தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாறி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று யூடிப்பில் சாதனை படைத்து வருகிறது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’.
இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார்.
இந்த் படத்தின் முதல் சிங்கிள் ‘மெஹர்சிலா’ ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியானது.
எனவே ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க அவ்வப்போது ‘வலிமை’ மற்றும் ‘மாநாடு’ பட அப்டேட்டையும் கொடுத்து வருகிறார் யுவன்.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்டார்,
சீக்கிரமே ‘வலிமை, மாநாடு’ படங்களின் அடுத்த சிங்கிள் வர உள்ளது, யுவன் ரெடி செய்துவிட்டார்,” என வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
Ajith and Simbu films next single is out soon says Yuvan
