மெர்சல்-பாஜக மோதல்; விஜய்யை ஆதரிக்கும் அஜித் ரசிகர்கள்

மெர்சல்-பாஜக மோதல்; விஜய்யை ஆதரிக்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans supports Vijay in Mersal and BJP Leaders clashமெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜ கட்சியை சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த காட்சிகளை நீக்குமாறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அந்த வசனங்களை பேசிய விஜய்க்கு தங்கள் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்காக பல மீம்ஸ்களை உருவாக்கி இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith fans supports Vijay in Mersal and BJP Leaders clash

மெர்சல் படத்தை மெகா ஹிட்டாக்கிய அனைவருக்கும் விஜய் நன்றி

மெர்சல் படத்தை மெகா ஹிட்டாக்கிய அனைவருக்கும் விஜய் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijay said Thanks to all for making Mersal as big successதெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே ரசிகர்கள் மெர்சல் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, சமந்தா, காஜல், நித்யாமேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள் என அடுத்தடுத்த தகவல்கள் வந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை போலவே, படமும் நேற்று முன்தினம் (தீபாவளி அக்.18ல்) ரிலீஸ் ஆகி வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் முதல் நாளில் மற்ற தமிழ் படங்கள் படைத்த சாதனைகளை தெறிக்கவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள் என தளபதி விஜய் தன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Thalapathy Vijay said Thanks to all for making Mersal as big success

vijay thanks for mersal success

பாஜக எதிர்ப்பு எதிரொலி; ஜிஎஸ்டி வசனங்களை நீக்க விஜய் தரப்பு முடிவு

பாஜக எதிர்ப்பு எதிரொலி; ஜிஎஸ்டி வசனங்களை நீக்க விஜய் தரப்பு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal producer decided to remove GST dialogues from the movieவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் கடந்த அக். 18ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் சில காட்சிகளில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகளை எதிர்த்து பேசியிருந்தார் விஜய்.

இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், பாஜ கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பற்றிய காட்சிகளை நீக்க விஜய் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தயாரிப்பாளர் முரளி இது தொடர்பாக போனில் பேசியதாகவும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

Mersal producer decided to remove GST dialogues from the movie

விஜய்யின் பொருளாதார அறிவீனத்தை மெர்சல் காட்டுகிறது… பாஜக எச்.ராஜா

விஜய்யின் பொருளாதார அறிவீனத்தை மெர்சல் காட்டுகிறது… பாஜக எச்.ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP H Raja condemned Vijay dialogues in Mersalமெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் தற்போது தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

இந்த காட்சிகளுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது.

ஆனால் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் இந்த வசனங்களை நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜன் முதலில் எதிர்ப்பு குரல் கொடுக்க, பின்னர் பொன். ராதாகிருஷ்ணனும் தன் கருத்தை வெளியிட்டார்.

தற்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் தன் எதிர்ப்பு கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள பல்வேறு ட்வீட்டுக்கள் இதோ…

H Raja‏Verified account @HRajaBJP

ஏற்கனவே நாடுமுழுவதும் பள்ளி கல்வி மற்றும் மருத்துவம் அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசம் தான்.

H Raja‏Verified account @HRajaBJP
H Raja Retweeted vasudevan
தமிழகத்தில் கடந்த 20 yr கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோவில்கள் 370 இப்ப எதை தவிர்த்து மருத்துவ மனை கட்டணும் என்கிறார் விஜய்

விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல்.

மெர்சல் பட வசனம் விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில் GST புதிய வரி அல்ல சாராயத்திற்கு 58% மேல் வரி விதிக்கப்படுகிறது.

BJP H Raja condemned Vijay dialogues in Mersal

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனங்களை நீக்க தேவையில்லை.. காலா இயக்குநர் ரஞ்சித்

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனங்களை நீக்க தேவையில்லை.. காலா இயக்குநர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ranjithவிஜய் நடிப்பில் மெர்சல் படம் வெளியாவதற்கு முன்னரே பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆனபின்பும், படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்களை விஜய் பேசியதால், அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பாஜ கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் முதல் குரலாக அந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

இவரையடுத்து மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனும் அவர்களும் தன் எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஆனால் விஜய் பேசிய வசனங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசு குரல் கொடுத்துள்ளார்.

மெர்சலுக்கு தணிக்கை சான்று இருந்தால்போதும்; பாஜகவிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை என அவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

தற்போது ரஜினியின் காலா பட இயக்குனர் ரஞ்சித் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது…

மெர்சல் படத்தில் மக்களின் பிரச்னைகளை தான் சொல்கிறார்கள். அந்த காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

ஜிஎஸ்டி வரி குறித்த காட்சிகளை நீக்க தேவையில்லை.” என  தெரிவித்துள்ளார்.

Kaala director Ranjith supports Vijays GST dialogue in Mersal

இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்… கமல் ஆவேசம்

இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்… கமல் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dengue speech issue Kamal reactionநிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன்.

வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை.

அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன். அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.

மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா அலோபதி என்ற தனி சார்பு எனக்கில்லை.

அதுவரை டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்றால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்.

Kamalhassan reaction to Dengue speech issue

More Articles
Follows