ரஷ்யாவின் தலைநகரில் “அக்னி சிறகுகள்” படக்குழு !

ரஷ்யாவின் தலைநகரில் “அக்னி சிறகுகள்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agni siragugalபடத்தின் அறிவிப்பில் இருந்தே ஆச்சர்யங்களையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியிருக்கும்
“அக்னி சிறகுகள்” படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இடங்களுக்கு படம்பிடிப்பிற்காக பறந்திருக்கிறது. தங்களது அடுத்த கட்டப்படப்பிடிப்பை அங்கு துவங்கவுள்ளது.

“அக்னி சிறகுகள்” படத்தின் நடிகர்குழு விஜய் ஆண்டனி , அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், J சதீஷ் குமார், செண்ட்ராயன் இயக்குநர் நவீன் உட்பட படக்குழு அனைவரும் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சென்றடைந்துள்ளனர்.

படப்பிடிப்பு குறித்து இயக்குநர் நவீன் தெரிவித்ததாவது…

எங்களது படத்தின் இரண்டாம் கட்டப்பிடிப்பை ரஷ்யாவில் துவங்கவுள்ளோம். இங்கு படத்தின் முக்கியமான பகுதிகளும், படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளையும் படமாக்க உள்ளோம். கடந்த மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டியது அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி தங்களது மற்ற படங்களிள் பிஸியாக இருந்தார்கள். மேலும் ரஷ்யாவின் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் படத்திற்கான தகுந்த லோகேஷன்களை நாங்கள் தேடினோம். எங்களது படத்திற்கான மிகச்சிறந்த லோகெஷன்கள் இங்கு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் எங்கள் படக்குழுவிற்கு இவ்வளவு காலத்தையும் கடந்து ஆதரவு தந்ததற்கு தயாரிப்பாளர் T சிவா சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தந்த ஊக்கமும் ஆதரவும் தான் இப்படம் இந்த அளவு தரமாக உருவாவதற்கு காராணம். இங்கு இரண்டாம் கட்டப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கொல்கத்தாவில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஷாலினி ஃபாண்டே, அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் பிரகாஷ் ராஜ் உடபட பல முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள். K S பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். ஆரம்பம் முதலாக எதிர்ப்பர்ப்பின் உச்சத்தில் இருக்கும் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் T. சிவா தயாரிக்கிறார்.

டைரக்டர் கொடுக்கிற டயலாக்கை கொஞ்சம் மாத்திக்கிறேன்.. – யோகிபாபு

டைரக்டர் கொடுக்கிற டயலாக்கை கொஞ்சம் மாத்திக்கிறேன்.. – யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuநடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் மறுத்துள்ளார் யோகிபாபு. மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது,

“தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி” என்றார்

‘காந்தியம்’ படத்தில் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்த லிங்கா யோசனை

‘காந்தியம்’ படத்தில் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்த லிங்கா யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gandhiyam movie will teach you Modern lifeஜெய் ஸ்ரீ ராம் கிரியேஷன்ஸ் சார்பில் லிங்கா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தியம்’.

இப்படத்தில் ஹீரோயினாக அக்‌ஷதா நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தனசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் செ.காளிமுத்து, சரண்யா, ஜோகி பி.சரண், மறைந்த அண்ணாமலை ஆகியோர் பாடல்கல் எழுதியிருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், டாக்டர் ரவி கே.விஷ்ணு பிரசாத், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி, சக்தி டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் அருள், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

ரவி கே.விஷ்ணு பிரசாத் பாடல்கள் குறுந்தகடை வெளியிட, சினேகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஹீரோ, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்கா, “’காந்தியம்’ என்ற இந்த திரைப்படம் உங்களுடைய பார்வைக்கு மிக வித்தியாசமாக இருக்கும்.

ஒரு கிராமத்தை எப்படி நகரமாக மாற்றுகிறார்கள் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். நமது வாழ்க்கை தரம் ஏன் இப்படி இருக்கிறது, நாம் ஏன் இப்படி இருக்கிறோம், என்பதை விவரிக்கும் இப்படம் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்.

கோவையில் உள்ள பி.கே.ராமராஜ் வாணவராயர் ஜமீன் கோட்டையில் தான் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறோம். இப்படம் சாமாணிய மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

நாகரீகமானவர்களுக்கும், நாகரீகத்தை இன்னும் அறியாமல் இருப்பவர்களும் பிடித்தமான ஒரு படமாகவும் இப்படம் இருக்கும்.

