விஜய் பிறந்தநாளுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

விஜய் பிறந்தநாளுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans trending clash with Vijay fans on Thalapathy Birthday நடிகர் விஜய் இன்று ஜீன் 22ஆம் தேதி தன் 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே கடந்த ஒரு வாரமாக இணையத்தில் விஜய் தொடர்பான வீடியோக்கள், படங்கள் உலா வருகின்றன.

பெரும்பாலானவர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் விஜய் பாடல்கள் நிரம்பி வழிகின்றன.

விஜய்க்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் மறு பக்கம் அஜித்துக்கு டிரெண்டிங் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

#ThalafansDay மற்றும் #NonPareilThalaAjith உள்ளிட்ட ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இன்று அஜித் படம் தொடர்பாக எதுவும் வெளியாகவில்லை. அப்படியிருக்கையில் அஜித் ரசிகர்கள் எதையும் டிரெண்ட் செய்ய வேண்டியதில்லை.

ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாகவே இவ்வாறு செயல்படுகின்றனர். இந்த போட்டி பொறாமை குணம் என்று மாறுமோ? என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

விஜய் அஜித் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்களின் போட்டிக்கு.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..?

Ajith fans trending clash with Vijay fans on Thalapathy Birthday

டைரக்டர் ஷங்கர் எழுதும் MAKING OF 2.0.; புத்தகத்தை வெளியிடும் ரஜினி.?

டைரக்டர் ஷங்கர் எழுதும் MAKING OF 2.0.; புத்தகத்தை வெளியிடும் ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Book on Making of 2 point 0 by director Shankar Will Rajini launch ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ரூ. 450 கோடியில் தயாரித்திருந்தது லைகா புரொடக்சன்ஸ்.
பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகளவில் வெளியானது.

நமது தேவைக்காக செல்போன் சிம் நெட்வொர்க்கில் 3ஜி, 4ஜி டெக்னாஜிகளை அதிகரித்துக் கொண்டே வருகிறோம்.

இதனால் ஆங்காங்கே நெட்வொர்க் டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுகள் சிட்டுக் குருவிகளின் அழிவுக்காக காரணமா உள்ளது.

மேலும் பல பறவை இனங்களும் இதனால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த படம் உலகுக்கு ஒரு பாடமாக சொன்னது. இதனால் மக்களிடையே படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் கிட்டதட்ட பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த படத்தை குறித்து தற்போது MAKING OF 2.0 என்ற புத்தகத்தை எழுதி வருகிறாராம் டைரக்டர் ஷங்கர்.

விரைவில் இந்த புத்தகம் வெளியாகவுள்ளது. இந்த புத்தகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

A Book on Making of 2.0 by director Shankar Will Rajini launch

அண்ணா எம்ஜிஆர் சிலைகளுக்கு மாஸ்க் போட்ட மக்கள்.; இந்த ஊர்லயா.!

அண்ணா எம்ஜிஆர் சிலைகளுக்கு மாஸ்க் போட்ட மக்கள்.; இந்த ஊர்லயா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona Mask for Anna and MGR statues at Coimbatoreகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கட்டாயம் அனைவரும் மாஸ்க் (முகக்கவசம்) அணிவது கட்டாயம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

மாஸ்க் இல்லாமல் மக்கள் வெளியே சென்றால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே அனைவரும் முகக் கவசம் அணிந்தபடியே பொது இடங்களுக்கு சென்ற வருவதை பார்க்கிறோம். நாமும் அப்படியே செய்து வருகிறோம்.

இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு சில அடையாளம் தெரியாத நபர்கள் முகக் கவசம் அணிவித்து சென்றுள்ளனர்.

இதனை பார்த்தப்படியே பலரும் சென்றனர்.

ஒருவர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட மாஸ்க்கை கழட்டும் காட்சியைத்தான் நாம் படத்தில் பார்க்கிறோம்.

