விஸ்வாசம் செகண்ட் லுக்கும் இப்படி? படம் எப்படி? அதிருப்தியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி தயாரிப்பில் அஜித் இரு வேடங்களில் நடித்து வரும் படம் விஸ்வாசம்.

சிவா இயக்கி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஆனால் இது அனைவருக்கும் பிடித்தமான வகையில் இல்லை. மேலும் விஸ்வாசம் பட டைட்டில் டிசைனே சரியாக இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று செகன்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது அதை விட மோசமாக உள்ளதாக அஜித் ரசிகர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் போஸ்டர்களே இந்த லட்சணத்தில் இருந்தால், படம் எப்படியிருக்கும்? என்று சிவா மீது அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Ajith fans disappointment about Viswasam 2nd look poster

1980-களில் நடந்த உண்மை சம்பவம் தான் *சிதம்பரம் ரயில்வே கேட்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரவுன் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கும் படம் “சிதம்பரம் ரயில்வே கேட்”.

1980ல் நடந்த உண்மை சம்பவத்தை மையக்கருவாக வைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் இயக்குனர் சிவபாவலன்.

உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மிக எதார்த்தமாக பேசப்போகும் படம் சிதம்பரம் ரயில்வே கேட்.

1980 களைப்போல சிதம்பரம் நகரம் மோகன் ஸ்டூடியோவில் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, ஏகாந்தம் படத்தில் நடித்த நீரஜா, காயத்ரி, ரேகா, சூப்பர் சுப்புராயன், பாலாசரவணனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு ஆர்.வேலு, சண்டை சூப்பர் சுப்புராயன், பாடல்கள் பிரியன், அருண் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை சுசி காமராஜ்.

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் நடைபெறுகிறது.

Massive set for Chidambaram Railway Gate Tamil movie

பொங்கலுக்கு *விஸ்வாசம்* ரிலீஸ்.; என்ன செய்வார் *பேட்ட* ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஸ்வாசம்.

இமான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித் 2 வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒரு அஜித் வயதானவராகவும் ஒருவர் இளமையாகவும் தோன்றுகிறார்.

இந்நிலையில் இன்று காலை சற்றுமுன் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இது வழக்கமான கிராமத்து பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுகிறது.

அந்த போஸ்டரில் 2019 பொங்கல் தினத்தில் விஸ்வாசம் ரிலீஸாகும் என உறுதி செய்துள்ளனர்.

ரஜினி நடித்துள்ள பேட்ட சூட்டிங் முடிவடைந்ததை தொடர்ந்து அவரது படமும் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

தற்போது விஸ்வாசம் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளதால் இரு படங்களும் மோதல் இருக்குமா? அல்லது பேட்ட வேறு தேதியில் ரிலீஸாகுமா? என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

Ajith Viswasam officially confirmed its release date

1000 மாணவர்களை ‘எழுமின்’ படத்திற்கு அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி பி விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் ‘எழுமின்’. குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பத்திரிக்கையாளர்களாலும் பெரும் நட்சத்திரங்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள விகாஷ் வித்யாலயா பள்ளியின் தாளாளர், தனது பள்ளியில் பயிலும் சுமார் 1000 மாணவ, மாணவிகளை இன்று திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் இத்திரைப்படத்தை காண ஏற்பாடு செய்துள்ளார்.

தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று படத்தினை பார்த்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும், பல மாவட்டங்களில் பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியருக்கு இத்திரைப்படத்தை சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்குமாறு கேட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான வி பி விஜி தெரிவித்தார்.

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் ஜோடியாக பாலிவுட் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Circle Box Entertainment) என்ற நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி (Tara Alisha Berry) என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தியில் வெளியான மாஸ்ட்ரம் (Mastram), த பர்ஃபெக்ட் கேர்ள் (The Perfect Girl), லவ் கேம்ஸ் ( Love Games) என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் (Yatin Karyekar) நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில்
நடிக்கிறார்

இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி ’, காலா, மற்றும் தற்போது வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வடசென்னை’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான் பால் படத் தொகுப்பாளராக பணியாற்ற, ராஜா கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜான்சன். இவர் நாளைய இயக்குநர் சீஸன்-4 ல் வெற்றிப் பெற்றவர் என்பதும், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘புரொடக்சன் நம்பர் 1 ’ என்ற பெயரில் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகும் ‘தில்லுக்கு துட்டு-2 ’படம் வெளிவரவிருக்கும் நிலையில், அவர் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

நமது கல்விமுறை பற்றிய படமாக *ஜீனியஸ்* இருக்கும் – சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் “ ஜீனியஸ்“ இப்படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்கியுள்ளார்.

படத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியது :- ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன் ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார். அப்படி சென்ற அவரிடம் கடைகாரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார். அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது.

நல்ல படித்த , பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தோன்றிய கதை தான் இப்படத்தின் கதை. இக்கதையை நான் விஜய் , அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.

இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ஜீனியஸ் முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை இருந்தது அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது. ரோஷன் நல்ல தயாரிப்பாளர் விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார். இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகிவிட்டது. எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது நான் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி தான் கற்றேன். நமது அரசாங்கம் ஆங்கில வழி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேச முடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்றார் இயக்குனர் சுசீந்திரன்.

More Articles
Follows