தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நிச்சயமாக இவ்வருடம் அஜித் நடிப்பில் எந்த படமும் வராது.
ஆனாலும் துவண்டு விடாத இவரது தீவிர ரசிகர்கள் எதையாவது செய்து, மற்ற ரசிகர்களை உற்சாகமாக்கி விடுகின்றனர்.
அஜித்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படம் மங்காத்தா. அந்தளவு மகத்தான வெற்றியைப் இப்படம் பெற்றது. இது அவரது 50வது படமாகும்.
இப்படம் ரிலீஸ் ஆகி 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் நாளை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் காமென் டிபி, ஹேஷ்டேக் க்ரியேட் செய்து ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.
மேலும் மதுரை ரசிகர்கள் 400 அடிக்கு சுவர் போஸ்டர் அடித்து கலக்கி வருகின்றனர்.
இந்த போஸ்டர் காண்பதற்கு சீன பெருஞ்சுவரை போல நீளமாக இருப்பதால், அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்களாம்.