அஜித்-விவேக் ஓபராய் இணைந்த விவேகம் ஸ்டில் வைரலானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம்.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அஜித், விவேக் ஓபராய் மற்றும் சில ராணுவ வீரர்களும் நிற்கின்றனர்.

இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith and Vivek Oberoi stills from Vivegam goes viral

விஜய்சேதுபதி பட விழாவில் பேச மறுத்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கியுள்ள படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஆண்டனி மற்றும் ஜோக்கர் புகழ் காயத்ரி கிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ளனர்.

இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் விஜய்சேதுபதி பேசியதாவது…

’இந்த இயக்குனர் லெனின், 2013-ல் இந்தக் கதையை எங்கிட்ட சொன்னார்.

இப்போ என்கிட்ட பணம் இல்லை. அப்புறம் தயாரிக்கலாம் என்றேன்.

அவர் என் வார்த்தைகளுக்காக காத்திருந்தார். சினிமா பற்றிய நிறைய தெரிஞ்சி வச்சிருக்கார்.

சூட்டிங் சமயத்துல ஸ்பாட்டுக்கு நான் போகவில்லை. படம் போட்டு பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

இந்தப் படத்தோட பாட்டு, பின்னணி இசைக்கு நான் அடிமை. அதுக்கு இளையராஜா சார்தான் காரணம்.

ஒரு தமிழனா, நான் பெருமையா உலகத்தை நோக்கி சொல்ற விஷயம், எங்களுக்கு இளையராஜா இருக்காரு என்பதுதான்” என்றார்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் பேசினார். ஆனால் இளையராஜா பேச மறுத்துவிட்டதையடுத்து விழாவை நிறைவு செய்தனர்.

Merku Thodarchi Malai movie audio launch updates

உதயநிதிக்கு வில்லனாக சமுத்திரக்கனி; மீண்டும் பிரியதர்ஷனுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘மஹேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தை தமிழில் சில மாற்றங்களுடன் ரீமேக் செய்யவிருக்கிறார் பிரியதர்ஷன்.

இதில் உதயநிதியுடன் நமிதா பிரமோத் நடிக்கிறார்.

இந்நிலையில் வில்லன் வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘ஒப்பம்’ படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆகாஷ மிட்டாய் என்ற மலையாள படத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Samuthirakani likely to be join with Udhayanidhi

மீண்டும் இயக்குனர் சுசீந்திரனுடன் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி தன் திரையுலக பயணத்தை தொடங்கிய காலத்தில் சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல என்ற படத்தில் நடித்தார்.

தற்போது இவர்கள் மீண்டும் இணையவுள்ளனர்.

ஆனால் இம்முறை சுசீந்திரன் இயக்கிய ‘அறம் செய்து பழகு’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வரும் 12ஆம் தேதி மாலை 4.05மணிக்கு கார்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவிருக்கிறாராம்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ராந்த், சந்தீப் கிஷான், மெஹ்ரின் பிர்ஜதா, ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவில் செய்ய, காசி விஸ்வாதன் எடிட்டிங்கை மேற் கொண்டுள்ளார்.

அக்டோபர் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Karthi will reveal first look of Suseenthirans Aram Seidhu Pazhagu

காலா ஸ்டைலில் விஜய் 61 படத்திற்கும் டைட்டில்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிவரும் தளபதி61 படத்தில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் தற்போது சென்னை மீனம்பாக்கம் அருகே நடைபெற்று வருகிறது.

இதுநாள் வரை படத்திற்கு தலைப்பிடப்படவில்லை என்பதால், ரசிகர்களால் பல தலைப்புகள் வைக்கப்பட்டு செய்திகள் வெளியாகியது.

இதனிடையில் ரஜினியின் காலா (கரிகாலன்) பட தலைப்பும் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கவே, அதே ஸ்டைலில் விஜய் 61 படத்திற்கும் பெயர் சூட்டப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

படத்தில் விஜய்யின் 3வது கேரக்டர் பெயர் மாறா என்பதால் மாறா (மணிமாறன்) என்று தலைப்பிடப்படலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மாறா கேரக்டருக்குத்தான் சமந்தா ஜோடியாக நடித்து வருகிறார்.

Vijay 61 title may connect with style of Kaala

மாநகரம் ஹீரோ சந்தீப் கிஷனுக்கு கைகொடுக்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான நடிகராக இருந்த சந்தீப் கிஷன் அவர்கள் யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின்னர் வந்த மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் தமிழில் கிடைத்த வண்ணம் உள்ளன.

மாயவன், அறம் செய்து பழகு படங்களை முடித்துவிட்டு நரகாசூரன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சந்தீப் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜீன் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு சூர்யா வெளியிடவிருக்கிறாராம்.

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்கவிருக்கிறார்.

Suriya going to reveal first look of Sundeep Kishans next movie

More Articles
Follows