அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்களை உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவ்வப்போது ரத்ததானம், அன்னதானம், கல்வி உதவிக் தொகை ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நம் நாட்டின் வளத்தை அழிக்கும், சீமைக்கருவேல மரங்களை பல பகுதிகளில் இளைஞர்களை வேரோடு வெட்டி சாய்த்து வருகின்றனர்.

இதை தற்போது அஜித் ரசிகர்களும் செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள வேலம்மாள் கல்லூரி அருகில் உள்ள பனையூர் என்ற பகுதியில் இப்பணியை அஜித் ரசிகர்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

ரஜினி-அஜித்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த மன்னன், சந்திரமுகி, அஜித் நடித்த அசல் உள்ளிட்ட படங்களை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரித்திருந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விஜய்சேதுபதி நடிக்க, அப்படத்தை ‘சேதுபதி’ இயக்குனர் அருண்குமார் இயக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

அழகுக்கலை நிபுணர்கள் நினைத்தால் உலகமே அழகாகும் – சினேகா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று தான்!” – வி கேர் பட்டமளிப்பு விழாவில் “புன்னகை இளவரசி” நடிகை சினேகா பேச்சு !

அழகுக்கலையிலும், அதுசம்பந்தப்பட்ட கற்பித்தலிலும் இன்று முன்னோடியாய் நிற்பது வி கேர் நிறுவனம்.

வி கேர் நிறுவனத்தின் “வி கேர்ஸ் குளோபல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்ஸ்” நடத்திய பட்டமளிப்பு விழாவில் நடிகை சினேகாவும், வி கேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். E. கரோலின் பிரபா ரெட்டியுடன் கலந்துகொண்டார்.

100க்கும் மேற்பட்ட பெண்கள் அழகுக்கலை சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சிபெற்றிருந்தனர். அவர்களுக்கு விழாவில் சான்றிதழும், பட்டமளிப்பும் நடைபெற்றது.

“வி கேர்ஸ் குளோபல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்ஸ்” பட்டமளிப்பு விழாவில் புன்னகை இளவரசி நடிகை சினேகா பேசியது :-

இங்கே இருக்கும் அனைத்து அழகுக் கலை நிபுணர்களுக்கும் வணக்கம்.

“வி கேர் கரோலின் பிரபா அவர்களை எனக்கு 7 வருடங்களாகத் தெரியும். அவருடைய உழைப்பு மிகப்பெரியது. வி கேர் நிறுவனம் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் 10 வது வருட பட்டமளிப்பு விழாவில் பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லாத் துறைகளும் பெண்களுக்கு சவாலான துறை தான். எந்த துறைக்குச் சென்றாலும், பெண்கள் சவால்களை சமாளித்துத் தான் முன்னேற முடியும்.

இங்கே இருக்கும் பெண்கள் அனைவருக்கும் வி கேர் பிரபா அவர்கள் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆவார். அழகுக் கலை நிபுணர்கள் மருத்துவர்களுக்கு நிகரானவர்கள்.

அழகுக் கலை நிபுணர்கள் கையில் அதிக திறமை உள்ளது. அவர்கள் நினைத்தால் இந்த உலகத்தையே அழகாக மாற்ற முடியும்.

வி கேர் பிரபா மேடம் உங்களுக்கு கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். சினிமா நடிகைகள் மட்டும் தான் அழகாக இருக்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது.

இப்போது நீங்கள் நினைத்தால் உலகத்தில் உள்ள அனைவரும் அழகாகலாம்.

நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை சரியான வழியில் பயன்படுத்தி உதவிட வேண்டும்” என்றார் நடிகை சினேகா.

வி கேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். E. கரோலின் பிரபா ரெட்டி
இவ்விழாவில் பேசியதாவது ;

“வி கேர் நிறுவனம் துவங்கப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. இது வரை 2000 ஆண்டில் இருந்து நாங்கள் 15,000 மாணவர்களை உருவாக்கியுள்ளோம்.

வி கேர் நிறுவனம் இந்த அளவிற்கு பிரபலமாக என்னுடைய தங்கை டயானாவும் மிக முக்கியமான காரணம்.

நான் முதலில் ஆசிரியராகத் தான் பணியாற்றி வந்தேன். மாலை நான்கு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வருவது சுத்தமாக பிடிக்கவில்லை.

