தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மோசன் கேப்சரிங் முறையில் தயாரான இப்படம் கடந்த 2014 ஆண்டு வெளியானது.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படம் தொடர்பாக லதா ரஜினி மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
தங்களுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு, ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து கோச்சடையான் படத்தை வெளியிட்டனர்.
எனவே தங்கள் நிறுவனத்தை ஏமாற்றிய லதா ரஜினி மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
இம்மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட், இன்னும் 4 வாரங்களில் லதா ரஜினிகாந்த் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
