MGR ரசிகர் முதல் அதிமுக வேர் வரை..: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மரணம்.; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

MGR ரசிகர் முதல் அதிமுக வேர் வரை..: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மரணம்.; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஇஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.

1991 ஆம் ஆண்டு அதிமுகவில் ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராக இருந்த மதுசூதனன்.

2010 ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக செயலாற்றி வந்தவர் மதுசூதனன்.

இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக பிரிந்திருந்த நிலையிலும் கூட , கட்சியின் சின்னம், கொடி ஆகியவையை தேர்தல் ஆணையம் மதுசூதனிடமே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அதிமுகவின் அவைத்தலைவர் என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், கடைசி வரை அது பின்பற்றப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டார் மதுசூதனன்.

இதன் சிகிச்சைக்கு பின்னர் தேறியிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கட்சி வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று தண்டையார்பேட்டையில் இருந்தார்.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்த மதுசூதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காலமானார்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஆக. 05) கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில்..

“அதிமுகவின் அவைத் தலைவரும், அதிமுகவின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

எம்ஜிஆரின் விசுவாசமிக்க தொண்டர், எம்ஜிஆருக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த ரசிகர்; எம்ஜிஆர் கண்ட பேரியக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இயக்கத்தின் தொடக்க நாள் முதல் தன் விழிகளின் இமைகள் மூடும்வரை ஓயாது உழைத்த அதிமுக உடன்பிறப்பு; ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதி; அதிமுக தொண்டர்களை எப்பொழுதும் தன் தோளில் வைத்துக் கொண்டாடிய, அதிமுகவின் வேர்களில் ஒருவர் எனப் பலவாறாகவும், மதுசூதனனைப் பற்றி வரலாறு சொல்லும்.

அதிமுகவின் சோதனையான காலகட்டங்களில் அதிமுகவைக் கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய அதிமுகவின் தூண் சரிந்ததே என்று, கண்ணீர்க் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்? உண்மையிலேயே அவரது இழப்பு அதிமுகவுக்கும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மதுசூதனன் 1953-ம் ஆண்டு எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினைத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து வடசென்னை பகுதியில் எம்ஜிஆர் பெயரில் மன்றங்களை அமைத்து, சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்ஜிஆர் பெயரில் இரவுப் பாடசாலைகளைத் தொடங்கியவர்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உடன்பிறப்புகள் அனைவராலும் ‘அஞ்சா நெஞ்சன்’ என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட மதுசூதனன், எம்ஜிஆர் இயக்கம் தொடங்கியபோது, எம்ஜிஆர் நீக்கப்பட்டதைக் கண்டித்து சிறையில் இருந்துள்ளார்; அதிமுகவுக்காக ஏறத்தாழ 48 முறை சிறை சென்றுள்ளார்.

வடசென்னை மாவட்டத்தில், பகுதிக் கழகச் செயலாளராக, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக, மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றிய மதுசூதனனை எம்ஜிஆர் தமிழக மேலவை உறுப்பினராக ஆக்கினார்.

ஜெயலலிதா, 1991-ல் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது, சட்டப்பேரவை உறுப்பினராக்கி, அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவால் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டு, சிறந்த முறையில் கட்சிப் பணிகளை ஆற்றியவர்.

பின்னர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு, 5.2.2007 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மதுசூதனன் அதிமுக அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, தற்போதுவரை சீரிய முறையில் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தவர்.

ஏறத்தாழ 70 ஆண்டுகள் எம்ஜிஆரின் புகழ்பாடி, அதிமுக வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வாழ்நாளெல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் விசுவாசத் தொண்டராக வாழ்ந்து மறைந்த மதுசூதனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டுமென்றும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்களின் சார்பிலும் எங்கள் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவையொட்டி, 5.08.2021 முதல் 7.08.2021 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

அதேபோல், தமிழகம் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கழகக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும், அனைத்துக் கழக நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்”.

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

AIADMK Presidium Chairman Madhusudhanan passes away

JUST IN #30YearsofAjith.: தன்னை வெறுப்பவர்களுக்கும் நச்சுன்னு நன்றி சொன்ன தல

JUST IN #30YearsofAjith.: தன்னை வெறுப்பவர்களுக்கும் நச்சுன்னு நன்றி சொன்ன தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகிற்குள் நுழைந்து 30 வருடத்தை நிறைவு செய்கிறார் நடிகர் அஜித்.

குக்கிங், பைக் பிரியர், கார் ரேஸ், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராஃபர் துறைகளில் அஜித்திற்கு அதிக ஆர்வம் உண்டு.

இவர் 1990களில் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் ‘அமராவதி’யில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே தெலுங்கில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அஜித்.

இவரது ஆரம்ப கால சினிமா பயணத்தில் ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ ஆகிய படங்கள் முக்கிய திருப்பமாக அமைந்தது.

‘சிட்டிசன், ‘வாலி’ & ‘அமர்க்களம்’ போன்ற படங்கள் ஆக்‌ஷன் ஹீரோ என்ற புதிய அடையாளத்தை அஜித்துக்கு தந்தன.

அஜித்திற்கு மிகப்பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

ஆனாலும் கடந்த 2011ல் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார் அஜித்.

அதன்பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் மீடியாக்களுக்கு பேட்டி தருவதையும் தவிர்க்க ஆரம்பித்தார்.

