தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று வேதாளம், விவேகம் உள்ளிட்ட அஜித் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு நாம் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் 16 வருடங்களுக்கு முன்பே இதுபோன்ற ஒரு எதிர்பார்ப்பை அஜித்துக்கு உருவாக்கி தந்த படம் சிட்டிசன்.
இப்படத்தின் போஸ்டர்களே இதன் மீதான் எதிர்பார்ப்பை எகிற செய்தது.
சரவணன் சுப்பையா இயக்கத்தில் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்திருந்த இப்படத்தில் அஜித் 9 வேடங்களில் கலக்கியிருப்பார்.
ஊழலுக்கு எதிராகவும், லஞ்சம் வாங்கும் அரசியல் அதிகாரிகளுக்கு எதிராகவும் அஜித் பேசும் வசனங்கள் படு பிரபலமாகியது.
இந்நிலையில் இப்படம் வந்து 16 ஆண்டுகள் இன்று (ஜீன் 8) நிறைவடைந்ததை முன்னிட்டு இதை அஜித் ரசிகர்கள் #16YrsOfMegaBlockbusterCITIZEN ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.
Ajith fans celebrates 16 years of Citizen movie