ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் வந்த சிவகார்த்திகேயன்

remo sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் பலத்த எதிர்பார்ப்புடன் வெள்ளிக்கிழமை வெளியானது.

உலகம் முழுவதும் கிட்டதட்ட 1,000 திரையரங்குகளில் வெளியானது.

சென்னையில் உள்ளிட்ட சில நகரங்களில் ரஜினி, அஜித், விஜய் படம் போல் அதிகாலை 5 மணிக்கே காட்சிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருட்டு டிவிடியில் இப்படம் வெளியாவதை தடுக்க வெளிநாடுகளில் பிரீமியர் ஷோக்கள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இப்படம் உலகளவில் ரூ 8 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் இந்த வருடத்திலேயே கபாலி, தெறிக்கு பிறகு முதல் நாள் வசூலில் ரெமோ அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

கபாலி ரூ. 22 கோடியையும், தெறி ரூ. 13 கோடியையும் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரமின் இருமுகன் முதல் நாளில் ரூ 5.5 கோடியும், சூர்யாவின் 24 படம் ரூ 5 கோடி வசூல் செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post