தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஐந்து படங்கள் மட்டும் தான் இயக்கி இருக்கிறார்.. ஐந்தும் ஐந்து ரகம். சதுரங்க வேட்டை என்ற முதல் படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ஹச் வினோத்.
முதல் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற போலீஸ் அதிகாரியின் உண்மை சம்பவத்தை இயக்கியிருந்தார்.
கார்த்தி நடித்த இந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆகவே அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வினோத்.
தொடர்ந்து மூன்று அஜித் படங்களை இயக்கினார். நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு மூன்று படங்களை இயக்கினார்.
இதில் வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றாலும் துணிவு படம் வினோத்துக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
விரைவில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்க உள்ள படத்தை இயக்க ரெடியாகி வருகிறார் வினோத்.
எனவே தான் வினோத் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கமல் – வினோத் இணையும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலின் படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தை வினோத் இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.
After Kamal movie Vinoth will direct Dhanush
