ரஜினி-அஜித்துக்கு பிறகு சிவா தான்…; அடித்துச் சொன்ன அனிருத்!

After Rajini and Ajith i used to watch Siva movies at FDFS says Anirudhபிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர்.

வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார். வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் மிர்ச்சி சிவா, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அனிருத் பேசியதாவது, ” இந்த படத்துக்கு இசையமைத்துள்ள இசை சுனாமி பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள். படத்தின் ஹீரோ வைபவின் தீவிர ரசிகன் நான்.

மேயாதமான் படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். அந்தளவுக்கு அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு மிர்ச்சி சிவாவின் படத்தை தான் முதல் நாள் அன்றே தியேட்டருக்கு சென்று பார்ப்பேன். அதன் பிறகு அவரை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டுவேன். வணக்கம் சென்னை படத்திற்கு முன்பே அவரை பிடிக்கும்.

அதேபோல வெங்கட்பிரபுவுக்கு நான் பெரிய ரசிகன். சென்னை 28 படம் வந்தபோது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

தியேட்டருக்கு சென்று நண்பர்களுடன் படம் பார்த்து என்ஜாய் செய்தேன். வெங்கட்பிரபு டீம் போல நாமும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என எனது நண்பர்களிடமும் அவ்வப்போது கூறுவேன்”.

இவ்வாறு அனிருத் பேசினார்.

After Rajini and Ajith i used to watch Siva movies at FDFS says Anirudh

Overall Rating : Not available

Related News

Latest Post