இந்த படத்தில் மறைந்த அண்ணாமலை எழுதிய அம்மா பாடல் அனைவரையும் கவரும். குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு பாடலாகவும் இருக்கும். இப்பாடல் மட்டும் இன்றி மற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.

சினேகன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முக்கிய காரணம் பாடலாசிரியர் காளிமுத்து. நான் பல காவல் துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் தமிழ் பற்று அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், எப்படி தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது என்று கூட நான் யோசித்திருக்கிறேன்.

ஒரு பக்கம் காவல் பணி, மறுபக்கம் தமிழை காக்கும் பணி என்று பேலன்ஸ் செய்வார்கள். அவர்களைப்போன்ற ஒரு காவல் துறை அதிகாரி தான் காளிமுத்து. அவர் எழுதிய கவிதை புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். தற்போது அவர் பாடலாசிரியாக அறிமுகமாகியிருக்கும் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘காந்தியம்’ என்ற தலைப்பே ஈர்க்கிறது. அகிம்சை என்ற ஒன்றை உலகிற்கு கற்றுக்கொடுத்த காந்தி பிறந்தநாளான இன்று (அக்.2) இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது சிறப்பானதாகும். இந்த படம் ஆக்‌ஷன் படம் என்று சொன்னார்கள்.

காந்தியம் என்ற தலைப்பு வைத்துவிட்டு ஆக்‌ஷன் இருக்கிறது என்றால், அதற்கு நிச்சயம் பெரிய காரணம் இருக்கும், அது சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால் சிறிய படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ‘காந்தியம்’ நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் ஒபிஆர் சங்க தலைவர் விஜய முரளி, ஜாக்குவார் தங்கம், ரவி கே.விஷ்ணு பிரசாத், அருள் அனைவரும் பேசினார்கள்.

Gandhiyam movie will teach you Modern life

Gandhiyam (13)

சிரஞ்சீவியின் ‘சைரா’ படம் பார்த்த 7 போலீசார் சஸ்பென்ட்

சிரஞ்சீவியின் ‘சைரா’ படம் பார்த்த 7 போலீசார் சஸ்பென்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

syeraaசிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய்சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் சைரா நரசிம்மா ரெட்டி நேற்று வெளியானது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி படம் வெளியாவதால் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆந்திராவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களின் வேலைக்கே இநத் படம் ஆப்பு வைத்துள்ளது.

நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆந்திர மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. எனவே போலீஸ் பணியில் இருக்க வேண்டும் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இருந்தபோதிலும் கர்னூல் பகுதியை சேர்ந்த ரச்சர்லா, கோஸ்படு உள்ளிட்ட 7 போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்றுவிட்டனர்.

இது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுவிட்டது.

எனவே 7 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி டிஎஸ்.பிக்கு உத்தரவு போய் இருக்கிறது.

தற்போது 7 பேரின் வேலையும் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.

ENPT படம் நவம்பர்ல வரும் சொல்றாரு டைரக்டர்..; நம்பலாமா?

ENPT படம் நவம்பர்ல வரும் சொல்றாரு டைரக்டர்..; நம்பலாமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ENPT Dhanushகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இவர்களுடன் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.

தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

இந்த படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் 4 வருடங்கள் தள்ளிப் போனது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பேசும்போது

எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும். நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

இதை நம்பலாமா? சரி.. நவம்பர் வரை காத்திருப்போம்.

சிவாஜி 9.. கமல் 10.. யோகிபாபு 11… ‘காவி ஆவி நடுவுல தேவி’

சிவாஜி 9.. கமல் 10.. யோகிபாபு 11… ‘காவி ஆவி நடுவுல தேவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuஒரே படத்தில் இரட்டை வேடங்கள், மூன்று வேடங்கள் என நம் அபிமான நடிகர்களை பார்த்திக்கிறோம்.

ஆனால் 5க்கும் மேற்பட்ட வேடங்களில் சிவாஜி மற்றும் கமல் இருவரும் மட்டுமே நடித்துள்ளனர்.

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்திருத்தார். தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார் கமல்.

தற்போது இவர்களை மிஞ்சும் வகையில் 11 வேடங்களில் நடிக்கவுள்ளாராம் யோகிபாபு.

புகழ்மணி இயக்கும், காவி ஆவி நடுவுல தேவி படத்தில், ராம்சுந்தர் – பிரியங்கா ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை கதையை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார்.

இதில் ”காதலர்களை சேர்த்து வைப்பதற்காக, யோகிபாபு, 11 விதமான, ‘கெட் அப்’களில் தோன்றுகிறாராம்.

More Articles
Follows