Corona Mask for Anna and MGR statues at Coimbatore

விஜய்யை ஓவரா வாழ்த்தி ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய மாநாடு பட புரொடியூசர்

விஜய்யை ஓவரா வாழ்த்தி ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய மாநாடு பட புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans trolls Suresh Kamatchi for his Birthday Wish to Vijayஇளைய தளபதி விஜய் இன்று ஜீன் 22ஆம் தேதி தன் 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அண்மையில் வெளியான மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கியிருந்தார் சுரேஷ் காமாட்சி. தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதில்… என்னதான் கொரானா முடக்கிப்போட்டாலும், #மாஸ்டரால் திரையரங்குகளை திருவிழாவாக்கவும்.. சினிமாவை மீட்டெடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் வசூல் சூப்பர்ஸ்டார், கலையுலக தளபதி @actorvijay க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. #Master #HappyBirthdayThalapathy

இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு கமெண்டுக்களை போட்டு வருகின்றனர்.

விஜய் கால்ஷீட் வாங்க இப்படி பேசுகிறாரோ?

சூப்பர் ஸ்டார்ன்னா அது என்னைக்குமே ரஜினி ஒருவர்தான். அவர்தான் இந்த வயதிலும் பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார். அவரால் எவரும் நஷ்டமடையவில்லை என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவேளி வேண்டும். அப்படியிருக்கையில் மாஸ்டர் வெளியானால் எப்படி சமூக இடைவெளி தியேட்டரில் கடைபிடிக்க முடியும். ரசிகர்கள் முண்டியடித்து வரமாட்டார்களா?

தியேட்டரில் கூட்டம் குறைவாக வந்தால் மட்டுமே சமூக இடைவெளி சாத்தியம். அப்படியானால் விஜய் படத்துக்கு கூட்டம் வராதா..?

தியேட்டருக்கு கூட்டம் வந்தால் தயாரிப்பாளருக்கு லாபம் வரலாம். ஆனால் மக்கள் கொரோனாவினால் உயிரிழந்தால் யார் பொறுப்பு..,?

ஒருவரை வாழ்த்த வேண்டும் என்பதற்கு ஏன் இப்படி பதிவிட்டுள்ளார்.? என்பது தான் புரியவில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர்… கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் இப்போது வெளியாக கூடாது என இயக்குனர் கேயார் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajini fans trolls Suresh Kamatchi for his Birthday Wish to Vijay

https://twitter.com/sureshkamatchi/status/1274892103797993472

ஆன்லைனில் ரீலீசாகும் படங்களுக்கும் சென்சார்.; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஆன்லைனில் ரீலீசாகும் படங்களுக்கும் சென்சார்.; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Online OTT movie release should be censored says Bihar CM கொரோனா பாதிப்பால் கடந்த 3 மாதங்களாக அனைத்தும் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

எனவே ஆன்லைன் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்கள் அண்மையில் வெளியானது.

தியேட்டரில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் பெறப்படும். சென்சார் சர்ட்டிபிகேட் இல்லாமல் படங்கள் வெளியாக முடியாது.

ஆனால் ஓடிடி தளங்களில் (அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் வலைதளங்கள்) வெளியாகும் படங்களுக்கு தணிக்கை (சென்சார்) அவசியமில்லை என்ற நிலையே உள்ளது.

இந்த நிலையில் வன்முறையும், ஆபாசமும் அதிகமாக இருப்பதால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வலைதளங்களின் வீடியோக்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இந்த ஓ.டி.டி. தளங்களே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Online OTT movie release should be censored says Bihar CM

வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி

வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans help to Soldier Palani family who lost his life in China clashஇந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரரும் மரணமடைந்தார்.

தமிழக அரசு சார்பாக அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பழனி குடும்பத்திற்குத் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜீன் 22ல் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பர்த்டே கொண்டாட செலவை அவரது குடும்பத்திற்கு ரசிகர்கள் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Vijay fans help to Soldier Palani family who lost his life in China clash

More Articles
Follows