போதை பொருள் விவகாரம்.: நடிகைகள் ராகினி திவேதி-சஞ்சனா கல்ராணியிடம் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகிறல் கன்னடம் மற்றும் மலையாள சினிமா வட்டாரத்தில் போதை புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இது தொடர்பாக நடந்த சோதனைகளில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய நபராக கருதப்பட்ட கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.

இதில் அவர் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்படி நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

சஞ்சனா கல்ராணி, தமிழில் நடித்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். தண்டுபால்யா 2ம் பாகத்தில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது மற்றொரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு பிரச்னையை கூறி சஞ்சனாசிங் தற்போது ஆஜராக முடியவில்லை எனவும் பிறகு ஆஜர்வதாக தெரிவித்து இருந்தாராம்.

கன்னட படங்களில் நடித்து வரும் ராகினி திவேதி தமிழில் நிமிர்ந்து நில், அரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ராகினி தனது வழக்கறிஞர் மூலம் செப்டம்பர் 7-ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்துள்ளார். இதை ஏற்காத போலீசார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.

இதனையடுத்து ஐகோர்ட்டில் அனுமதி பெற்று இன்று காலை பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

இதன்பின்னர் ராகினியை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நம்பிக்கையை கொண்டாடுவோம்” இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தான். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பல சாதனைகளை படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் இன்று தனது 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1970-களில் சண்முகா ஸ்டோர்ஸ் என்னும் 720 சதுரடியில் துவங்கப்பட்ட சிறிய பாத்திரக்கடை இன்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அளவிற்கு வளர்ந்து நின்று மக்களின் இதய மாளிகையில் குடியேறியிருக்கிறது இந்நிறுவனம்.

தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸின் கட்டைப் பை இல்லாத நபர்களை காண்பதரிது. நடுத்தர மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்கள் வாங்கிச்செல்லும் துணிகள் மட்டுமல்லாமல், அதை எடுத்து செல்லும் பை மூலமாக அவர்களின் இல்லத்தில் ஒருவராகவே மாறிவிட்டார்கள்.

90களிலிருந்து ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலை மோதுவதற்கு முக்கிய காரணம் இவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, நம்பிக்கை. தி.நகர் என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பு எண்ணில் அடங்காதது. பல ஊர்களில் இருந்து தேனீக்கள் போல மக்கள் சோறு கட்டிக்கொண்டு திருவிழா போல் இந்த கடைக்கு வந்து செல்வது கண்கொள்ளா காட்சி.

வியாபாரயுக்தியும், உழைப்பும் மற்றும் மக்களுக்கு தேவையானவைகள் நியாயமான விலையில் ஒரே இடத்தில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து சாதனை படைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த பொன்விழா ஆண்டில் பொன்னான நேரத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் மக்களுக்கு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினரான சண்முகசுந்தரம் ராஜரத்தினம், ராஜரத்தினம் சபாபதி மற்றும் குழுமத்தினர் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் இதய பூர்வமாக நன்றியை சமர்பிக்கிறார்கள்.

சரவணா ஸ்டோர்ஸ் பற்றிய வீடியோ தொகுப்பு

https://we.tl/t-lDiVWN99MV

‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸ்… ராவணனாக சயிஃப் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி, சாஹோ படங்களை அடுத்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தல் பிரபாஸ் உடன் தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கிறார்.

இதனையடுத்து ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகளையும் பார்த்தோம்.

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது.

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படதாம்.

இந்த நிலையில் பிரபாஸூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.

அந்த கேரக்டர் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய அமானுஷ்ய கதாபாத்திரம் என கூறப்படுகிறது.

ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்க ராவணன் வேடத்தில் சைப் அலிகான் நடிக்கிறார்.

இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகுகிறதாம்.

பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

தற்போது இப்பட ப்ரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பவன் கல்யாணை கவனித்த போனி கபூர் அஜித்தை கண்டுக்கலையே..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்.

இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருத்தார்.

தற்போதும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.

கொரோனா காலத்தில் வலிமை பற்றி அடிக்கடி அப்டேட் கேட்டு போனி கபூரை அஜித் ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வக்கீல் சாப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

இது நேர்கொண்ட பார்வையின் தெலுங்கு ரீமேக்காகும்.

இந்த படத்தில் அஜித் கேரக்டரில் வக்கீலாக பவன் கல்யாண் நடிக்க, அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

பவன் கல்யாணையும் அவரது ரசிகர்களையும் கவனித்த போனி கபூர் இவ்வளவு நாளாக வலிமை அப்டேட் கேட்டும் தரவில்லையே என ஆதங்கத்தில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தயாரிப்பாளர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மவுன யுத்தம், கல்யாண காலம், அவன், கலர் கனவுகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் கே.ஆர்.கண்ணன்.

இவர் நடிகர் ராமகிருஷ்ணன் இயக்கி நடித்த போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தை கடைசியாக தயாரித்திருந்தார்.

இவருக்கு தற்போது 72 வயதாகிறது.

இவர் மணப்பாக்கத்தில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பில் காலமானார்.

கொரோனாவுக்கு புதிய விதிகளுடன் அவசர சட்டம் பிறப்பிக்க அரசு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்போது ஓரிரு மாதங்களாக சில தளர்வுகள் விதிக்கப்பட்டு இந்த செப்டம்பர் மாதல் முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.

ஆனாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் தொடர் கோரிக்கைகளால் பேருந்துக்கு அனுமதியளித்தள்ளதாக முதல்வர் அறிவித்தார்.

இத்துடன் கொரோனா கட்டுப்பாடுகளை பலர் பின்பற்றாத சூழலில், விதிகளை மீறுபவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் விதிகளை கடுமையாக்க முடிவு செய்த தமிழக அரசு, தொற்று நோய் தடுப்புச் சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்து அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்துள்ளது.

இந்த அவசரச் சட்டத்தின் கீழ் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் முக கவசம் அணியாமலும் விதிகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக முக கவசம் கட்டாயம் என்பதே விதிமுறையாகும்.

இந்தச் சட்டமானது, தமிழக ஆளுநரின் ஒப்புதல் மூலம் ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows