‘தளபதி 66’ படத்தில் இணையும் மெகா ‘மெர்சல்’ கூட்டணி

‘தளபதி 66’ படத்தில் இணையும் மெகா ‘மெர்சல்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Vijay team up with Mersal Producer for Thalapathy 66பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 100-வது படமாக விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்தது.

இந்த படத்தை அட்லி இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்க கடந்த 2017ல் வெளியானது.

இந்த படம் வசூல் சாதனை செய்திருந்தாக கூறப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல… ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இந்த படம் தோல்வி படம் எனவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் மெர்சல் தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் அண்மை பேட்டியில்… “மெர்சல் தோல்விப் படமல்ல என்பதை நான் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நானும் விஜயும் சில நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். தளபதி 65 படத்தை முடித்த பிறகு, அவர் எனக்காக மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

ஆக மீண்டும் மெர்சல் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.

இதிலும் பிரபல இயக்குனர்கள் நடிகைகள் மெகா கூட்டணி இணையும் என எதிர்பார்க்கலாம்.

தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. நாயகியாக காஜல் நடிக்க, தமன் இசையமைக்கிறார்.

Again Vijay team up with Mersal Producer for Thalapathy 66

What is Plan B? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கை கொடுக்கும் விஜய்சேதுபதி

What is Plan B? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கை கொடுக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwaryas next First Look will be revealed by Vijay Sethupathiஒரு பக்கம் நாயகியாக நடித்த போதும் சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இன்று மே 7 மாலை 6 மணிக்கு விஜய்சேதுபதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

What is Plan B? என கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்து விளம்பரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwaryas next First Look will be revealed by Vijay Sethupathi

விஷவாயு கசிவு.; இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கும் முதல்வர்

விஷவாயு கசிவு.; இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கும் முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vizag gas leak Andhra CM announces Rs 1 crore compensationகொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் இன்று அதிகாலை விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு மக்களிடையே அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த ஆலையிலிருந்து ரசாயன வாயு கசிந்து வெளியேறி காற்றில் கலந்துள்ளது.

இதனால் அந்த பகுதியுள்ள மக்கள் மூச்சுவிட முடியாமல் தவித்து வருகின்றனர்.

பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை ஒரு குழந்தை உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உடனடியாக அறிவித்தார்.

மருத்துவனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

வாயு கசிவு ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் சில அறிவுரைகளை தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஈரத்துணியால் முகத்தை மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும்,

தோலில் அரிப்பு ஏற்பட்டால் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

கண் எரிச்சல் ஏற்பட்டால் கண்களை நன்றாக தண்ணீரால் கழுவ வேண்டும்,

உடல்நிலையில் வேறு மாற்றம் ஏற்பட்டு அசவுகரியமாக உணர்ந்தால் உடனடியாக 108-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்

என அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் தமிழக முதல்வர் பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாகப்பட்டினம் ரசாயன வாயு கசிவு குறித்து விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Vizag gas leak Andhra CM announces Rs 1 crore compensation

டாஸ்மாக் ஓபன்: பட்டாசு வெடித்து மது விற்பவருக்கு மாலை; ஓவர் ஆட்டத்தில் குடிகாரர்கள்

டாஸ்மாக் ஓபன்: பட்டாசு வெடித்து மது விற்பவருக்கு மாலை; ஓவர் ஆட்டத்தில் குடிகாரர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tasmac wine shops opening Celebration in Tamilnadu கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. மக்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

கடந்த மே 4 முதல் சில தளர்வுகளுடன் சில அத்தியாவசிய வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியளித்து மத்திய அரசு.

இதனையொட்டி மே 7 முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று மே 7ஆம் தேதி சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கிட்டதட்ட 45 நாட்களாக குடிக்காமல் இருந்த குடிகாரர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

ஒரு சிலர் கடந்த நாட்களில் அதிக விலை கொடுத்து ப்ளாக்கில் எப்படியோ வாங்கி குடித்து வந்துள்ளனர்.

ஆனால் இன்று அரசே சரக்கடிக்க அனுமதி அளித்துவிட்டால் தலை கால் புரியாமல் ஆடத் தொடங்கியுள்ளனர்.

எனவே டாஸ்மாக்கில் மது விற்பவருக்கு மாலை போட்டு வரவேற்றுள்ளனர். ஒரு சில இடங்களில் கடை திறக்கும் சமயத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

குடிப்பவர்களை குடிகாரர்களை என சொல்லாமல் மதுப்ரியர்கள் என சொல்லவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே வேளையில் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் டாஸ்மாக் திறப்புக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளும் மதுக்கடை திறப்புக்கு தமிழக அரசை கண்டித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறியதாவது… படிப்படியாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும். விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என கூறினார்.

Tasmac wine shops opening Celebration in Tamilnadu

லாக் டவுனில் நாத்து நடும் நடிகை கீர்த்தி பாண்டியன்; குவியும் பாராட்டு

லாக் டவுனில் நாத்து நடும் நடிகை கீர்த்தி பாண்டியன்; குவியும் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthi Pandiyan doing Agriculture work in her landபிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது மலையாள ரீமேக்கான ஹெலன் பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கோகுல் இயக்கும் இந்த படத்தில் தந்தை அருண் பாண்டியனும் மகள் கீர்த்தியும் இணைந்து நடித்து வருகின்றனர்.

தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நடிகை கீர்த்தி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் டிராக்டர் மூலம் தானே விவசாய நிலத்தை உழும் வீடியோவை வெளியிட்ட அவர், தற்போது அந்த நிலத்தில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றிருக்கிறேன்’ என கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Keerthi Pandiyan doing Agriculture work in her land

மது : மனைவிக்குச் சக்களத்தி… சாவுக்கு ஒத்திகை…; – வைரமுத்து

மது : மனைவிக்குச் சக்களத்தி… சாவுக்கு ஒத்திகை…; – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu condemns TN Govt for Tasmac opening கொரோனா ஊரடங்கினால் மக்கள் அவதிப்பட்டு இருக்கும் நிலையில் மே 7 முதல் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அங்கு குடிமகன்கள் கூட்டம் கூடும் எனவும் இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் எனவும் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார்.

மது என்பது –
அரசுக்கு வரவு;
அருந்துவோர் செலவு.

மனைவிக்குச் சக்களத்தி;
மானத்தின் சத்ரு.

சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.

ஆனால்,
என்ன பண்ணும்
என் தமிழ் மதுக்கடைகளின்
நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?
#TASMAC #Tamil #TamilNadu #Corona

” என வைரமுத்து கூறியுள்ளார்.

Vairamuthu condemns TN Govt for Tasmac opening

More Articles
Follows