விவேகம் டிக்கெட் இல்லை; பேனரை கிழித்து ரசிகர்கள் ஆத்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று அஜித் நடித்த விவேகம் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இப்படம் புதுச்சேரியில் காமராஜர் சாலையில் உள்ள பாலாஜி திரையரங்கில் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டது.

எனவே, ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி டிக்கெட் கிடைக்கும் என நேற்று காலை முதலே ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் இரவு வரை டிக்கெட் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.

பின்னர் திடீரென் நள்ளிரவில் டிக்கெட் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதனால் கோபம் கொண்ட அஜித் ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டனர்.

திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த மற்ற நடிகர்களின் பேனர்களை சிலர் கிழித்து எறிந்தனர்.

விவேகம் பட டிக்கெட் வேண்டும். உடனே விற்பனை செய் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எனவே புதுச்சேரி காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

விவேகம் சீன்ஸ் லீக்கானது; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம் ’விவேகம்’.

இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.

படத்திற்கு நல்ல விமர்சனங்களே வந்துக் கொண்டிருப்பதால் நல்ல நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
இந்நிலையில் விவேகம் படத்தின் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இணையதளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் இந்த காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகீறது.

இதனால் அஜித் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

‘Never ever give up’இது விவேகம் தத்துவம்; அஜித்தின் தத்துவம் எது தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித், சிவா கூட்டணியில் உருவாகியுள்ள விவேகம் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் வளர்ந்த விதம் குறித்து இயக்குனர் சிவா கூறியதாவது…
‘வேதாளம்’ படத்திற்கு பிறகு ஒரு சர்வதேச படம் ஒன்று பண்ணலாம் என்ற யோசனையை அஜித் தான் கொடுத்தார்.

அதுபோன்ற கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம்.

இதில் ஆக்சனுடன் சேர்த்து எமோஷன்களும் உள்ளன.

அஜித் அசுர உழைப்பாளி. இப்படத்தில் மூன்று பெரிய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.

இவை அனைத்தும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு படையலாக இருக்கும். சண்டை காட்சிகளுக்கு ‘டூப்’ வைப்பதை அஜித் சார் முற்றிலும் தவிற்பவர்.

இப்படத்தில் அஜித் செய்த ஒரு அசுர பைக் ஸ்டாண்டை பார்த்த அதனை இயக்கிய ஹாலிவுட் சண்டை இயக்குனர் காலோயன் வொடெனிசரோவ் [ Kaloyan Vodenicharov ]அசந்து போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்.

ஏனென்றால் அந்த ரோடு பனியிலும் மழை நீரிலும் ஊறி வழுக்களாகவும் அபாயகரமாகவும் இருந்தது.

இந்த படத்துக்காக அஜித் சார் ஜிம்மூக்கு மாதக்கணக்கில் சென்று கடும் உழைப்பு போட்டு தன் உடலை செதுக்கியுள்ளார்.

அவர் கடைபிடிக்கும் அவரது வாழ்க்கை தத்துவமான ‘Never Say Die’ வை மையமாக வைத்தே இப்படத்தில் ‘Never ever give up’ என்ற வசனத்தை எழுதினோம்.

எங்கள் முழு அணியும் இரவு பகல் பார்க்காமல் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போடப்பட்டுள்ளது.” என்றார்.

ரசிகர்களை பத்தி சொல்லப்போனா அஜித் அனுமதி கிடைக்கல… – பால்முகவர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விவேகம்’ ரிலீஸ் ஆகும் போது அஜித் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்று பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்…

”விவேகம்’ திரைப்படம் வெளியாகும் போது அஜித் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என அறிவுறுத்துவதோடு, கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்ற கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, அதற்குப் பதிலாக ஒரு படம் வெளியாகும் திரையரங்க வளாகங்களில் முதல் 10நாட்களுக்கு ரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் மற்றும் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடத்திடவும் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை நடிகர் அஜித்தின் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அஜித்தின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றுகிற லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் எங்களது சங்கத்தின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய 3பக்க கடிதத்தை கடந்த 04.08.2017 அன்று பதிவு தபால் வாயிலாக நடிகர் அஜித்துக்கு அனுப்பினோம். என்று தெரிவித்தனர்.

மேலும் தமிழர்கள் இனியாவது நடிகர்களுக்கு ரசிகர்களாக இருந்து விட்டில் பூச்சிகளாக மாறி தங்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வீணாக்க வேண்டாம்.

சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையிலே விவேகம் பார்க்கும் கமல்; அஜித்துக்கு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் இன்று உலகம் முழுவதும வெளியாகியுள்ளது.

சிவா இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடிக்க, முதன்முறையாக இப்படத்தின் மூலம் கமல் மகள் அக்ஷராஹாசன் அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் குறித்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

என் மகள் அக்ஷராவுடன் விவேகம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். படம் பற்றி நல்ல விமர்சனங்களையே கேட்டு வருகிறேன். படத்தில் பணியாற்றிய அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 3m3 minutes ago
Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

டிடிவி தினகரனுடன் நடிகர் விஷால் ரகசிய சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பக்கம். டிடிவி தினகரன் அணி ஒரு பக்கம் என அதிமுக பிரிந்து உள்ளது.

மேலும் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அதிமுக ஆட்சி கவிழுமா? அடுத்த முதல்வர் யார்? என்ற பரபரப்பான சூழ்நிலை தமிழக அரசியலில் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் டிடிவி தினகரனை நேரில் சந்தித்துள்ளார்.

விஷாலின் தங்கை திருமணம் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், திருமண பத்திரிகையை கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் சந்தித்த எந்த விதமான படங்களையும் இதுவரை வெளியிடவில்லை.

அண்மையில் வைகோவையும் இதுபோல் சந்தித்தார் விஷால். ஆனால் அந்த படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actor Vishal met ADMK Party member TTV Dhinakaran

More Articles
Follows