மீண்டும் கபாலி-பேட்ட தயாரிப்பாளர்களுடன் ரஜினி; 100 கோடி சம்பளம்?

After Darbar Rajini likely to do films with Kabali and Petta Producerரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படம் அடுத்தாண்டு 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

தலைவர் 168வது படத்தை விஸ்வாசம் புகழ் சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினி நடித்த எந்திரன் (2010), பேட்ட (2019) ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இவை இரண்டும் வெளியாகி தமிழ் சினிமாவில் வசூல் சாதனை புரிந்தன.

சிவா படத்தை முடித்த பின்னர் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினியின் கபாலி படத்தை தயாரித்து அதை உலகமே வியக்கும் அளவுக்கு விளம்பரம் செய்திருந்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 250 கோடியில் இப்படம் உருவாகவுள்ளதாம். இதில் ரஜினி சம்பளம் மட்டும் 95-100 கோடியை தொடும் என்கிறார்கள்.

இது உண்மையானால் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயர் ரஜினிக்கு கிடைக்கும்.

After Darbar Rajini likely to do films with Kabali and Petta Producer

Overall Rating : Not available

Latest Post