள்: பாலாஜி.

Sarath Kumar – Vidharth’s new film is titled Samaran

ரஜினி – மாஸ்.. கமல் – ஆக்டிங்.. விவேக் – பேரதிர்ச்சி.. விஜய்சேதுபதி – ஆசான்.; – மதுரா

ரஜினி – மாஸ்.. கமல் – ஆக்டிங்.. விவேக் – பேரதிர்ச்சி.. விஜய்சேதுபதி – ஆசான்.; – மதுரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி, விவேக், மேகா ஆகாஷ், மதுரா நடிப்பில் வேங்கட கிருஷ்ணா ரோஃநாத் இயக்கத்தில் மே 19ம் தேதி திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”.

இப்படத்தில், லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தன் இசைக் குழுவுடன் வரும் “ஜெசி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகை தான் மதுரா.

தற்போது, ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்திருந்த சிறப்பு பேட்டியின் போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தை பற்றி உங்களது கருத்து என்ன என்ற கேள்விக்கு,

என் அம்மாவின் பூர்வீகம் இலங்கை, யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதையோ ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதை என்பதால் என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தப் படம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவே நான் பார்க்கிறேன். கண்டிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் இது நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவும் அமையும் என்று நான் கருதுகிறேன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,

தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜய் சேதுபதி அவர்கள், என் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது என்னை பார்த்ததும் புரிந்துகொண்டு எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து பதட்டத்தை போக்கி எனக்கு ஒரு ஆசனாக இருந்தார். அவருடன் இந்தப் படத்தில் பயணிக்க வாய்ப்பு தந்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சின்னக் கலைவாணர் விவேக் அவர்களைப் பற்றி உங்களின் கருது,

நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பேரானந்தம், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசியது பழகியது அனைத்தும் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது.

எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய இடைவேளை இருந்தது அப்போது பியானோ அங்கிருந்தது அதில் எனக்கு முதல்வன் படத்தில் இருந்து பாடல் (குறுக்கு சிறுத்தவளே என் குங்குமத்த) என்ற பாடலை வாசிக்க கற்று கொடுத்தார், அதுமட்டுமல்ல நிறைய இளையராஜா பாடல்களை எங்களுக்கு வாசித்து காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார்..

ஆனால் அவரின் மறைவை எனக்கு மிகுந்த வேதனையை தந்தது, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரத்தை இழந்து விட்டோமே என்று.

மேகா ஆகாஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து,

என்னுடைய நடிப்பு பயணத்தில் முதல் நட்சத்திர நடிகையும் எனக்கு நல்ல தோழியும் ஆன மேகா ஆகாஷ் உடன் நடித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். எங்களது நட்பு என்றும் நீடிக்கும்.

சந்திரா ஆர்ட்ஸ் ப்ரொடக்சன் பற்றியும் ப்ரொடியூசர் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு,

நான் ஜெர்மனியில் இருந்து படப்பிடிப்புக்காக சென்னை வரும்போதெல்லாம் இந்த படத்தின் ப்ரொடியூசர்ஸ் அக்கரையாகவும் எனக்கு தேவையான வசதிகளையும் அனைத்தையும் ஒரு புதுமுக நடிகை என்று பார்க்காமல் தாய் வீட்டில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய சந்திரா ஆர்ட்ஸ் ப்ரொடக்சனுக்கு மிக்க நன்றி.

இயக்குனரைப் பற்றியும் அவரது பணியை பற்றியும் பகிர்ந்துகொள்ளுமாரு கேட்டதற்கு,

தமிழ் திரை உலகில் எத்தனையோ கதைகள் இருந்தாலும் தன் முதல் படத்தில் ஈழத் தமிழனின் கதையை ஆழமாகவும் நேர்த்தியாகவும் அழகாக வடிவமைத்து அதில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை எனக்கு தந்ததற்கு என்னுடைய இயக்குனருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

அவரைப் பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றியும் பகிர்ந்துகொண்ட அவர்,

நான் ஜெர்மனி நாட்டில் பெர்லின் மாநகரில் பிறந்தேன் என்னுடைய அப்பா ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்னுடைய தாயார் இலங்கையை யாழ்ப்பாண தமிழ் பெண், எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், நான் ஜெர்மன் நாட்டில் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்து பயிற்சிப்பட்டறையில் கடமை ஆற்றுகின்றேன்.

என்னுடைய சிறு வயதிலிருந்து தமிழ் மொழி அதை சார்ந்த கலைகளான பரதநாட்டியம் கர்நாடக சங்கீதம் மிருதங்கம் அனைத்தையும் கற்றுத் தெரிந்தேன் என் கல்லூரி நாட்களில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளும் வாங்கியுள்ளேன்.

தமிழ் மொழியில் உயர்தர கல்வியை முடித்து ஜெர்மன் பிராங்பேர்ட் நகரில் உள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியராகவும் தற்போது பணியாற்றுகிறேன்.

சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன், அது மட்டுமல்லாமல் ஜெர்மனில் மூன்று இசை வீடியோக்களில் நடித்துள்ளேன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்குள் எப்படி வந்தீர்கள் என்ற கேள்விக்கு,

ஜெர்மனியில் நான் செய்த மாடலிங் வீடியோக்கள் மற்றும் நான் நடித்த மியூசிக் ஆல்பம் மூலமாக எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கலைத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து பேசிய அவர்,

சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பின் மீதும் நடனத்தின் மீதும் ஈடுபாட அதிகம் நடிப்பில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு ஆசையாக மாறி அதற்காக அனைத்தையும் கற்றுக் கொண்டேன் அதற்காக கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டிருந்தேன், என்னுடைய ஆசைக்கும் கனவுக்கும் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் முக்கியமாக என்னுடைய பெற்றோருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் படத்தின் மீது உங்களுக்கு உண்டான புரிதல் பற்றிய கேள்விக்கு,

தமிழ் எனக்கு பிறப்பிலிருந்து ஊட்டப்பட்டது, நான் ஒரு தமிழ் பெண், சிறு வயதில் இருந்தே தமிழ் பேசி வளர்ந்ததால் தமிழ் திரைப்படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன், ஆனால் தமிழில் நடிக்கப் போகிறோம் என்றவுடன் தமிழில் எல்லா நடிகர் நடிகைகள் உடைய படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். ரஜினி சார் உடைய மாஸ், கமல் சார் உடைய நடிப்பு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுடைய இயல்பான நடிப்பு அனைத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன். நான் தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

படத்திற்கும் எனக்கும் ஆதரவு கொடுத்த என் ரசிகர்களுக்கும், தமிழ் மக்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Actress Madhura talks about kollywood celebrities

More Articles
Follows