தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் ’அனபெல் சுப்பிரமணியம்.
இப்படத்தை தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் சுந்தரராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் நீளம் கருதி மூன்று பாகங்களாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை ’அனபெல் சேதுபதி’ என்று மாற்றவிருப்கிறார்களாம்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என நம்பலாம்.
அண்மையில் சிம்பு நடித்து வரும் படத்தின் பெயரை ‘வெந்து தணிந்தது காடு’ என மாற்றியுள்ளனர் (பழைய பெயர் : நதிகளிலே நீராடும் சூரியன்) என்பது குறிப்பிடத்தக்கது.
After simbu now Vijay Sethupathi changes his movie title
