2 படங்களை நிறுத்திவிட்டு பேய் படத்துக்கு ரெடியாகும் ஐஸ்வர்யா தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள் ‘3‘ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதே படத்தின் மூலம்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இப்படத்தில் இடம் பெற்ற ஒய் தி கொல வெறி என்ற பாடல் உலகம் முழுக்க பிரபலமாக இந்த படம் நன்றாக ஓடியது.

இதனையடுத்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா தனுஷ்.

இந்த படங்களை தொடர்ந்து சினிமாவில் தங்கள் உயிரையே பணயம் வைத்து போராடும் சண்டைக் கலைஞர்களுக்காக ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

அது இன்னும் வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து அதிரடியாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக அறிவித்தார்.

ஆனால் அது என்ன ஆனதோ..? அதுவும் முடங்கிவிட்டது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு பேய் படத்தை இயக்கவுள்ளாராம்
இப்படத்தை கணவர் தனுஷ் தயாரிக்கவுள்ளார்.

தற்போது நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் முழு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Aishwarya Dhanush next direction movie updates

தாடி வச்சிட்டு ஐடி ஆபிஸ் போன அசிங்கமா பார்த்தாங்க.: நடிகர் சோமு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘6 அத்தியாயம்’ இது தமிழ்ச் சினிமாவில் ஒரு வித்தியாசமுயற்சி என்று பாராட்டப்படுகிறது.

இதில் ஆறாவது அத்தியாயத்தில் ‘சித்திரம் கொல்லுதடி’யில் அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருப்பவர் சோமு.

இவர் சாப்ட்வேர் உலகத்திலிருந்து திரையுலகத்துக்கு வந்திருப்பவர்.
இதோ சோமு தன்னைப் பற்றிக் கூறுகிறார்,

“நான் பள்ளி , கல்லூரி என்று படித்து சாப்ட்வேரில் புகழ் பெற்ற ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்குச் சின்ன வயது முதலே சினிமா என்றால் பிடிக்கும்.

அந்தக் கனவு உலகத்தில் நம் காலடி படாதா என்று ஏங்குவது உண்டு. நான் படித்து வேலைக்குப் போனதும் என் ஆர்வத்தை கலை நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தேன். எனக்கு நடனத்தில் அபார ஆர்வம். அலுவலக நடனக் குழுவில் நான் அங்கம் வகித்து ஆடுவேன்.

இப்படிப் போய்க் கொண்டிருந்த போது கலைஞர் டிவியில் ‘நாளைய இயக்குநர்கள் ‘சீசன் தொடங்கியது அது பலருக்கும் திரையுலகக் கதவுகளைத் திறந்து விட்டதை யாவரும் அறிவர்.

நானும் ஒரு குறும்படத்தில் நடித்தேன். அது சிறந்த நடிகருக்கான விருதையும் எனக்குத் தேடித்தந்தது. விருதை இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் கையால் பெற்றேன். முதல் குறும்படத்திலேயே சிறந்த நடிகர் விருது ,அதுவும் திரையுலகில் சாதனை படைத்த பாக்யராஜ் அவர்களால் என் பதை எண்ணிப் பெருமையாக இருந்தது.

நடிப்பில் இறங்கலாம் என்று சிறு நம்பிக்கையும் வந்தது. அதன் பிறகு நாளைய இயக்குநாகளுக்கே 5 குறும்படங்கள் நடித்தேன். வேறு மாதிரியும் என சுமார் 15 குறும்படங்களில் நடித்தேன்.

அப்படி ஒரு குறும்படமாக வந்த வாய்ப்பு தான் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கிய ‘சித்திரம் கொல்லுதடி’. அதுவே 6 அத்தியாத்தில் ஆறாவது அத்தியாயம். இன்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படுகிற முயற்சி அது ‘ அதைப் பார்த்த பலரும் என்னை இனங்கண்டு பாராட்டினார்கள்.

இது தான் என் திரையுலக அறிமுகக் கதை. ” என்று தன் முன் கதையைக் கூறினார் சோமு.

இவர் நடித்து இப்போது மு.களஞ்சியம் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு ‘படம் முடிந்திருக்கிறது. வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வட சென்னை’யில் நடித்திருக்கிறார்.

