தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… கடந்த 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கும் இரு துருவங்கள் இவர்கள்.
20 வருடங்களுக்கு முன்பெல்லாம் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்பதால் பலத்த போட்டி நிலவும்.
இறுதியாக ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதின.
அதன்பின்னர் இருவரும் படங்களை குறைத்துக் கொண்டதால் ஒரே நாளில் மோதல் இல்லாமல் போனது.
ஆனாலும் இவரது ரசிகர்கள் படத்தின் வெற்றி வசூலை ஒப்பிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தற்போது இவர்களது நடிப்பில் தலா 2 படங்கள் வெளியாகவுள்ளன.
காலா மற்றும் 2.0 படங்கள் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ளன. விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு படங்கள் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளன.
இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
எனவே மீண்டும் ஒரு போட்டி சூழ்நிலை உருவாகும் எனத் தெரிகிறது.
சினிமாவை தவிர்த்து தற்போது இருவரும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சியை அறிவித்துவிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்.
விரைவில் ரஜினி தன் கட்சியை அறிவிக்கவுள்ளார்.
இருவரும் தங்கள் அரசியல் பாதை வேறு வேறாக இருக்கும் என அறிவித்து விட்டதால் அரசியலிலும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ட்விட்டரில் ஒரு போட்டி தற்போது ஆரம்பித்துள்ளது.
ரஜினி டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும், கமல் டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.
ரஜினிக்கு பின்னரே கமல் ட்விட்டரில் இணைந்தார். ஆனால் அடிக்கடி நிறைய பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
இதுவரை 514 ட்வீட்டுக்களை பதிவிட்டுள்ள இவர் 25 பிரபலங்களை பாலோ செய்கிறார்.
ஆனால் ரஜினி முன்பே ட்விட்டரில் இணைந்தாலும் சில பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார்.
அதாவது இதுவரை 116 ட்வீட்டுக்களே ரஜினி பதிவிட்டுள்ளார். இவர் 24 பிரபலங்களை பின் தொடர்கிறார்.
இனி வரும் காலங்களில் இந்த போட்டியில் யார் முந்துகிறார்? என்பதை பார்ப்போம்.
After Cinema and Politics Rajini and Kamal clash in Twitter