இங்கதான் ரூம் போட்டு இருக்கேன்.. தைரியமிருந்தா நேரில் வாங்கடா..; விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படம் ‘மெர்சல்’.

இந்த படத்திற்காக டுவிட்டரில் ‘எமோஜி’யை அறிமுகம் செய்திருந்தனர்.

இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் இதை விஜய் ரசிகர்கள் டிரெண்டிங்கில் கொண்டு வந்து கொண்டாடினர்.
இதை கிண்டலடித்திருந்தார் நடிகை மீரா மிதுன்.

“எமோஜிக்காக செலவு செய்த பணத்தைக் கூட திரும்ப எடுக்க முடியவில்லை. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மூடப்பட்டது.
ராமன் மேஜிக், உங்க சம்பளத்தை வாங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன், அப்படி வரவில்லை என்றால் விஜய்க்கு போன் செய்யுங்கள்,” என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு வழக்கம்போல விஜய் ரசிகர்கள் மீராவை கழுவி கழுவி ஊற்றி கமெண்ட்டுக்களை வீசினர்.

இதனையடுத்து தான் இப்போது பொள்ளாச்சி சென்று கொண்டிருப்பதாக காரில் அமர்ந்து ஒரு போட்டோவை போட்டிருந்தார்.

அதன்பின்னர் சில மணிகளில் பொள்ளாச்சியில் ரூம்ல இருக்கேன். தைரியம் இருந்தா நேரில் வாங்கடா என கமெண்ட் போட்டு ஒரு போட்டோவை போட்டுள்ளார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் மேலும் டென்ஷன் ஆகிவிட்டனர்.

படுகேவலமான வார்த்தைகளால் மீராவை திட்டி வருகின்றனர். தைரியம் இருந்தா அட்ரஸ் சொல்லு.. எங்கிருந்தாலும் நேரில் வர்றோம் என கமெண்ட்டுக்களை போட்டு வருகின்றனர்.

Again and Again Model Meera Mithun clash with Vijay fans

‘ஆதிபுருஷ்’ படத்திற்காக கடவுள் ராமராக மாறும் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் பிரபாஸ்.

இதன்பின்னர் பிரம்மாண்டமாக தயாரான சாஹோ படத்தில் நடித்தார்

தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ராதே ஷ்யாம் என்ற படத்தில் தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இதனையடுத்து பிரபாஸின் 22 பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.

பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது.

மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.

இப்பட படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Prabhas to star in Om Rauts 3D action movie Adipurush

‘நீ சுடாம வந்தியா’… அடல்ட் காமெடி படத்தில் ‘டிக் டாக்’ இலக்கியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா சான்ஸ் யாருக்கு எப்போது வரும் என்று யாராலும் யூகிக்கவே முடியாது.

சினிமாவையே சுற்றி சுற்றி பல வருடங்களாக தங்கள் வாழ்க்கையை வீணடித்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சினிமா சான்ஸ் என்பது கனவாகவே போகும்.

ஆனால் ஒரு சிலருக்கு… அதிர்ஷ்டம் திடீரென வரலாம்.

அண்மைக்காலமாக டிக் டாக் செயலியில் பிரபலமான பலருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அப்படியொரு வாய்ப்பு டிக் டாக் இலக்கியாவுக்கு வந்துள்ளது.

ரைசா வில்சன் நடிக்கும் ஒரு படத்தில் இலக்கியா நடித்து வருகிறாராம்.

இதனையடுத்து மற்றொரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

விக்கி என்பவர் ஹீரோவாக நடிக்க அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இப்படத்துக்கு ‘நீ சுடாம வந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அடல்ட் காமெடி ஜானரில் படம் உருவாகு வருகிறதாம்.

Tik Tok fame Elakkiya in Adult Comedy movie

மீண்டும் நடிக்க வரும் ‘காதல்’ சந்தியா..; சினிமாவுல இல்ல சீரியல்ல நடிக்கிறாங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் சந்தியா.