அந்த அனுபவங்கள் பற்றிக் கூறும் போது “என்னைத் திரையுலகிற்கு முழுத் தகுதியாக வளர்த்து உருவாக்கியவர் களஞ்சியம் அவர்கள் தான் என்று கூறுவேன்.

சினிமாவில் அவரே என் திரையுலக. தந்தை அவர் 3 மாநில விருதுகள் உள்பட பல விருதுகள் பெற்ற இயக்குநர் பூமணி பூந்தோட்டம், மிட்டா மிராசு, எதிரும் புதிரும் போன்ற பல படங்களை இயக்கியவர்.

அவர் ‘முந்திரிக்காடு’ படத்தில் நான் நடிக்கும் போது என்னைச் சரியானபடி நடிக்க வைக்க எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். படத்துக்காகப் பெரிய தாடி ஓராண்டு காலம் வளர்த்தேன் அத்துடனேயே அலுவலகம் போனேன்.

ஐடி துறையில் தாடியுடனா என்று என்னைச் சிலர் அருவருப்பா அசிங்கமா பார்த்தார்கள். நான் பொறுத்துக் கொண்டேன். அதன் பிறகுதான் படப்பிடிப்பு போனோம்.

படத்தில் முக்கியமான வில்லன் நான்தான். படத்தின் பெரும் பகுதியில் நான் வருவேன். சுமார் 60 நாட்கள் தஞ்சாவூர் . புதுக்கோட்டை . திருநெல்வேலி என்று படப்பிடிப்பு நடந்தது.

முந்திரிக்காடுகளில் செம்மண் பூமியில் இப்படி படப்பிடிப்பு போனது மறக்க முடியாதது. நான் நடித்திருந்ததை அண்ணன் சீமான் அவர்கள் பார்த்து என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டி வாழ்த்தியிருந்தார். அதை மறக்க முடியாது. அது விருது கிடைத்த மகிழ்ச்சியைத் தந்தது.

அதே போல வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்ததும் மறக்க முடியாதது. அதில் நான் சிறிய அளவில் வந்தாலும் அடையாளம் கண்டு பாராட்டப் படுவேன். ” என்கிறார் .

“சினிமாவுக்கு என்று வந்த பிறகு என்னை முழுத் தகுதியுள்ளவனாக மாற்ற வேண்டுமல்லவா? அதற்காக நடனப் பயிற்சி, கராத்தே, குதிரைச் சவாரி ,நீச்சல் என பலவற்றிலும் பயிற்சி பெற்றுக் கற்றுக் கொண்டேன்.

வில்லனாக எனக்கென ஓர் இடம் பெற வேண்டும், இதுவே என் இப்போதைய லட்சியம் “என்கிற சோமு கையில் புதிதாக மேலும் 2 பட வாய்ப்புகள் வந்துள்ளன .

இவர் பந்தயப் புறாக்கள் வளர்ப்பதில் கைதேர்ந்தவர்.

“இந்த 2018 க்குள் உங்கள் மனதில் பதிகிற ஒரு நடிகனாக நான் வந்து விடுவேன்” என்கிற சோமுவின் கண்களில் நம்பிக்கை மின்னுகிறது.

Techie Somu turns Into Villan in Munthiri Kaadu

காலாவுக்கு கடும் நெருக்கடி; ஸ்டிரைக்கால் தள்ளிப்போகும் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் உருவாக்கியுள்ள படம் காலா.

இப்படத்தை ஏப்ரல் 27-ல் ரிலீஸ் செய்யப் திட்டமிட்டு இருந்தனர்.

இதனிடையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் இருக்கும் என்ற கூறப்படுகிறது.

இந்த போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை.

இருந்தபோதிலும் போராட்டம் முடிந்த பிறகு, சென்சார் செய்யப்பட்ட படங்களை தேதி வாரியாக வரிசைப்படுத்த உள்ளனர்.

அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாம்.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்க வேண்டிய தடையில்லா சான்றையும் ‘காலா’ படக்குழு இதுவரை பெறவில்லை என கூறப்படுகிறது.

வேலைநிறுத்தத்தால், சான்றைப் பெற்று படத்தை தணிக்கைக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, காலா திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.

இவை தவிர பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவை 300 தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.

அத்துடன் சிறிய படங்களை வெளியிட வேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கையாம்.

