அடையார் கேன்சர் ஹாஸ்பிட்டல் தலைவி மருத்துவ தேவதை சாந்தா மரணம்.!

Dr V Santhaசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகியுமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93.

65 ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சைக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறார்.

மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

தனக்கென தனியாக சமைக்காமல் அவர்களுக்கு சமைக்கப்படும் உணவைத் தான் டாக்டர் சாந்தாவும் உண்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் நோயாளிகளுக்காக வாழ்ந்து தன் வாழ்வுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவரின் மறைவுக்கு பிரமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

*சாந்தா பற்றிய தகவல்கள் இதோ…*

மெட்ராஸ்ல் (1927) பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர் ஆவார்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் அவர்கள் சாந்தாவின் தாய்மாமன்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் 1955-ல் எம்.டி. பட்டம் பெற்றார்.

நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், எம்.டி. பட்டம் பெற்ற உடனேயே மருத்துவர் பணியில் இணைந்தார்.

இவரின் மருத்துவ சேவையால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பல சாதனைகளை இந்திய வரலாற்றில் படைத்துள்ளது.

தனக்கு வழங்கப்படும் விருதுகள் மூலம் கிடைக்கும் தொகையை கூட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்து வந்தார்.

புற்றுநோய்காக உலகில் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக இந்த மருத்துவமனையில் அறிமுகம் செய்வார்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

புற்றுநோய் தொடர்பாக சர்வதேச இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

Adyar Cancer Institute chair person Dr V Santha passes away due to illness

Overall Rating : Not available

Latest Post