தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தில் அவரது நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர்.
வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து மாடர்ன் பெண்ணாக வளர்ந்த இவர் ‘விருமன்’ படத்தில் அசல் கிராமத்து பெண்ணாகவே நடித்து பலரின் பாராட்டையும் பெற்று இருந்தார்.
மேலும் அந்த படத்தில் யுவன் இசையில் ஒரு பாடலையும் பாடியிருந்தார்.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் ‘பொன்னின் செல்வன்’ படத்தில் வரும் ஐஸ்வர்யா ராய் & த்ரிஷாவை போல அலங்காரம் செய்து ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார் அதிதி.
அந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோ சூட் நவராத்திரிக்காக எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் இந்த அதிதி ஷங்கர்.