‘ஆரம்பம்’, ‘வீரம்’, வேதாளம்’ ‘விவேகம்’, ‘என்னை அறிந்தால்’ படங்கள் அவரது வெற்றி படங்கள் வரிசையில் இணைந்தது.

பொது நிகழ்ச்சிகளில் எதிலும் அஜித் தலை காட்டாமல் இருப்பதால் திரையில் மட்டுமே அவரை காண கூட்டம் அள்ளும்.

தற்போது அவரது நடிப்பில் ‘வலிமை’ உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சினிமாவில் 30 வருடத்தை நிறைவு செய்துள்ள அஜித் தன் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் தன்னை வெறுப்பவர்களுக்கும் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரின் நாலு வரி ஆங்கில அறிக்கை இதோ…

Mr Ajith Kumar’s message on his 30th year in the film industry

Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals.
Live & Let live!
Unconditional Love Always!!
Ajith Kumar

பணம் பெறும் நோக்கத்துடன் வழக்கு..; ‘சூரரைப் போற்று’ ஹிந்தி உரிமை விவகாரம் குறித்து இணை தயாரிப்பாளர் விளக்கம்

பணம் பெறும் நோக்கத்துடன் வழக்கு..; ‘சூரரைப் போற்று’ ஹிந்தி உரிமை விவகாரம் குறித்து இணை தயாரிப்பாளர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில்…

“கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

“கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை,” என்று ராஜசேகர் கூறியுள்ளார்.

“எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுதா கொங்காராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று, 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யபட்டது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட பிராந்திய மொழி படமாகவும் சாதனை படைத்தது.

IMDB தரவரிசையில் ‘தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ மற்றும் ‘தி காட்பாதர்’ படங்களுக்கு அடுத்து 9.1 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை சூரரைப் போற்று பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No truth in Sikhya Entertainment’s claim says Suriya movie Co-Producer Rajsekar

தனுஷின் 44வது படத்திற்கு இலக்கியத் தமிழில் பெயர் வைத்த மித்ரன் ஜவஹர்

தனுஷின் 44வது படத்திற்கு இலக்கியத் தமிழில் பெயர் வைத்த மித்ரன் ஜவஹர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர்.

இவர்தான் தனுஷின் D44 படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். தங்கமகன் படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் அனிருத் இணையும் படமிது.

தனுஷின் இந்த புதிய படத்தில் நித்யா மேனன் & ராஷி கண்ணா & பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

மேலும் தனுஷுடன் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இன்று சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இப்பட டைட்டில் லுக் இன்று வெளியாகும் என நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது.

அதன்படி தனுஷின் 44வது திரைப்படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ என்ற படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் தனுஷ்.

அடுத்த செப்டம்பர் மாதத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்..: உங்களை பார்த்து யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என அர்த்தம் உண்டு.

தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில் புராணம் சொல்கிறது.

Dhanushs D44 movie Title look revealed

மக்கள் பிரச்சினைக்காக களமிறங்கிய வரலட்சுமி ஆஷ்னா ஐஸ்வர்யா சுபிக்‌ஷா

மக்கள் பிரச்சினைக்காக களமிறங்கிய வரலட்சுமி ஆஷ்னா ஐஸ்வர்யா சுபிக்‌ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் ‘கன்னித்தீவு’.

இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா என்று 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இப்படத்தை கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில்….

“கன்னித்தீவு என்ற பெயர் தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர், அதோடு ‘கன்னித்தீவு’ என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப் பெயரை படத்திற்கு வைத்தோம்.

மேலும் படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.

கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம். வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது.

சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள்.

உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாக்கியுள்ளதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார்.

ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்திற்கு சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

அதிரடியான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சிவா வடிவமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்த பின் வெளியிட தயாராக உள்ளது.

Actress Varalaxmi’s Kanni theevu is ready for release

JUST IN 48 மணி நேரத்தில் ரூ 30.30 லட்சம் கட்ட நடிகர் தனுஷுக்கு நீதிபதி கெடு

JUST IN 48 மணி நேரத்தில் ரூ 30.30 லட்சம் கட்ட நடிகர் தனுஷுக்கு நீதிபதி கெடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படுவது வழக்கம்.

தான் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். அத்துடன் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குமாறு கோரியிருந்தார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்திற்கு தடை உத்தரவும் பெற்றார்.

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2016ல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியில் 50% செலுத்தும்படி தனுஷுக்கு உத்தரவிட்டது.

தனுஷும் அதன்படி செய்தார்.

50% வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷ் தரப்பிலும் அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று ஆகஸ்ட் 5க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

அதன்படி இன்றைய விசாரணையில்…

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷ்க்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே என நீதி கேட்டுள்ளார்.

என்ன தொழில் செய்கிறார் என மனுவில் தெரிவிக்காதது ஏன்?

சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமான்ய மனிதர்கள் வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்?

இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷுக்கு ஒரு சட்டம் என்று இல்லை.

ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள்.

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை இன்று பிற்பகல் வணிகவரித்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு” என நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

நுழைவு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக நடிகர் தனுஷ் தரப்பு கூறியதை ஏற்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மறுப்பு.

இன்று பிற்பகல் விசாரணையில்…

சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கி ரூ.30.30 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும் என நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

High Court has directed Actor Dhanush to pay the pending tax amount of ₹30 Lakhs within 48 hours.

More Articles
Follows