இதனால் காலாவுக்கு அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kaala release may postponed also screens count may reduced

அஜித்துக்கு காத்திருக்காமல் சூப்பர் ஸ்டார்களுக்கு நயன்தாரா கால்ஷீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து கே.எம்.சர்ஜுனின் புதிய படம் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார்.

ஆனால் ஸ்டிரைக் காரணமாக படத்தின் சூட்டிங்கே இன்னும் தொடங்கவில்லை.

எனவே தனது கால்ஷீட்டுகளை ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படத்துக்கு கொடுத்துவிட்டாராம் நயன்.

இப்படம், 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதை என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ஹிந்தி, தெலுங்கு, கன்னட சூப்பர் ஸ்டார்கள் நடிக்கவுள்ளனர்.

நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்க, அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, கிச்சா சுதீப், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Nayanthara given her Viswasam call sheet dates to Telugu movie

 

நேர்மையான போலீஸ் ஆக நடிப்பதை விட வாழ்வது கஷ்டம்… : கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது.

இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி பேசியதாவது…

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது எனக்கு. இங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது.

இதனால் அதிகம் பாதிக்கபடபோவது யாரு என்று பார்த்தால் அவர்களுடைய குடும்பத்தினர் தான். போலீஸ் அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தைரியமாக வேலை செய்ய முடியும்.

இந்த நள்ளிரவிலும் வேலை செய்கிறார்களே போலீஸ் அதிகாரிகள் அவர்கள் சாப்பிட்டிருப்பார்களா என்று என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார்.

அப்படி இரவு பகல் பாராமல் வேலை செய்யும் காவல் துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஒரு அறக்கட்டளை வேண்டும். அப்படி பட்ட அறக்கட்டளையை தான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம். இந்த அறகட்டளை இப்போது பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகளையும் , ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு அரணாக இருக்கும்.

இது பொது மக்களால் முன்னின்று நடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ் நாடு முழுவதும் வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இது கண்டிப்பாக மேலும் வளரும்.

இங்கே இருக்கும் போலீஸ் அதிகாரிகள் தூங்காமலேயே வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பிரஷர் அதிகமாகிறது. பிரஷர் அதிகமாவதால் தான் அவர்கள் மக்களிடம் கோபப்படுகிறார்கள்.

அவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் தூங்க நேரம் கொடுக்க வேண்டும். அதே போல் இன்னும் நிறைய போலீஸ் அதிகாரிகளை புதிதாக பணியமர்த்தினால் தான் தூங்காமல் அனைவரும் வேலை செய்யும் நிலை மாறும்.

அவர்களுக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை கிடையாது. அவர்கள் மனதளவில் சந்தோஷமாக இருந்தால் தான் அவர்கள் நம்மோடு பேசும் போது சந்தோஷமாக பேசுவார்கள்.

நாம் நன்றாக வேலை செய்யும் அதிகாரிகளை புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர்களை பற்றி தவறாக மட்டும் தான் பேசுகிறோம். நாமும் நிறைய மாற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

போலீஸ் அதிகாரிகளின் மனசுமை குறைய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை என்றார் கார்த்தி.

இந்த அறகட்டளைக்கு நடிகர் கார்த்தி, சக்தி மசாலா, ராம்ராஜ் காட்டன்,வனிதா மோகன், ஆறுமுகசாமி ஆகியோர் ரூபாய் 10 லட்சம் விகிதம் 50லட்சம் அறக்கட்டளைக்கு நிதியாக வழங்கினர்.

Actor Karthi speech at former police officers charitable trust launch

சாவித்ரியாக நடிக்கும் கீர்த்திக்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகான திறமையான நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கி வருகிறார் நாக் அஷ்வின்.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் தமிழில ‘நடிகையர் திலகம்’ என்றும் தலைப்பிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் வருகிற மே 9ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பதை பார்த்தோம்.

தமிழ் மற்றும் மலையாளத்தை சரளமாக பேசக்கூடியவர் கீர்த்தி சுரேஷ் என்றாலும் அவரது குரலில் அவ்வளவு மென்மை இருக்காது.

எனவே அவருடைய குரல் சாவித்ரி கேரக்டருக்கு பொருந்தாது என்பதால் முன்னாள் நடிகை பானுப்ரியா குரல் கொடுத்து இருக்கிறாராம்.

More Articles
Follows