தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் படங்கள் ரிலீஸ் என்றாலே அவரது ரசிகர்கள் திருவிழா போல் கோலாகலத்துடன் கொண்டாடுவார்கள்.
அதுவும் தீபாவளி, பண்டிகை போன்ற தினங்களில் வெளியானால் கேட்கவே வேண்டாம். டபுள் ட்ரீட் என மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பார்கள்.
இது போன்ற பண்டிகை தினங்களில் பல படங்கள் வெளியானாலும் பாட்ஷா திரைப்படம் தான் இறுதியாக பொங்கல் தினத்தில் வெளியானது. அதுபோல் முத்து படம்தான் தீபாவளி திருநாளில் வெளியானது.
அதன்பின்னர் கடந்த 23 வருடங்களாக ரஜினியின் திரைப்படங்கள் பண்டிகை தினங்களில் ரிலீஸாகவில்லை.
எனவே ரஜினி பட ரிலீஸ் தேதியை பண்டிகையாக கொண்டாடி வந்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் பாட்ஷா படத்திற்கு பிறகு அதாவது 23 வருடங்களுக்கு ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியானதை நம் தளத்தில் புதிய போஸ்டருடன் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
After Baasha movie Rajini giving Petta treat on Pongal