விவாகரத்து ஆன திலீப்-காவ்யா மாதவன் இன்று திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள நடிகரான திலீப் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுவாரியை 1998ல் காதலித்து திருமணம் செய்துக் கொண்டர்.

16 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர்களின் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவன் காரணம் என கூறப்பட்டது.

இதனிடையில் நிஷால் சந்திரா என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டில் மணந்தார் நடிகை காவ்யா மாதவன்.

ஆனால் இவர் தனது கணவரை இரண்டே ஆண்டுகளில் (2011) பிரிந்தார்.

இந்நிலையில் வெவ்வேறு மண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற இவர்கள் தற்போது இணைந்து வாழ முடிவு செய்து, இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவர்களின் திருமணம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது.

விஜயகாந்துடன் ராஜ்ஜியம் தமிழ் படத்தில் நடித்தவர் திலீப்.

காசி படத்தில் விக்ரமின் தங்கையாக நடித்தவர் காவ்யா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது திலீப்புக்கு வயது 48. காவ்யாவுக்கு வயது 32 என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ‘எஸ்3’ பட ரிலீஸ் உரிமை இத்தனை கோடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் அடுத்த மாதம் டிசம்பர் 16ஆம் வெளியாக உள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானதால், படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் மட்டும் ரூ. 42 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

இது சூர்யா படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தல-தளபதி ரசிகர்களுக்கு விடிய விடிய புத்தாண்டு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாப் நடிகர்களின் சில படங்களுக்கு எப்பவும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே, ரசிகர்களுக்காக அந்தந்த நடிகர்களின் படங்களை சிறப்பு காட்சியாக சில திரையரங்குகள் திரையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ராம் சினிமாஸ் நிறுவனம் அஜித், விஜய் படங்களை புத்தாண்டு தினத்தில் திரையிட இருக்கிறார்களாம்.

விஜய்யின் துப்பாக்கி படத்தை டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 9.30 மணி காட்சியிலும், அஜித்தின் வீரம் படத்தை புத்தாண்டு தினத்தில் அதிகாலை 6 மணிக்கும் திரையிட உள்ளனர்.

இந்த காட்சிகளுக்கு முன்பதிவை டிசம்பர் 1ஆம் தேதியே திறக்கின்றனர்.

ஹ்ம்… அப்போ விடிய விடிய தல-தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்..

சமைக்க கற்றுக் கொடுத்தவரை இழந்த வருத்தத்தில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்புத் துறையை தாண்டி, பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி என பல துறைகளில் சாதித்து வருபவர் அஜித்.

மேலும் இவர் சமைக்கும் பிரியாணிக்கு திரையுலகில் பலரும் ஆசைப்படுவதுண்டு.

பெரும்பாலும் தன் படக்குழுவினருக்கு தன் கையாலேயே பிரியாணி சமைத்துக் கொடுக்கும் பழக்கம் இவரிடம் உண்டு.

இந்த சுவையான பிரியாணியை சமைக்கும் கலையை இவர் கற்றது இயக்குனர் சுபாஷ் அவர்களிடம் தானாம்.

பவித்ரா படத்தில் நடித்தபோது, சுபாஷிடம் இருந்து இதை கற்றுக் கொண்டராம்.

இந்நிலையில் சுபாஷ் நேற்று மரணமடைந்தார். இதனால் அஜித் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

திருக்குறளின் இன்பத்து பாலுக்கு இசையமைத்த தாஜ்நூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள்.

அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் தர வேண்டும் என்கிற முயற்சி சொற்ப அளவில்தான் இருக்கிறது.

அதுவும் ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு மாதிரியான இசையை தருவது பெரிய சவால்தான்.

அந்த வகையில், இன்பத்துபாலில் இருந்து ஏழு பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு நாட்டுப் புறப் பாடல் மெட்டில் இசை சேர்த்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் தாஜ்நூர்.

ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் எழுதியிருக்கும் திருக்குறள் விளக்கவுரைக்கு தாஜ்நூர் அமைத்திருக்கும் இசை, தமிழிலக்கிய உலகத்தின் பெருமைமிகு படைப்பு என்பதை பாடல்களை கேட்ட மாத்திரத்தில் ஒப்புக் கொள்ள முடியும்.

இந்த ஏழு குறள்களுக்கும், தாஜ்நூர் இசையமைக்க இன்னொரு புறம் தன் தூரிகையால் வண்ணம் சேர்த்திருக்கிறார் பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது.

‘நாட்டுக்குறள்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த திருக்குறள் பாடல்களை நேரடியாக மேடையிலேயே இசைத்து (லைவ்), ஒலிநாடாவாக வெளியிடும் விழா சென்னையில் நடைபெறவிருக்கிறது.

நவம்பர் 27 ந் தேதி மாலை 6 மணிக்கு நாரதகான சபாவில் நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சி.

இசை அரங்கேற்றம், பாடல் ஓவிய நூல் மற்றும் ஒலிப்பேழை வெளியீடு என்கிற அழுத்தமான உள்ளடங்கங்களோடு நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, நடிகரும் ஓவியருமான சிவகுமார், நீதியரசர் மகாதேவன், செல்வி பத்மா சுப்ரமணியம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர் சு.தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

சினிமா பின்னணி இசைக்கலைஞர்களும் பங்குபெறுகிறார்கள்.

விழாவில் பாடகர்கள் வேல்முருகன், அந்தோணிதாஸ், நின்சி வின்சென்ட், செல்வி கவிதா கோபி. சின்னப்பொண்ணு, மீனாட்சி இளையராஜா, பிரபு ஜினேஷ், ஆகியோர் கலந்து கொண்டு பாடவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சித் தொகுப்பு திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திரு சங்கர சரவணன். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்குறளின் முதல் அச்சுப் பிரதியின் மீள் பதிப்பும் வெளியிடப்படுகிறது.

விஜய்யை ஏன் இப்படி பண்றாங்க? ராம் சினிமாஸ்க்கு ஜிவி. பிரகாஷ் சப்போர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருநெல்வேலியில் பிரபலமான தியேட்டர் ராம் சினிமாஸ்.

இதன் தியேட்டர் நிர்வாகம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தாங்கள் வெளியிடும் படங்களை புரமோட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் அவர்கள் பதிவிட்டுள்ளதாவது….

“விஜய் படங்களை புரோமோட் செய்யும்போது ஏன் ஹேட் பண்றாங்க.? அஜித்தின் வேதாளம் படத்தையும் இதே போல புரோமோட் செய்தோம்.

சில ரசிகர்கள் எரிச்சல் செய்கிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளனர்.

அவர்களின் இந்த ட்வீட்டை ஜி.வி. பிரகாஷ் ரீட்வீட் செய்துள்ளார்.

G.V.Prakash Kumar Retweeted
Ram Muthuram Cinemas ‏@RamCinemas
Why so much of hatred when we promote Vijay movies? We did the same kind of promotion for Vedalam last year Some fans are just irritating

More Articles
Follows