இது நம்ம ஆளு கூட்டணியில் இணைந்த வாலு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் ‘இது நம்ம ஆளு’.

இப்படத்தை போலவே பாடலுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் சிம்புவின் சகோதரர் குறளரசன்தான்.

இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் மீண்டும் குறளரசனே இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.

கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டு இப்படத்தில் சிம்பு நடிப்பார் என சொல்லப்படுகிறது.

அதர்வா-சூரி-ரெஜினா நடிக்கும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செம போதை ஆகாது என்ற படத்தை தொடர்ந்து அதர்வா நடிக்கவுள்ள படம் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்.

அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கும் இப்படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.

இதில் ஜெமினி கணேசனாக அதர்வாவும், சுருளிராஜனாக சூரியும் நடிக்கின்றனர்.

முதலில் அதர்வா வேடத்தில் கலையரசன் நடிப்பார் என கூறப்பட்டது.

தெய்வ வாக்கு, ராசய்யா, சரோஜா உள்ளிட்ட படங்களை தயாரித்த அம்மா கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இன்று இதன் படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியுள்ளனர்.

‘ஜெமினிகணேசன் மற்றும் சுருளிராஜன் என்றாலே நம் நினைவுக்கு வருவது காதலும் காமெடியும்தான். எனவே இவ்விரண்டையும் மையமாக கொண்டே இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம்.

‘ஷங்கர் படத்தை விட ‘கபாலி’க்குதான் ஐயம் வெயிட்டிங்…’ நானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெப்பம், நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் நானி.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான இவரின் ஜென்டில்மேன் என்ற படம் அண்மையில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் கபாலி படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நானி.

அப்போது அவர் பேசியதாவது…

“நான் இயக்குனர் ஷங்கரின் தீவிர ரசிகராக இருந்தாலும் 2.0 படத்தை விட கபாலியை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

அதற்கு காரணம் பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினி இதில் டான் ஆக நடித்துள்ளார்.

ரஜினியால் மட்டுமே மீண்டும் அப்படி ஒரு பவர்வுல் கேரக்டரை நடிக்க முடிகிறது” என்று ரஜினி மீது தான் வைத்திருக்கும் அன்பை தெரிவித்தார் நானி.

‘சொன்னபடி செய்து காட்டியவர் ரஜினி’ – சத்யநாராயணா பேட்டி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரஜினிகாந்த் சொன்னடிபடி ரூ. 1 கோடி தரவேண்டும் என்பதை வலியுறுத்த போவதாக விவசாயிகள் சங்கம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்ய நாராயணா, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் தமிழகத்தில் பிரசிப்பெற்ற கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார்.

நேற்று கும்பகோணம் மற்றும் திருநாகேஸ்வரத்தில் தரிசனம் செய்ததை தொடர்ந்து இன்று காலை தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்துள்ளார்.

தரிசனம் முடித்தபின் பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்…

‘ரஜினி உடல் நலம் பெறவும், உலக மக்கள் அமைதிக்காக வேண்டியும் கோயில்களில் அர்ச்சனை செய்து வருகிறேன்.

தற்போது ரஜினி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்.

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ. 1 கோடி தருவதாக அறிவித்திருந்தார். அவர் சொன்னப்படியே ரூ. 1 கோடியை வங்கியில் டெபாசிட்டும் செய்துவிட்டார்.

நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த பணத்தை அவர் கொடுப்பார். அவர் சொன்னால் சொன்னதை செய்வார். அதுதான் ரஜினி’ என்றார்.

தன் மகள் மூலம் கருணாநிதியின் உறவினர் ஆகிறார் விக்ரம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விக்ரம். இவரது நடிப்பில் இருமுகன் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் இவரது மகள் அக்‌ஷிதாவிற்கான திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த இருக்கிறாராம்.

இவ்விழா ஜீலை மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

அக்‌ஷிதாவை மண முடிக்கப் போவது Cavin Kare குழுமத்தின் நிறுவனர் ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்தான்.

இவர் திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேரன். அதாவது மனு ரஞ்சித்தின் அம்மா கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உறவுகள் மூலம் கருணாநிதியின் உறவினர் ஆகிறார் விக்ரம்.

கபாலி சீக்ரெட்ஸை ஆந்திராவில் அவுட்டாக்கிய ரஞ்சித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி வருகிற ஜீலை 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால், படக்குழுவினர் இரவு பகல் பாராமல் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் தெலுங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்.

அப்போது கபாலி கதையின் ஒரு பகுதியை அவர் கூறினாராம்…

“சுதந்திர காலத்திற்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசியாவிற்கு தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை அழைத்து சென்றதாம்.

அங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் இவர்களை வேலைக்கு அமர்த்தி கடுமையாக வேலை வாங்கியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த கபாலி புரட்சி செய்து, தன் மக்களை காப்பாற்ற போராடுகிறார். இந்த போராட்டமே இதன் மையக்கரு.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஆக்ஷன் படம் மட்டுமல்ல. சென்டிமெண்ட் நிறைந்த கதையம்சம் உள்ள படம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

More Articles
Follows