இதனையடுத்து ’டிஷ்யூம், வல்லவன், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கூடவே மலையாள சினிமாவிலும் நடித்தார்.

2015-ம் ஆண்டில வெங்கட் சந்திரசேகரன் என்பவரை குருவாயூரில் திருமணம் செய்துக் கொண்டார்.

அந்த சமயம் சென்னையில் வெள்ளம் வந்துவிட்டதால் தன் வரவேற்புக்கான பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தார் சந்தியா.

தற்போது கணவர் ஒரு குழந்தை என வசித்து வரும் இவர் சினிமாவில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ தொடரில் கவுரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

அதற்கான புரமோ வீடியோக்களையும் சன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது

2 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகும் ‘கண்மணி’ சீரியலில் பூர்ணிமா பாக்யராஜ், சஞ்சீவ் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kadhal fame Actress Sandhya in Sun TV Serial Kanmani

புதிய பாராளுமன்றத்தை சென்னையில் கட்டி இந்தியாவின் 2வது தலைநகரமாக மாற்ற விசிக எம்பி. கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் தலைநகரமாக சென்னை உள்ளது. இங்கு மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் திருச்சியை 2வது தலைநகரமாக உருவாக்க அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தீர்மானித்திருந்தார்.

இதற்காக திட்டங்களை அப்போதே அவர் பல எதிர்ப்புகளை மீறியும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஏனோ அவரால் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் முதல்வர்களாக இருந்த கருணாநிதியோ ஜெயலலிதாவோ அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் சில தினங்களாக மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரகமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

முக்கியமாக சில அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியும் அந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் தி.மு.க எம்.எல்.ஏ சரவணனும் அதனைத் தெரிவித்துள்ளார்.

மதுரையை 2ம் தலைநகராக அறிவிக்கிறோமோ இல்லையோ, முக்கிய அலுவலகங்களை மதுரைக்கு பிரித்துக் கொடுக்கலாம் என்று பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவின் 2வது தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார் அவருடைய ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுவதில் முனைப்பாக இருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்றத்துக்கென சிறப்பு வாய்ந்த கட்டடம் இருக்கும்போது புதிதாக கட்டிடம் தேவை இல்லை.

இந்தியாவில் இரண்டாவதாக நாடாளுமன்றம் கட்டவேண்டும் என்றால் அதை சென்னையில் கட்டுங்கள். குளிர்காலக் கூட்டத்தொடரை சென்னையில் நடத்துங்கள்.

வட மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் தென் இந்தியப் பண்பாட்டை, வளர்ச்சியை நேரில் பார்த்து தமது மாநிலமும் இப்படி முன்னேறவேண்டும் என்ற உணர்வைப் பெறட்டும்.

மேலும் இந்தியாவின் 2வது தலைநகராக சென்னையை அறிவியுங்கள். அதிகாரப் பரவலாக்கத்துக்கு அது அடையாளமாகத் திகழும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Chennai should be Indias 2nd Capital says VCK party MP

மீண்டும் படம் தயாரிக்கும் ஏவிஎம்..; ரஜினி ஆசியுடன் ‘அந்த நாள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். இந்த நிறுவனம் சில ஆண்டுகளாக படம் தயாரிக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தயாரிக்கும் புதிய படத்திற்கு அந்த நாள் என்று பெயரிட்டுள்ளனர்.

அந்த செய்தி வருமாறு…
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க R. ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் அந்த நாள்.

வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கான இறுதி க்கட்ட ப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

விரைவில் வெளிவரவிருக்கும் அந்த நாள் படத்தில் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு: சதீஷ் கதிர்வேல், இசை: N. S. ராபர்ட் சற்குணம்,
இயக்கம்: வி.வி.
தயாரிப்பு : R .ரகுநந்தன்

விரைவில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இப்பொழுது படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று 18-8-2020 வெளியிடப்பட்டது.

AVMs Andha Naal movie 2nd look poster released

More Articles
Follows