அஜித் பட 900 டிக்கெட்க்ஸ் மற்றும் பணம் திருட்டு.; துணிச்சலான ரசிகர்கள்தான் போலயே..

அஜித் பட 900 டிக்கெட்க்ஸ் மற்றும் பணம் திருட்டு.; துணிச்சலான ரசிகர்கள்தான் போலயே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி மிக பிரம்மாண்டமாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் ‘துணிவு’.

இந்த படம் நாளை ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு குறைந்த டிக்கெட் விலையாக 1000 முதல் 3000 வரை ஒரு டிக்கெட் விற்கப்படுகிறது.

இந்த சினிமா டிக்கெட் கிடைக்க ரசிகர்கள் முண்டியடித்து ஆன்லைனிலும் நேரிலும் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் பகுதியில் காகிதப்பட்டறையில் அஜித் ரசிகர் மன்ற அலுவலகத்தில் துணிவு பட 900 முன்பதிவு டிக்கெட்டுகள் திருடப்பட்டு விட்டது.

மேலும் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான பணம் சுமார் ரூ.16000 திருடப்பட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அஜித் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த டிக்கெட்டுகளை அஜித் ரசிகர்களே திருடி இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Ajith film 900 tickets and money stolen

SHOCKING NEWS For Fans.; துணிவு வாரிசு சிறப்பு காட்சிகள் ரத்து.; அரசு உத்தரவு

SHOCKING NEWS For Fans.; துணிவு வாரிசு சிறப்பு காட்சிகள் ரத்து.; அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளன.

இரு நடிகர்களும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்பதால் இரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிக்கெட் ரூபாய் 1000 முதல் 2000 – 3000 வரை விற்கப்பட்டு வருகின்றது.

இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

நாளை நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும் அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படம் முதல் காட்சிகளாக திரையிடப்பட உள்ளன.

இந்த நிலையில் சற்று முன் அரசு தரப்பில் ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி துணிவு & வாரிசு படங்களுக்கான அதிகாலை காட்சிகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் நாளை ஜனவரி 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Varisu Thunivu special shows cancelled .. government orders

அஜித்தின் துணிவுக்கு மங்காத்தா கனக்ஷன் உள்ளதா?

அஜித்தின் துணிவுக்கு மங்காத்தா கனக்ஷன் உள்ளதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜீத்தின் பிளாக்பஸ்டர் படமான மங்காத்தாவுடன் துணிவு படத்திற்கு வலுவான தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

டிரைலர் மற்றும் கேரக்டர் போஸ்டர்களில் அவரது பெயரை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் காட்டப்படும் பாங்காக் தொடர்பு, துணிவு படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜுன் அஜீத் உடன் காணப்பட்ட புகைப்படம் இவற்றை வைத்து மங்காத்தா படத்திலிருந்து விநாயக் மகாதேவ் கேரக்டர் மீண்டும் இந்த படத்தில் வரலாம் என்று சொல்லப்படுகிறது.

அதை உறுதிப்படுத்த துணிவு படம் வெளியாகும் வரை காத்திருப்பதை தவிர வேற வழி இல்லை.

Does Ajith’s Thunivu have a Mankatha Connection?

சாந்தனுவின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…

சாந்தனுவின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் படம் ‘இராவண கோட்டம்’.

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை ‘கயல்’ ஆனந்தி நடிக்க, நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

படத்தின் டிரெய்லர் ஜனவரி 11, 2023 நாளை வெளியாக உள்ள நிலையில், சாந்தனு நடித்துள்ள ‘இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தை விரைவில் திரைக்கு வெளியிட தயாராக உள்ளது.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனைப் பற்றி குறிப்பிட்டு நடிகர் சாந்தனு எழுதினார், “உங்களுடன் இந்த பயணத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா அருமையான பாடல்களுக்கு நன்றி… அனைவரும் அதைக் கேட்க காத்திருக்கிறேன்” என கூறி இருந்தார்.

Shanthnu’s ‘Raavana Kottam’ First look poster released

ஆந்திராவில் வாரிசு படத்தை பிரமோட் செய்ய வருகிறாரா விஜய்?

ஆந்திராவில் வாரிசு படத்தை பிரமோட் செய்ய வருகிறாரா விஜய்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பரபரப்பான வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

படத்தின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்த தளபதி விஜய் ஹைதராபாத் வருவார் என்று தில் ராஜு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக தளபதி விஜய் ஹைதராபாத் வரவுள்ளார்.

ஜனவரி 11ம் தேதி படம் வெளியானால் கஷ்டமாக இருந்திருக்கும்.

இப்படம் ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளதால், தெலுங்கு ப்ரோமோஷனுக்கு விஜய்யை அழைத்து வர பேசி வருகிறேன்,” என்றார்.

Will Vijay promote Varisu in Andhra?

துணிவு – வாரிசு டிக்கெட் 3000 வரை விற்பனை.; உதயநிதிக்கு உதவும் அரசு.; கிழிக்கும் பாஜக பிரமுகர்

துணிவு – வாரிசு டிக்கெட் 3000 வரை விற்பனை.; உதயநிதிக்கு உதவும் அரசு.; கிழிக்கும் பாஜக பிரமுகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு & அஜித் நடித்த துணிவு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இந்த இரு படங்களுக்கும் டிக்கெட் விலை 3000 வரை விற்கப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் பாஜக பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“பொங்கலன்று வெளியாகும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ள (Thunivu & Varisu) படங்களின் டிக்கெட்டுகள் வெளிப்படையாக ரூபாய். 1,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த சட்ட விதி மீறல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவகாரம். பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் ‘சூது’ இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை.

இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மாநில அரசினுடையது. சட்ட விரோதமாக செயல்படும் இந்த ஒட்டுமொத்த அமைப்பை முடக்குவதோடு, திரைப்பட மாஃபியாக்களை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது.

ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதோடு, தமிழக காவல் துறை கை கட்டி. வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சுரண்டும் கேவலமான அராஜகம் இது. சூதை ஒழிக்கப்போவதாக முழங்கி கொண்டிருக்கும் அரசின் கொடூர முகத்தை நட்டநடு நிசி 1 மணிக்கு படங்களை திரையிட அனுமதியளித்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே, இந்த படங்களின் விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது.

பல்வேறு விவகாரங்களை தானாகவே முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், இந்த சூதை, பகல் கொள்ளையை, அரசின் அத்துமீறலை, சட்ட விரோத நடவடிக்கையை, அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் மாநில தி மு க அரசை கண்டிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் கொள்ளையர்களின் அட்டகாசம் மேலும் பெருகி கொண்டே இருக்கும்.

நாராயணன் திருப்பதி.
Vice-President, Tamil Nadu BJP

thunivu – varisu ticket in rs.3000 sale upto

More Articles
Follows