அன்று கமல்; இன்று ஐஸ்வர்யாராய்; அரசியல் வலையில் சினிமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2013ஆம் பெரும் எதிர்பார்ப்பில் உருவான கமலின் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு விஸ்வரூப பிரச்சினை எழுந்தது.

இஸ்லாமிய சமூகத்தை இழிவு படுத்தும் காட்சிகள் படத்தில் உள்ளதாக பிரச்சினை உருவாக படம் தமிழகத்தில் வெளியாகாமல் அண்டை மாநிலங்களில் வெளியானது.

இதனால் நாட்டை விட்டு வெளியேற தயார் என கமல் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், (தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட இது தொடர்பாக அப்போது பேட்டியளித்திருந்தார்) சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிய பின் படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆனது.

தற்போது இதே நிலைமை கரண் ஜோஹரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‘ஏ தில் ஹே முஷ்கில்’ என்ற படத்திற்கு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் நடிகர் ஒருவர் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு பிரச்சினை உருவாகியுள்ளது.

இப்படம் வெளியானால், மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா அமைப்பு திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றனர்.

இதனால் மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையில் படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இனி தனது படங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று தயாரிப்பாளர் கூறியதன் பின்னர் படம் வெளியாக தயாராகிவிட்டது.

ஒரு திரைப்படத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கலாமா? என்பதை முடிவு செய்ய சென்சார் கமிட்டி உள்ளது.

ஆனால் இது போன்ற சில அமைப்புகளால் சினிமாவிற்கு மேலும் பிரச்சினைகள் வலுத்து வருகிறது.

மேலும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள். இங்குள்ளவர்கள் அங்கே விளையாட செல்கிறார்கள்.

ஆனால், மொழி, மதம், இனம், மாநிலம் பார்க்காத சினிமாவில் தற்போது இதுபோன்ற பிரச்சினைகள் எழுவதன் காரணமாக இயக்குனரின் படைப்பு சுதந்திரம் பறிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்பது மட்டும் நிச்சயமே.

‘விழாவுக்கு வராத நயன்தாராவுக்கு சம்பளம் கட்..’ – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் இணைந்து நடித்துள்ள படம் காஷ்மோரா.

கோகுல் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக். 28ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் கார்த்தி, விவேக், கோகுல், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது விவேக் பேசும்போது….

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி வரவில்லை என்றால் இந்த காஷ்மோரா படத்தை இந்தியாவே கொண்டாடும். அந்த அளவுக்கு இருக்கும்.

ஆனால் இப்போது இந்த படம் வருவதால் நிச்சயம் பாகுபலியுடன் ஒப்பீடு இருக்கும். அதுவேண்டாம். இப்படம் ஒரு ஜாலியான படம்.

நயன்தாராவுடன் கள்வனின் காதலி படத்தின் நடித்தேன். அதன் பிறகு அவருடன் நடிக்கும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்தும், அவருடன் நடிக்கும் சீனே படத்தில் இல்லை.

இப்போது நயன்தாரா இங்கு வரவில்லை. பொதுவாக சில நடிகைகளும் வருவதில்லை.

அதற்கு அவர்கள் புத்திசாலித்தனமாக சொல்லும் காரணம் என்னவென்றால், நான் வந்தால் சென்டிமெண்ட்டாக ஒர்க் அவுட் ஆகாது என்கின்றனர்.

அப்படி சொல்லும் அவர்கள் படத்தின் சம்பளத்தின் கடைசி தொகையை (லாஸ்ட் பேமண்ட்) வாங்காமல் இருப்பார்களா? என்று பேசினார் விவேக்.

சிறையில் அஜித் ரசிகர்கள்; தல எப்போ விடுதலை செய்வார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு (2015) அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.

ஆனால், இந்தாண்டு முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில், அஜித் படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

தற்போது நடித்து வரும் தல 57 படத்தின் பர்ஸ்ட் லுக்கோ டீசரோ எதுவும் வெளியாகவில்லை.

இதனால் வருத்தம் அடைந்த மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா..?

தல படம் வராத தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளி.

அஜித் படம் வராத திரையரங்கு எங்களுக்கு சிறை அரங்கு. தல படம் வரும் நாளே எங்களுக்கு விடுதலை தீபாவளி.. இதுபோன்ற போஸ்டர்கள் எல்லாம் அடித்து ஒட்டியுள்ளனர்.

ஹ்ம்…. சிறையில் இருக்கும் இவர்களை எப்போது அஜித் விடுதலை செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

தனுஷுடன் இணையும் ‘பிரேமம்’ படத்தின் அடுத்த நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இதில் த்ரிஷாவுடன் பிரேமம் படப்புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரேமம் படத்தின் மற்றொரு நாயகியான மடோனா செபாஸ்டியன் தனுஷ் இயக்கி, தயாரித்து நடிக்கும் பவர் பாண்டி நடிக்கவிருக்கிறாராம்.

இதில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

தனுஷின் இயக்கத்தை பார்த்து செல்வராகவன் பாராட்டியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஜய் சொன்னப்படியே விக்ரமுக்கு நடந்தது; கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது முதல் படமான ‘சேது’வில் தேசிய விருதை பெற்றவர் இயக்குனர் பாலா.

இதில் நடித்த விக்ரமுக்கு கிடைக்கவில்லை.

எனவே அடுத்து விக்ரம், சூர்யாவை வைத்து இயக்கிய பிதாமகனில் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் ஆனதால் விக்ரமுடைய ரசிகர்கள் #13YearsOfPITHAMAGAN என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

இப்படத்தை அப்போது பார்த்த நடிகர் விஜய், நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் விக்ரமிடம் சொன்னாராம்.

அவர் சொன்னப்படியே நடந்ததால், இருவரது ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

‘சிவகார்த்திகேயனை பார்த்து கண் சிமிட்டும் தேவதை..’ – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் தமிழகம் தாண்டியும் வசூலை வாரி குவித்து வருகிறது.

கேரளாவிலும் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வெற்றிக் குறித்து நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

திறமை, உழைப்பு, சரியான வழிகாட்டிகள் மற்றும் அதிர்ஷ்ட தேவதையின் கண்சிமிட்டல்! இவைகளின் காம்போ சிவகார்த்திகேயன்! என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரெமோவின் அக்கா நான்தான் சுமோ என்று விவேக் பதிவிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows