தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் தொடாத பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் 2.0.
ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ரூ. 400 கோடியில் லைக்கா நிறுவனம் தயாரிக்க, ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அண்மையில் இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் ஒரு பாடலுக்காக மட்டும் ரூ. 10 கோடியை செலவழித்துள்ளனர்.
அடுத்த 2018 வருடம் ஜனவரி 26ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர்.
இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உள்ளதால் பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதே நாளில் பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கியுள்ள ‘Airaary’ என்ற படமும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தோனியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தவர் நீரஜ் பாண்டே என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Aiyaary movie ready to clash with 2point0 on January 2018