அதனால் நான் அப்போது அழகுக் கலை கோர்ஸ் படிக்கலாம் என முடிவு செய்தேன். வெளிநாட்டுக்குச் சென்று ஒரு பெண் படிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.

அதை எல்லாம் தாண்டி எங்கள் வீட்டில் வெளிநாட்டுக்கு சென்று படிக்க அனுமதி தந்தார்கள். மீண்டும் இங்கே வந்த பிறகு இங்கே உள்ள நிபுணர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இந்த வி கேர் நிறுவனத்தைத் துவங்கினேன்.

வி கேர் நிறுவனம் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது. அன்று எங்களுக்கு இருந்தது போல் பிரச்சனைகள் இன்று உங்களுக்கு இல்லை.

இன்றைக்கு அழகுக் கலை பற்றி அனைவரிடமும் நல்ல புரிதல் உள்ளது. இங்கே மாணவிகளின் பெற்றோர்களும் வருகை தந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

சிலர் பெண்களுக்கு சரியாக படிப்பு வரவில்லை என்றால் அவர்களை அழகுக் கலை பற்றி படிக்க அனுப்பலாம் என்று சாதாரணமாக கூறுவார்கள். அது மிகவும் தவறானது. அழகுக் கலை என்பது இஞ்ஜினியரிங் , மருத்துவம் போன்ற தரம்வாய்ந்த ஒரு படிப்பாகும். அதை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தான் சரியாக கற்றுக்கொள்ள முடியும்.

வி கேரின் வெற்றிக்கு திறமையான பயிற்சி தருபவர்களும், ஆசிரியர்களும் தான் மிக முக்கிய காரணம்.

அவர்கள் கற்றுக்கொடுப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். எங்களிடம் படித்த மாணவிகள் அனைவரும் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். அதைப் போல் இந்த வருடம் பட்டம் வாங்கும் நீங்களும் சாதிக்கவேண்டும்.

இங்கே நீங்கள் கற்றுக்கொண்டது கொஞ்சம் தான். மேலும் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்பது தான் உண்மை. அனைவரும் வாழ்க்கையில் சாதிக்க என் வாழ்த்துக்கள் என்றார் வி கேர் கரோலின் பிரபா.

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.
சிவக்குமாரின் கருத்து:
தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?
கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.

பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.
இது சிவக்குமார் என்ற தனி நபரின் பேச்சு அல்ல.. ஒட்டுமொத்த அப்பாவித் தமிழ் மக்களின் ஏக்கமும் இதுதான். அரசியல்வாதிகள் எந்த லாபமும் பார்க்காமல் மக்களுக்காக இதைச் செய்ய முன் வருவார்களா..?

தமிழக ரஜினி ரசிகர்களிடம் பாரபட்சம் காட்டும் ‘பாட்ஷா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த படங்களில் மாபெரும் சாதனை படைத்து ரஜினியின் திரையுலக வாழ்க்கையை வேறு தளத்தில் கொண்டு சென்ற படம் பாட்ஷா.

இப்படம் வெளியாகி 23 வருடங்களை கடந்துவிட்ட போதிலும் இன்றும் இப்படத்திற்கு மாஸ் கொஞ்சம் கூட குறையவில்லை.

எனவே இதை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து வருகிற மார்ச் 3ஆம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் செய்யவிருக்கின்றனர்.

ஆனால் லண்டனில் மட்டும் பிப்ரவரி 26ஆம் தேதியே வெளியாகவுள்ளதாம்.

இதனால் ஒரு வாரம் காத்திருக்க முடியாத தமிழக ரஜினி ரசிகர்கள், லண்டனில் மட்டும் முன்பே ரிலீஸ் செய்து, இங்கே பாரபட்சம் காட்டுகின்றனர்? என்று கேட்டு வருகின்றனர்.

 

Baasha digital version release on 3rd Mar 2017 in Tamilnadu

அம்மா கோயிலை திறக்க ரஜினியை அழைக்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் பன்முக திறமைகள் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இத்துடன் சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

இவர் தன் அம்மாவுக்காக கோயில் ஒன்றை கட்டி வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இதன் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருகிறார்.

இதுதொடர்பாக இன்று ரஜினியை சந்தித்து அழைத்துள்ளார்.

ரஜினியும் சம்மத்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Lawrance invited Rajinikanth to open his mothers temple

More Articles
Follows