அஜித் 61 அப்டேட் : இயக்குனர் அவரே தான்.. தயாரிப்பாளரை மாற்றிய தல.?

அஜித் 61 அப்டேட் : இயக்குனர் அவரே தான்.. தயாரிப்பாளரை மாற்றிய தல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்களிலும் அஜித் நடிக்க வினோத் இயக்க, போனிகபூர் தயாரித்துள்ளார்.

வலிமை படம் இன்னும் ரிலீசாகவில்லை.

மேலும் தல 61வது படத்தையும் வினோத் இயக்க போனி கபூரே தயாரிப்பதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இந்த படத்தை வினோத் மீண்டும் இயக்க, போனி கபூருக்கு பதிலாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அஜித் நடித்த ‘விவேகம்’ & ‘விஸ்வாசம்’ படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Ajith 61 movie director and producer details here

PAN INDIA படத்தில் இணையும் விஜய்சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன்

PAN INDIA படத்தில் இணையும் விஜய்சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ மற்றும் ஹரிஸ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இவரின் அடுத்த படத்தில் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையவிருக்கிறாராம்.

அதிரடியான ஆக்சன் கதைக்களமாக இப்படம் உருவாகவுள்ளதாம்.

இதில் விஜய்சேதுபதியுடன் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்குகிறது.

இந்த புதிய படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA திரைப்படமாக தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Sundeep Kishan joins for a Pan India Movie

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இணைந்தார் விஜய்-சூர்யா பட ஹீரோயின்

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இணைந்தார் விஜய்-சூர்யா பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இந்த படத்தை தமிழில் எடுக்க பலர் முன்வந்துள்ள நிலையில் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.

பிஜுமேனன் நடித்த போலீஸ் அதிகாரியாக பவன் கல்யாணும் நடிக்கிறார்.

பிரித்விராஜ் நடித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக ராணா நடிக்கிறார்.

இந்த நிலையில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நித்யா மேனன் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விஜய்யின் மெர்சல் மற்றும் சூர்யாவின் 24 ஆகிய படங்களில் நித்யா மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Suriya film actress joins this hit remake

‘திட்டம் இரண்டு’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

‘திட்டம் இரண்டு’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

இதனால் ஓடிடி மற்றும் டிவி-யில் நேரடியாக படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘ஏலே’, ’புலிக்குத்தி பாண்டி’, ‘மண்டேலா’, ‘வெள்ளை யானை’, உள்ளிட்ட படங்கள் நேடியாக டிவியில் ஏற்கெனவே வெளியானது.

இந்த நிலையில் விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெளியாகிறது ‘பூமிகா’.

இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரவீந்திரன் பிரசாத் இயக்க கார்த்திக் சுப்பராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இதன் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23-ஆம் தேதி அன்றே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

சோனி லைவ் ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ அண்மையில் ரிலீசாகி கவனம் ஈர்த்துள்ளதால், பூமிகாவின் ரிலீசும் தற்போது உறுதியாகியுள்ளது.

Aishwarya Rajesh in next film release update is here

சூர்யா பட டப்பிங்கை தொடங்கினார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ்

சூர்யா பட டப்பிங்கை தொடங்கினார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடிப்பில், பாரம்பரியமாக ஜொலிப்பது, மிகப்பெரும் சாதனை.

நடிகர் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ் விஜய் வரை நடிப்பு அக்குடும்பத்தில் மரபாக, அழகாக வளர்க்கப்படுகிறது.

2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில், தாத்தா-தந்தை-மகன் மூவரும் திரையில் இணைந்து நடிக்கும் செய்தி, ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆர்ணவ் விஜய் இன்று தனது காட்சிகளுக்கான, டப்பிங் பணிகளை செய்யத் தொடங்கினார்.

இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இயக்குநர் சரவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், குழந்தைகளை மையப்படுத்தி, 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

மொத்த படக்குழுவும் இப்படம் உலக ரசிகர்கள் ரசிக்கும் படியான படமாகவும், மன அழுத்தத்தை நீக்கும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இருக்குமென உறுதியாக நம்புகிறது.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் ஊட்டியை சுற்றிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னா (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மேகா (எடிட்டிங்), மைக்கேல் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), வினோதினி பாண்டியன் (உடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

Arun Vijay son Arnav starts dubbing for his debut film

உங்க பெயர் முத்துராமலிங்கம்.? அப்படின்னா சினிமாவில் நடிக்க சூப்பர் சான்ஸ் இதோ..

உங்க பெயர் முத்துராமலிங்கம்.? அப்படின்னா சினிமாவில் நடிக்க சூப்பர் சான்ஸ் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேஸ்ட்ரோ இசைஞானி
இளையராஜா இசைமழையில்
ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் ஜெ.எம்.பஷீர் நடிப்பில் தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு

திரைக்கதை, வசனம், இயக்கம் R.அரவிந்த்ராஜ் B.A., DFTech.

முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’
என்ற பெயரில் பிரமாண்டமாக படபிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படபிடிப்பு நடக்க உள்ளது.

இதில் தேவர் தோன்றும் ஒரு பிரமாண்ட காட்சி 1000 பேர்பங்கேற்க படமாக்கபட உள்ளது.

இதற்காக படக்குழு ஐயாவின்
பெயரை கொண்ட 1000 பேரை படபிடிப்பில் பங்கேற்க வேண்டி
விளம்பரம் கொடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கம் என்ற பெயருள்ள 1000 பேர் கலந்து கொண்டு நடிக்க உள்ளனர்.

அதற்கான பிரமாண்ட செட் சிவகங்கையில் போடபட்டு வருகிறது.

இதில் 100 பேர் மொட்டை போடுவது போல் நடிக்க போவதாக தகவல். தென் மாவட்டம் படப்பிடிப்பால் கலை கட்ட போகிறது.

97102 34567, 90478 82233
என்ற எண்ணிற்க்கு உங்கள் புகைப்படம்
மற்றும் அடையாள அட்டையை அனுப்பவும்.

Here’s Chance to act in Tamil film

More Articles
Follows