‘இன்னைக்கு நைட் மட்டும் நீ…’ மீண்டும் சிம்பு ‘பீப் சாங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்வில் மாட்டிக் கொள்வது ஒரு ரகம். ஆனால் வம்பை விலைக்கு வாங்குவது ரெண்டாவது ரகம்.

இதில் சிம்பு ரெண்டாவது போலவே.

கடந்த ஆண்டு டிசம்பரில் (2015) டிசம்பரில் பீப் சாங் போட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

தற்போது அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, இந்த டிரெண்ட் சாங் தற்போது வெளியாகியுள்ளது.

இன்னைக்கு நைட் மட்டும் நீ காதல் பண்ணினா போதும் என்று இப்பாடல் தொடங்குகிறது.

இப்பாடலுக்கு முன்பே சில வரிகள் வருகின்றன. அதில் பாட தோனுது. ஆனா மியூசிக் வரல, டியூன் வரல.. ஒரு ….. வரல… என்ற வரிகளும் வருகிறது.

இப்பாடலும் சர்ச்சைக்குள்ளாகும் எனத் தெரிகிறது.

மீண்டும் விஜய்-ஜோதிகாவுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் தெறி இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஜோதிகா, சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் விஜய், ஜோதிகா நடித்திருந்தனர்.

தற்போது இவர்கள் மூவரும் மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் மட்டும் 150…. விஜய்-சிவகார்த்திகேயன் 100 தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் இரண்டு வாரங்கள் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கும் காலம் இது.

200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்து, ஒரு மாதம் ஓட்டி, போஸ்டர் அடிப்பதை பெருமையாக நினைக்கின்றனர்.

இந்நிலையில், இவ்வருடத்தின் சூப்பர் ஹிட்டான கபாலி படம், சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாட்களையும், மதுரை மணி இம்பாலா தியேட்டரில் 150 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளது.

இதனையடுத்து, விஜய் நடித்த தெறி மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் ஆகிய படங்கள் நூறு நாட்கள் ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் பார்முலாவில் விக்ரம்-ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெள்ளைத் தலைக்கு கறுப்பு மை அல்லது தலையில் விக் என சில ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தனது ஒரிஜினல் நரைத்த தலைமுடியுடன் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.

தற்போது இதனைப் பின்பற்றி வனமகன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

இவர்களைத் தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கவுள்ள படத்தில் சீயான் விக்ரமும் இதே லுக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2017 புத்தாண்டு முதல் பொங்கல் வரை… பட்டைய கிளப்பும் பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் வரும் 2017 பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, படத்தின் ட்ரைலருக்கும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இதன் டிரைலரை 2017 ஜனவரி 1ஆம் தேதி வெளியிடக்கூடும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

இதனால் புத்தாண்டு தொடக்கம் முதலே பைரவா பட்டைய கிளப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரே நாளில் ஒரு கோடி… இது சன்னி லியோன் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னுடைய ஹாட் படங்களால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சன்னி லியோன்.

இவர் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் ராயிஸ் Raees படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இப்பாடல் இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பாடல் இணையத்தில் வெளியான முதல் நாளிலேயே 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

இதன் மூலம் ஒரே நாளில் உலகிலேயே அதிகம் பேர் பார்த்த வீடியோவாக அப்பாடல் சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows