8 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு கிடைத்த யு/ஏ சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் விஜய் நடித்த படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அமைந்திருக்கும்.

இதனால் விஜய்க்கு பெண் ரசிகைகளும் அதிகம்.

எனவே விஜய் படமும் சென்சாரில் யு சர்ட்டிபிகேட் பெறும் வகையிலே உருவாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று இவரது மெர்சல் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

இது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இவரது படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ஆம் ஆண்டு வேட்டைக்காரன் படத்திற்கு யு/ஏ கிடைத்தது.

அதன்பின்னர் வெளியான சுறா, காவலன், வேலாயுதம்… முதல் புலி, தெறி, பைரவா வரை யு சான்றிதழ் மட்டுமே கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

After 8 years Vijay movie got UA certificate in censor

மெர்சலுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; விஜய் ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெர்சல்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளது.

இப்படம் அக். 18ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை சென்சாருக்கு அனுப்பியிருந்தனர்.

இதற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஜய் படங்கள் பெரும்பாலாவை யு சான்றிதழை பெற்றிருந்தது.

ஆனால் மெர்சல் படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு குறைவு இருக்காது என இயக்குனர் அட்லி தெரிவித்திருந்தார்.

எனவேதான் இப்படத்திற்கு யு/ஏ கிடைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த யு/ஏ எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mersal censored with UA certificate

நாளை 2.0 பட 3டி மேக்கிங் வீடியோ; ட்விட்டரில் அக்சய்குமார் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து லைக்கா தயாரித்துள்ள படம் 2.0

ஏஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இதில் வில்லனாக நடித்துள்ள அக்சய்குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

3டியில் தயாராகியுள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை நாளை அக்டோபர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மெர்சலுக்கு கோர்ட் தடை நீங்கியது; விலங்குகள் நலவாரியம் பிரச்சினை முடிந்ததா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருவழியாக விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டைட்டில் பிரச்சினை ஓய்ந்தது. மேலும் படத்தின் விளம்பரத்திற்கும் எந்தவிட தடையும் இல்லை என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் மூலமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஒரு படம் உருவாகும்போது அதில் விலங்குகளை பயன்படுத்தி படம்பிடித்தால், விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் இந்த படக்குழு அப்படி மருத்துவர்களை வைத்து படம்பிடிக்கவில்லை எனவும் அதனால் அவர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கூறப்பட்டது.

இதனால் படத்தை சென்சாருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

இதனால் தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படுமா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இதுகுறித்து படத்தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் இல்லாமல் சூட்டிங் நடந்தது என்பது தவறான செய்தி. விலங்குகளின் காட்சிகளின் போது கால்நடை மருத்துவர்கள் துணையோடுதான் படப்பிடிப்பு நடந்தது.

விலங்குகள் நல வாரியமும் அதற்கான அனுமதி சான்றிதழை வழங்கிவிட்டது.

எனவே படத்தை சென்சாருக்கு அனுப்பியுள்ளோம்.

மேலும் தடைகள் பல தாண்டி நிச்சயம் தீபாவளிக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல் ரிலீஸ் ஆகும்” என தெரிவித்தனர்.

Animal Welfare board certification for Mersal movie is cleared

மெர்சல் டைட்டில் தடையை நீக்கி வழக்கை தள்ளுபடி செய்தது கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் வருகிற அக். 18ஆம் தே தீபாவளியன்று வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், 2014-ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் `மெர்சல் ஆயிட்டேன்’ என்ற தலைப்பைப் பதிவு செய்ததால் `மெர்சல்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து சென்னை ஐகோர்ட் மெர்சல் என்ற பெயரில் படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் அடுத்த தீர்ப்பு வரும் வரை இதுகுறித்த விளம்பரங்களை வெளியிடக் கூடாது என குறிப்பிட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மெர்சல்’ படத்துக்கான இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டு, ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

 

புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை; விஷாலின் முடிவுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் Local Body Entertainment Tax ( LBET) யை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களின் நலனுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது என்பதை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கோடாலி வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

1.) Local Body Entertainment Taxயை GST மேல் திணிக்கக் கூடாது.
2.) வெவ்வேறு மொழி படங்களுக்கு வெவ்வேறு ரேட் இருக்கக்கூடாது. என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள இந்த விஷயத்துக்கு தங்களுடைய ஆதரவை இந்திய தயாரிப்பாளர் கில்ட் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வருகிற அக்டோபர் 3 – 2017 அன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்த வேலை நிறுத்தத்துக்கு இந்திய தயாரிப்பாளர் கில்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த இரட்டை வரி, சினிமாவை ரசிக்க திரையரங்குக்கு வரும் இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய பளுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு ஒப்புதலும் வழங்கி உள்ளது.

ஆதரவு அளித்த இந்திய தயாரிப்பாளர் கில்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எப்போதும் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே அமைப்பு இந்திய தயாரிப்பாளர் கில்ட்.

அவர்களோடு எப்போதும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Telugu Producer Council supports Vishal in LBET issue against TN Government

More Articles
Follows